கடவுளே
ஆனாலும் விமர்சனங்களை எதிர்கொண்டுதான்
ஆக வேண்டும்; கிரிக்கெட்டின் கடவுளான நீரும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பது உமக்கு
நன்கு தெரியும்.
ஆதலால் விமர்சனங்களை நீர்
களத்திலே எதிர்கொள்கிறாய் மேடையில் அல்ல என்பது புரிகிறது; நீர் சகாப்தாம்தான்
கிரிக்கெட்டின் பார்வையில் மட்டுமல்ல சாமான்யனின் பார்வையிலும்.
ஆயிரம் பேதங்கள் எனக்கு
உண்டு உம்மிடத்தில் ஆயினும் உமது அர்ப்பணிப்பு
உணர்வும், அடக்கமும் என்றுமே என்னை உம்மை அண்ணாந்து பார்க்க
வைக்கிறது.
நீர் களத்தினை விட்டு
நீங்கி சென்றாலும் உமது வீச்சின் வீரியம் நிலைத்து நிற்கும்; அதனை மறக்கவோ மறைக்கவோ
முயல்வது ஆதவனை கையால் மறைப்பது போன்று.
நீர் மற்றுமொரு
இன்னிங்க்ஸ் விளையாட வேண்டும் என்பது எம்மை போன்ற சாமான்யனின் எதிர்பார்ப்பு; ஆம்
உமது அடுத்த மைதானம் ரைசினா ஹில்....
நீர்
சாமான்யனாக வாழ்வை துவங்கியவன், எனவே சாமான்யனின் குரலை ஆளும் வர்க்கத்திடம் எடுத்து
வைப்பாய் என நம்பும் பக்தகோடிகள்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக