அவனுக்கென்னப்பா வெளிநாட்டு சம்பாத்தியம் இப்படின்னு நம்மள்ள பல பேரு வெளிநாட்டில் சம்பாதிக்கும் நண்பர்களை பார்த்து பொருமவதுண்டு. அதுபோல் இந்தியாவைப் பார்த்து மற்ற நாடுகளும் பொருமுகிறது. ஆம் கடல் கடந்து செல்லும் இந்தியர்கள் தங்களது குடும்பத்தினருக்காக மாதந்தோறும் அனுப்பும்தொகை மற்ற நாடுகளை விட அதிகமாம்.
![]() |
| செய்யும் தொழிலே தெய்வம்!! |
இந்த வருடத்தில் மட்டும் அதாங்க 2013 கடைசியில் இந்தியர்கள் அனுப்பிய தொகை ஏராத்தாள 71பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என ஒர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது. இந்திய தொகையில் சுமார் 4 லட்சம் கோடி வருகிறது. 71 பில்லியன் அமெரிக்க டாலர் * 62ரூ = 440,200,000,000. உங்களுக்கு புரியும் வகையில் சொன்னால் 2G ஸ்பெக்ட்ரம் இழப்பான 176000கோடி 4 மடங்கு அதிகம் போதுமா விளக்கம்.
இது இந்திய ஐடி துறையினர் இந்தியாவுக்கு கொண்டு வரும் அன்னிய
செலவானியை விட அதிகமாம்.
மேலும் இந்த தொகையில் பெரும் பங்கு அமெரிக்கா, ஐரோப்பா போன்ற
நாடுகளில் வசிக்கும் ஐடி போன்ற தொழில்நுட்ப தொழிலாளர்கள் அனுப்புவதை விட மத்திய
கிழக்கு நாடுகளாம் அரபுதேசம், மலேசியா போன்றவற்றில் வேலை பார்க்கும் அடிமட்ட கூலி
தொழிலாளி அனுப்புவது பலமடங்கு அதிகமாம். ஆனால் ஏர்போர்ட்டிலே நான்
பார்ப்பது எப்போதும் கூலி தொழிலாளிகளையே நோண்டி கிழங்கு இல்லை இல்லை பீர்
பாட்டில்களை பிடிங்கி கொள்ள வல்லூறு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்.
இன்னொரு கூட்டம் சொல்லுகிறது நீங்கள் பாட்டு அன்னிய நாட்டுக்கு
அடிமை சேவகம் செய்வதினால் இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்யும் துரோகம் என்று, அதையெல்லாம்
ஐஐடிக்களில் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு செல்லும் நபர்களிடம் கேளுங்கள். நாங்கள்
வெறும் கூலிகளப்பா...
ஆயினும் இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் வெளிநாட்டு
ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் ஏராளம், தன்
குடும்பத்தினர் நன்கு ஆரோக்கியமாக சாப்பிட கவனிக்கவும் ஆடம்பரமாக இல்லை நண்பர்களே,
தங்களது ஆரோக்கியத்தினை கெடுத்துக்கொண்டு வாழ்கின்றனர; எல்லைப்புறத்தில் காவல்
இருக்கும் ராணுவவீரர்களுக்கு எவ்வளவு மன அழுத்தும் உண்டோ அதே அளவு மன அழுத்தம்
இவர்களுக்கும் உண்டு. இனி மேலாவது அவனுக்கென்னப்பா என வெளிநாட்டில் வசிக்கும்
ஊழியர்களை பார்த்து பொருமாதீர்கள். அவர்களும் இந்தியாவின் பொருளாதாரத்தினை
கட்டமைக்கும் வீரர்களே.
வெளிநாட்டில் இந்திய வியாபாரிகளுக்கு பிரச்சினையெனில் நேரடியாகவே இந்திய அரசாங்கம் தலையிட்டு வியாபாரிகளின் பிரச்சினையை
தீர்த்து வைக்கின்றது, ஆனால் வெளிநாட்டு தொழிலாளிகளின்
பிரச்சினையில் இந்திய அரசாங்கம் இன்னும் பாராமுகமாகவே இருக்கிறது... அவர்களும்
இந்தியர்களே...



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக