வியாழன், 3 அக்டோபர், 2013

மோடி டாடாவுக்கு சலுகை வழங்கினார் என்ற குற்றசாட்டுக்கு குறிஞ்சியின் பதில்:


சென்னையிலாவது விடுதலைக்கு முன்பிருந்தே டிவிஎஸ், ரானே போன்ற புகழ்பெற்ற  துணை நிறுவனங்கள் இருந்தது அதனாலும் துறைமுக வசதியினாலுமே ஹுன்டாய்க்களும் போர்டுக்களும் சென்னைக்கு வந்ததே தவிர இந்த அம்மையாருக்கும் தாத்தாவுக்குமானது அல்ல அதனை கொண்டுவந்த பெருமை..

டாடா நேனோ கார்  தொழிற்சாலைக்குஆயிரம் கோடி சலுகை காட்டினார் என்று குற்றம்சாட்டும் நண்பர்களுக்கு அந்த டாடா நேனோ கார் தொழிற்சாலை வருவதற்க்கு முன்பு குஜராத்தில் வாகன உற்பத்தி என்பதற்கான தடயமே இல்லை என்பது யாருக்காவது தெரியுமா.

டாடா நேனோ முதலில் பெங்களூருக்கோ, புனாவோக்கோ அல்லது சென்னைக்கோ போகும் சூழ்நிலையில் ஆசை வார்த்தை கூறி மோடி குஜராத்துக்கு கொண்டு சென்றார். அதனால் அது சம்பந்தமான துணை நிறுவனங்களும் அங்கு சென்றது. அதனை காரணம் காட்டியே மாருதியின் புது உற்பத்திசாலையும், பிரெஞ்சுவின் கார் நிறுவனமான பியூகெட் சிட்ரானும், போர்டும் அங்கு சென்றுள்ளது. அது சம்பந்தமாக குறிஞ்சியில்  ஏற்கனவே வந்துள்ள மற்றொரு கட்டுரையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்...





​முன்பெல்லாம் 5000கோடியில் பெட்ரோல் சம்ப்ந்தபட்ட நிறுவனங்களே குஜராத்தில் இருக்கும், அப்பொழுது சொல்வார்கள் அந்த பெட்ரோல் நிறுவனங்களில் சுமார் 1000 பேரையே வேலைக்கு வைத்துக்கொள்ளமுடியும். ஆனால் சென்னை மாதிரியான நகரங்களில் இருக்கும் கார் உற்பத்திசாலைகளில் குறைந்தபட்சம் 5000பேரை வேலைக்கு வைக்கமுடியும், அதனால் நாம்தான் டாப் என்பார்கள் இப்பொழுது பேச்சு வேற மாதிரியல்லவா இருக்கு.. நான் கேட்கிறேன் போர்ட்டுக்கும் ஹீண்டாய்க்கும் தமிழக அரசு சலுகை விலையில் மின்சாரம் வழங்கவில்லையா, அப்ப நம்ம வரி எங்கயா போகுது... ​மோடி மேல் மட்டும் நீங்கள் குற்றம்சாட்டுவது ஏனோ...

இப்ப எல்லாம் எமக்கு மோடியை பற்றி எழுதி எழுதி அலுத்துவிட்டது, ஆயினும் நீங்கள் காமாலைக் கண்ணோடு மோடியை மட்டும் பார்க்காமல் இனிமேலாவது எல்லா அரசியல்  தலைவர்களையும் பாருங்கள்; நாங்களும் அறிவியல் கட்டுரை எழுதப் போகிறோம் அரசியல் கட்டுரைக்கு விடுமுறைவிட்டு...

​மேலும் ஹிந்து சொன்னாத்தான் சில பேர் நம்புவேன் என்கிறார்கள் அவர்களுக்காக இதோ ஹிந்து ஆங்கில பத்திரிக்கையில் இது சம்பந்தமாக வந்த செய்தி.

​நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் நாங்கள் மோடியின் PROக்கள் அல்ல, ஆயினும் உங்களது விமர்சனம் நேர்மையாக இருக்கும்பட்சத்தில் நாங்கள் எங்கள் வேலையே பார்த்துக்கொண்டு போய் இருப்போம் ஆனால் நீங்கள்  ஆளும் அரசின் கைக்கூலியாக இருந்தால் அதனை தோல் உரித்து காட்டுவோம்....

குறிஞ்சியில் எழுதுபவர்கள் யாரும் தொழில்முறை பத்திரிக்கையாளர்களோ அல்லது பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திலோ மேலும் எந்தவிதமான லாப நட்ட நோக்கமின்றி, எங்களுக்கு தெரிந்ததை சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள இந்த தளத்தினை உபயோகிக்கிறோம். அதனால்தான் எங்களை பற்றிய அடையாளங்களை மறைத்துவிட்டு நாங்கள் எழுதுகின்றோம். சில நண்பர்கள் இதன் பின்னால் யார் உள்ளனர் என அறிய ஆவலாக உள்ளனர் எனப் புரிந்தாலும் தயவுசெய்து இப்பொழுதைக்கு எங்கள் அடையாளங்களை மூகமூடியோடே பாருங்கள். கடவுளின் சித்தம் செயமானால் நாம் நேரே சந்திப்போம் களத்தில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக