வியாழன், 7 நவம்பர், 2013

என்னப்பா நடக்குது இந்தியாவில் - பகுதி 3


செய்தி: ​மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்கா, ரசியா, ஐரோப்பியயூனியனுக்கு அப்புறம் நான்காவதாக இந்தியா இந்த வரிசையில் இணைந்தது, சீனாவையும், ஜப்பானையும் இந்த போட்டியில் வென்று.  மேலும் இது மிக குறைந்த செலவில் ஏவப்பட்டது. ​


குறிஞ்சி: செவ்வாய்க்கே விண்கலத்தினை ஏவும் ஆற்றல் பெற்றவர்கள் நாம், ஆனால் குப்பை அள்ளவும், மளிகை கடைகள் நடத்தவும், காப்பீடு போன்ற இன்ன பிற துறைகளில் வெளிநாட்டவர் வந்துதான் நம்மை முன்னேற்ற வேண்டும் என்பது ஏதோ இடர்வது போன்று உள்ளது.   என்னைக் கேட்டால் அங்கு மனிதர் தோன்றும் முன்பே நம்மில் நாகரீகம் தோன்றியது, அப்புறம் எதற்கு அவர்கள் என்றால்; அரசியல்வாதிகள் & இங்குள்ள பிஸினஸ்மேன்களின் வாழ்வும் மேம்படவே நம்மை விற்கின்றனர் நமக்கு தெரியாமல்...தாராளமயம் என்ற பெயரில்.. நேரு அவர்களிடத்தில் நான் வேறுபடுவது உண்டு, ஆயினும் என்னைக் கேட்டால் அவரது சோசலிச பொருளாதாரத்தினை நாம் செப்பனிட்டிருக்க வேண்டுமே ஒழிய அதனை குழிதோண்டி புதைத்திருக்ககூடாது.

செய்தி: தீபாவளி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. 
 

குறிஞ்சி: இங்குதான் சில பகுத்தறிவு பகலவர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை, ஆனால் உலகம் முழுவது கொண்டாடுகிறார்கள் ம்ம்ம்ம். அவர்களுக்கு கிருஷ்ண பரமாத்மா மட்டும் ஆவதில்லை என்னத்த சொல்ல நாராயணா...பீரியா விடு மாமூ உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்...

மதசார்பின்மை என்பது எல்லா மதத்தினையும் சமமாக பாவிப்பது ஆகும், கஞ்சி குடிப்பேன், கேக் வெட்டுவேன் ஆனால் பலகாரம் சாப்பிடமாட்டேன், வெடி போடமாட்டேன் என்பது என்ன நியாயம். அதுபோல் மதநம்பிக்கைகளில் நன்கு சிந்தனை கொண்ட ஆத்திகவாதி என்பவர் எல்லா மதநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு மாற்று மத நம்பிக்கைகளையும் ஆதரிக்கவேண்டும்..
செய்தி: சென்னையில் மெட்ரோ சோதனை ஒட்டம்.

1276 ​பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம், ஆயினும் 176பேர்தான் உட்காரமுடியுமாம். GPRS எனும் வசதியினால் அடுத்து வரும் நிறுத்தங்களை அறிவிக்கும் வசதியும், முழுவதும்  தானாகவே திறந்து மூடும் தானியங்கி வசதி கொண்ட பெட்டிகளும் உள்ளதாம்.


குறிஞ்சி: ஆஹா வெளிநாட்டில் உள்ளதை போன்று எம் தாய்தமிழ் திருநாட்டிலும் மெட்ரோ ரயில், ஆயினும் என் சகோதரர்கள் அங்கு எச்சில் துப்பாமல் இருக்க வேண்டுமே,  நடக்குமா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக