செவ்வாய், 8 அக்டோபர், 2013

என்னப்பா நடக்குது இந்தியாவில்.. பகுதி - 2

"ஓ"​ போடு - NOTA -- None of the above.

49ஓ க்கு ஒரு "ஓ"​ போடுங்கள், மக்களே விரைவில் உங்களுக்கு வேட்பாளரை நிராகரிக்கும் வசதி தேர்தல் களத்தில், முன்பு இந்த வசதி வாக்களிக்கும் கருவியில் இல்லை, இதற்க்காக நீங்கள் தனியாக விண்ணப்பத்தை வாங்கி நிராகரிக்கவேண்டும், இது ரகசியமானது அல்ல என்பதினால் வரவேற்பு பெறவில்லை. ஆயினும் இந்த வசதியை பெற்று தர சட்டப் போராட்டம் மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு மீண்டும் ஒர் "ஓ"​ போடுவோம்...

                      

லாலுவின் பதவி பறிப்புக்கு பின்னர், அகில இந்திய அளவில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சி எம்பி, எம்ல்எக்கும் எதிராக உள்ள கிரிமினல் வழக்​குகள் சதவீத அடிப்படையில் ஒர் பார்வை..

.                                   


​மோடி சமீபத்தில் கழிவறையை பற்றி பேசினார்,  இதை காரணத்திற்காக முன்பு செயராம்ரமேசை பின்னி எடுத்த முகப்பக்க புரட்சியாளர்கள் அடக்கி வாசிப்பது ஏனோ? 

 


இ​ந்திய அரசாங்கம்  மாநிலங்களுக்கு பின்வரும் புள்ளிவிவர அடிப்படையிலே நிதி வழங்குவார்களாம், இதன் அடிப்படையில் பார்த்தால் வளர்ந்த மாநிலமான  தமிழகத்திற்கு வழங்கும் நிதியில் பெருமளவு வெட்டு விழுமாம்?!?! , அதனால என்னப்பா நமக்குதான் நம்ம குடிமக்கள் இருக்காங்களா, இரட்டிப்பு ஆக்கிடமாட்டங்களா தமிழக அரசின் வருமானத்தை பீர்-ஆ வீடு மாமு

 
  
இ​ந்தியர்கள்தான் அதிகமாக வளர்கிறார்களாம் பணக்காரர்களாக, இந்தியா இரண்டாம் இடத்தில்பா பாருங்க மகாஜனங்களே நமது அரசாங்கம் யாருக்காக உழைக்கிறது எனப்புரிகிறதா...

 

 ​மனித முதலீடு புள்ளி அடிப்படையில் 78 இடத்திலாம்பா பார்த்து சூதனமா இருங்கப்ப்பு

 
  
​அப்புறம் நான் உத்தரவு வாங்கிக்கிறேன் நண்பர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக