ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அரசியல் கட்சிகளின் நொண்டிசாக்கு RTIயைலிருந்து ஏன்?

இந்தியா ஓளிர்கிறது- பாஜகவின் 2004 தேர்தல் அறிக்கை 
​வெளிநாட்டினரெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறார்கள் - சமீபத்தில் காங்கிரசு இளம் தலைவர்.


அவங்க சொன்னது முழுக்க உண்மை குறிஞ்சி இதை வழிமொழிகிறது.   எ​ன்ன பார்க்கிறீங்க, நம்ம நிலைமை அப்படியா இருக்குதுனாத்தானே,        அ​வங்க நம்மளை வைத்து அப்படி பேசவில்லை அவங்க வளர்ச்சியை வைத்துதான் நண்பர்க்ளே. என்ன குழப்பகுகின்றனா?



பணம் வந்து கொட்டுவாய்களாம் அது யார் கொடுத்தா, கணக்கு வழக்கு என்றெல்லாம் தெரியாதாம்(UNTRACE AMOUNT - Shown in Red color), நாம வங்கியில் எல்லா சொத்து மதிப்பையும் கொடுத்து கடன் கேட்டா கூட நம்மள நாய் மாதிரி நாலுதபா அலைய விடுவாங்க ஆனா இவங்களுக்கு மட்டும் திருப்பதி உண்டியலில் விழுற மாதிரி விழுமாம், நாமளும் நம்பனும்..

இ​ப்ப புரியுதா, ஏன் தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அவசரம் அவசரமாக கட்சிகளுக்கு விலக்கு அளிக்க அனைத்து கட்சியினரும் ஓன்றாக இருக்கிறார்கள் நண்பர்களே, நம்மிடம் இல்லாத ஓற்றுமை அவர்களிடத்தில் நாட்டுக்கு நன்மை செய்யவா இல்லையில்லை... 

அரசாங்கத்தின் விபரங்களை விட கட்சியின் விபரங்கள் எப்படி அதிமுக்கியமாக போய்விட்டதுனு
 எமக்கு புரியவில்லை அதை ஏன் மக்களிடம் சமர்பிக்க மறுக்கிறார்கள். இவங்கதான் நமக்கு சேவை பண்ண போகிறார்களாம். நேர்மை நம்மிடத்திலிருந்துதான் தொடங்குகிறது என்று யாராவது ஆளும் வர்க்கத்திற்கு எடுத்துரைக்கவேண்டும்.  

​​சரி சங்கதிக்கு வருவோம். கடைசி நேரத்தில் நிலைக்குழுவுக்கு அந்த சட்ட திருத்த மசோதா அனுப்பபட்டுள்ளது மேலும் விவாதிப்பதற்கு என்று. அவ்வாறு அனுப்பபட்டுள்ளது மனித ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பிற்காகவா இல்லையில்லை பின்பு அடுத்த வருடம் தேர்தல் மிக அருகில் அதற்காகத்தான்... அல்வா கொடுக்குறாங்களாம் யாருக்கு நமக்குதான் மக்கா! இன்னுமா புரியல, ம்ம் நீங்கல்லாம் புரிஞ்சாலும் புரியாத மாதிரியே ஐந்து வருடத்துக்கு ஓருக்க மாத்தி மாத்தி ஓட்டு போடுவீங்களே ஓழிய இதுக்கெல்லாம் முடிவு கட்ட முன்ன வரமாட்டிங்களே, கேட்டா எவன் இங்கு யோக்கியம் என்கிற ராமாயணத்தை பாராயணம் செய்வீர்கள் கிளிப்பிள்ளை போல.

நண்பர்களே பின்னரும் ஏன் கட்சிக்கு கொடி பிடிக்கிறீர்களே, எந்தன் தலைவ"ர்(அ)வி" உசத்தி அவர் தம் வாழ்வையே இனத்திற்காகவே அர்பணித்தார் என அலறும் அன்பர்களே, அவரது சொத்து மதிப்பு அரசியலுக்கு வரும் முன்னே எவ்வளவு? இப்பொழுது எவ்வளவு? பதில் கூறுங்கள்.  அவர் உழைத்தார் அதனால் உயர்ந்தார் என்ற சொத்தை வாதமெல்லாம் கதைக்கு வேண்டுமானால் உதவும் நிசத்தில் அல்ல.  முழு நேரமாய் தொழிலை மட்டும் மேற்கொள்பவர் கூட 2000 மடங்கு 3000மடங்கு சொத்து சேர்த்ததில்லை பின்பு இவர்களால் எப்படி... பேசாம வாரன் பபெட்டுக்கு பதிலாக நமது அரசியல் தலைவர்களை பிஸினஸ் வகுப்புகளில் பாடம் எடுக்க சொல்லலாம் பணம் சேர்ப்பது எப்படி என்று...

பச்சபுள்ள மன்னாரு: சரி இங்க தமிழக் கட்சி நிலவரமெல்லாம் வரவில்லையே ஏன்? 

​Question கோயிந்து: அவசரப்படாதே மன்னாரு. அதுக்குத்தான் நம்ம தோஸ்து அகர்வால்னு ஓருத்தர் மாநில கட்சிகளான  அதிமுக, திமுக, சமாஜ்வாடி, அகாலிதளம், ஜனதாதளம்(U), திரிணமுல் காங்கிரசு கணக்கையெல்லாம் கேட்டிருக்காரு, இந்த சட்டத்தின் கீழ். பார்ப்போம் என்ன நடக்குதுனு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக