ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தக்கனூன்டு கைக்கடிகாரத்திற்கு இவ்வளவா!!!

அதீத பொருள் செலவில் நடக்கும் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ராணுவ மேம்பாட்டுக்காகவோ (உதாரணம்: இன்டர்நெட் - அமெரிக்கராணுவத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டது, நைட் விஷன் காமெரா - இதுவும் அமெரிக்க ராணுவத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டதே) அல்லது ஏதேனும் பெரும் பணக்காரர்களின் பித்துக்குளி தனத்திற்காகவோ நடப்பதாக இருக்கும், சாமன்யன் அதிலிருந்து உடனே நேரடியாக பலன் எதுவும் பெறமுடியாது, ஆனால் நாளடைவில் அது அவனை வந்து சேரும் என்பதால் பிரான்டுகளை நாம் அவ்வளவு எளிதில் ஒதுக்கித்தள்ளமுடியாது.

குறிஞ்சியில் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளைப் பற்றியே எழுத விரும்புகிறோம், எனினும் பிரான்ட்க்கு சந்தையில் இருக்கும் அதீத அபிமானமும் எங்களை அதை பற்றியும் எழுதினால் என்ன என்று எண்ண வைத்தது. அதுகுறித்து நண்பரிடத்தில் பேசியபொழுது அவர் சில வளைத்தளங்களையும், பத்திரிக்கைகளையும் என்னிடத்தில் கொடுத்து படிக்கச் சொன்னார்.
ஆம் உண்மையில் பணக்காரர்களின் உலகம் வேறுபட்டது என்பதனை அதைப் படிக்க படிக்க உணர்ந்தேன் அவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆராதனை செய்கிறார்கள், நொடி என்று சொல்லியதால் முதலில் கடிகாரச் சந்தையில் உள்ள புகழ் பெற்ற கைக்கடிகாரமான கார்ல்-ப்-புச்சரேர் பற்றி சில மேம்போக்கான தகவல்களை பற்றி முதலில் பார்ப்போம், கடவுளின் சித்தமானால் அது குறித்து விரிவாக பின்பு எழுதுவோம்.


பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இன்றளவும் குடும்பம் சார்ந்த அமைப்பாகவே இருக்கும், அதற்கு கார்ல்-ப்-புச்சரேர்ரும் விதிவிலக்கல்ல, 1888ல் கார்ல்-ப்-புச்ச ரேரால் சுவிட்சர்லாந்தில் லுக்கரேன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது, இன்றளவும் அது அவர்களின் குடும்பத்தினரால் நிறுவகிப்படுகின்றது. 1919ல் செ ர்மனியில் நடந்த கலைக்கண்காட்சியில் வைத்த மகளிர்க்கென பிரத்தியேக கைக்கடிகாரம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த காலகட்டத்தில் இவரே கைக்கடிகாரத்தில் பெரும் கவனத்தினை செலுத்தி அதற்கான சந்தையை உருவாக்கியவர்களுள் ஒருவரானார்.

​மேலும் இவர்கள் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற குரோனோமீட்டர் (COSC aka C.O.S.C. is Contrôle Officiel Suisse des Chronomètres)சான்றிதழையும் பெற்றவர்கள்,  அதாங்க  தங்கத்துக்கு ஹார்ல்மார்க், 916 எனும் சான்றிதழ் போல.

​மேலும் இவர்கள் வைரம் மற்றும்  தங்கத்தினையும் வி​ற்பனை செய்யும் கடைகளையும் வைத்திருக்கிறார்கள்.

1971​ல் டைவர்ஸ் அதாங்க நீரில் குதிப்பார்களே அவர்களுக்காக கண்டுபிடித்த உட்புறமாக சுற்றும் வட்டம் கொண்ட கைக்கடிகாரம் மிகவும் சிலாகிக்கப்பட்டது.

1994ல் ஆர்க்கிமெடிஸ் நிரந்தர காலகுறிப்பேட்டினை பயன்படுத்தி கண்டுபிடித்த இய்ந்திரவியலானது கைக்கடிகாரத்தில் முழு கால அட்டவனையையும்  நம் கையில் கொண்டுவந்தது.

இந்திய சந்தையில் இதன் மதிப்பு லட்சங்களில்தான். இவர்களின் மென்ரோ வாட்ச் சுமார் 15லட்சத்து50ஆயிரம்தாங்க,  அட எங்க போறீங்க வாங்க கிளம்பிட்டிங்களா  அதுக்குள்ளே..


அ​தென்னங்க  ஆர்க்கிமெடிஸ் நிரந்தர காலக்கு​றிப்பேடு?

​நீங்க பிறந்த  தேதி, மாதம், வருடம் சொன்னாக்கா கிழமையை  சரியாக கணக்கீடும் க​ணக்குதான், ப்பூ இது என்ன மேட்டரு அப்படிங்கிறீங்களா,  சரி அப்ப நீங்களே ஒரு  நுண்ணிய இயந்திரத்தில் அதை வடிவமைக்க முயற்சிக்கலாமே..  பெரிய விசயமில்லைதான் ஆயினும் அவர்களின் முயற்சி சாதாரணமானது அல்ல நண்பர்களே. அவர்கள்  அந்த கணக்கினை இயந்திரவியலில் அதாங்க கைக்கடிகாரத்தினை கழறறி பார்த்தால் பல்சக்கரமாக தெரியுமில்லையா அதனுள்ளே கொண்டு வந்தார்கள்.



பின்வரும் சூத்திரம் -  செல்லர் விதி (Zeller) ஆகும், இது நீங்கள் எந்த தேதியின் கிழமையையும் கணக்கிட உதவும்:

F = k + [(13 x M-1) / 5] + D + [D / 4] + [C / 4] - 2 x C

K மாத​த்தின் நாளாக கொள்வோம். இதில் உதாரணமாக ஜனவரி 27, 2024 பயன்படுத்தலாம். 
எ​னில் தேதி, K = 27.

M மாத​த்தின் எண்  ஆகும், மாதங்கள் கணக்கிடும்பொழுது சிறப்பு கவனம் வேண்டும்,  ஏனெனில் மார்ச் 1 இங்கு ஆண்டின் முதல் நாளாக எடுத்துக்கொள்ள வேண்டும், ஏப்ரல் 2ம் மாதமாகவும், மே 3ம் மாதமாகவும்  தொடர்ந்தால் ஜனவரி 11வது மாதமாகவும், பிப்ரவரி 12வது மாதமாகவும் வரும்.   இது என்ன புது குழப்பம் என்று பார்க்கிறீர்களா (லீப் வருடத்தின் போது பிப்ரவரியின் கடைசி நாள் 29 சாதாரண வருடத்தில் 28 ஆகும் இந்த சூத்திரம் இந்த குழப்பத்தினை எளிமையாக்குறது)   

​மற்றுமொரு சின்ன குறிப்பு  இந்த ஜனவரி, பிப்ரவரியும் முந்தைய  ஆண்டின் 11வது மற்றும் 12வது மாதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். புரியவில்லையா  கவலை வேண்டாம்  தொடர்ந்து படியுங்கள்.

​நமது எடுத்துக்காட்டின் படி மாதம் ஜனவரி  ஆகவே  M= 11.

D ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களை குறிப்பதாக உள்ளது. மாத எண்  11 ஏனெனில்,  D-யினை நமது எடுத்துக்காட்டின்  தேதியின் படி  23 ஆக கொள்ளவேண்டும், நாம் 2024 முதல் ஒரு நாள் பயன்படுத்தினால் கூட.

C நூற்றாண்டி​னை குறிக்கிறது:  நமது எடுத்துக்காட்டின்படி, C= 20.

இப்போது சூத்திரத்தில்  நம் எடுத்துக்காட்டு எண்களை உபயோகிப்போம் நாம்:
F = k + [(13 x M-1) / 5] + D + [D / 4] + [C / 4] - 2 x C
= 27 + [(13 x 11-1) / 5] + 23 + [23/​​4] + [20/4] - 2 x 20
= 27 + [28.4] + 23 + [5.75] + [5] - 40
[தசம புள்ளக்கு பின்னர் வரும் ஒவ்வொரு எண்களயும் விட்டுவிடுவோம்]
= 27 + 28 + 23 + 5 + 5 - 40 = 48.

​நமக்கு F கிடைத்தபிறகு  அதை 7ஆல் வகுக்கவேண்டும் எஞ்சிய எண்க​ளை பின்வருமாறு குறிக்கவேண்டும்,  ஞாயிறு எனில் 0,  திங்கள் எனில் 1.... (எஞ்சியது எதிர்மறை எண் என்றால், அதனோடு 7 சேர்க்க).

​நமக்கு கிடைத்தது  48/7 = 6,  எஞ்சியது  6, அதாவது, ஜனவரி 27,  2024 சனிக்கிழமை இருக்கும். 

ஆதாரங்கள்:  கார்ல்-ப்-புச்சரேர், ஆர்க்கிமெடிஸ் லேப்

பச்சபுள்ள மன்னாரு:  இது போல அடிக்கடி எழுதுங்க பாஸ்,  அதை விட்டுட்டு நமக்கு எதுக்கு அரசியல் மோடினு பொல்லாத பொல்லாப்பு,  ஏதோ  தோனுச்சு சொல்லனும்னு சொல்லிப்புட்டேன்.  

​குறிஞ்சி:  பொல்லாத உலகம் பொல்லாங்கு பேசிக்கொண்டேயிருக்கும்  அதற்காக நாம் உண்மையை எழுதாமல் இருக்க முடியாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக