ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

தேசிய தலைவரையும், அமைப்பினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக ஆயிரமாயிரம் பேச்சுக்கள்...

தேசிய தலைவரையும், அமைப்பினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக ஆயிரமாயிரம் பேச்சுக்கள்...


பொதுவாக கடந்து போனவர்களை பற்றி பேச யோசிப்பர் தமிழர்கள், ஏனெனில் அவர் தரப்பு வாதங்களை நாம் விவாதிக்கமுடியாது என்பதினாலே, அந்த குறைந்தபட்ச மாண்பு கூட இல்லாதவர்களிடம் என்ன பேச...

சகோதர சண்டையினாலே தோற்றுப் போய்விட்டோம் என்று ஒரு புறம், அப்படி வைத்துக்கொண்டாலும் அங்கு தனது ரத்தபந்தத்தையே களத்தில் பலியாவர் எனத்  தெரிந்தும் முன்னே தேசிய தலைவர் நிறுத்தினார் என்பதை மறந்துவிட்டதேனோ..
அதுவும் பெண்மணியாக இருந்துகொண்டு தமிழ் பெண்களை கொச்சைப்படுத்த யார் கொடுத்தார் இவருக்கு தைரியம்... தலைவரும் அமைப்பும் களத்தில் இருக்கும்பொழுது இவர்கள் யாரும் இந்த குற்றச்சாட்டினை முன் வைக்கவில்லை ஏன் பயமா?
அந்த பிரான்சு பெண்மணி சொல்லியது உண்மையாக இருக்கட்டும், ஏன் இவர்களுக்கு யோசிக்கும் திறனில்லையா. யுத்தம் உச்சகட்டத்தில் இருக்கும்பொழுது தலைவருக்கு பாதுகாவலானாய் இருந்தது ஏறக்குறைய 3லட்சம் மக்கள், அமைப்பும் தலைவரும் தவறு செய்பவர்களாக இருந்திருந்தால் அந்த அரண் கடைசி நிமிடம் வரை களத்தில் இருந்திருக்குமா...
கேட்டால் அமைப்பு பயமுறுத்தியிருக்கும் என்பார்கள், வெறும் ஆயிரக்கணக்கில் இருக்கும் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான மக்களையா பயமுறுத்தியிருக்க முடியும் அதுவும் எதிர் தரப்பு வலிமை கொண்டு வரும்பொழுது பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள்...
இன்று சாதியம் பேசுபவர்களும் தலைவரை கொச்சைபடுத்தியதில்லை, கேட்டுபாருங்கள் தமிழக்கதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராயிருக்கும் அந்த சாதிக்கட்சி தலைவரை கேட்டுபாருங்கள், உண்மை அவருக்குத் தெரியும், மோதியை கடுமையாக எதிர்ப்பவர் அவர், ஆயினும் என்றைக்கும் அவர் தலைவருக்கோ இல்லை அமைப்பிற்கோ எதிராக விரல் உயர்த்தியதில்லை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்று அவர் சேரக்கூடாத இடத்திலிருக்கலாம் , விரைவில் வெளிவருவார் எனப் பார்க்கின்றேன்.
அந்த தம்பி களத்தில் இல்லையென்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாம் என நரிகள் உளையிட்டு உலவி கொண்டு இருக்கிறது.  அந்த தம்பி களத்தில் இல்லையென்றாலும் அவர் காட்டிய வழியில் செல்ல ஆயிரமாயிரம் தம்பிகள் உள்ளத்தில் உணர்வோடும்,  நெஞ்சுரத்தோடு உள்ளோம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக