தமிழகத்தில் அரசாங்க
பொறியியல் கல்லூரிகள் பெரிதும் தொடங்கப்படவில்லை காரணம் நாம் அறிந்ததுதான், பொறியியல் கல்லூரி வியாபாரம் அரசியல்வாதிகளின் குலத் தொழிலாகிவிட்டது,
ஆயினும் நாம் வரும் காலத்திலாவது குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒரு அரசாங்க பொறியியல்
கல்லூரிகள் துவங்க அரசியல் கட்சிகளை வலியுறுத்தவேண்டும்.
1. அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாவட்டம், 1942 முதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், http://www.gct.ac.in
2. அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப
கல்லூரி, காரைக்குடி, சிவகங்கை மாவட்டம், 1952 முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், http://www.accet.in
3 அரசு பொறியியல் கல்லூரி, கருப்பூர்,
சேலம் மாவட்டம், 1966 முதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், http://www.gcesalem.edu.in
4. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம்,1981 முதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், http://www.gcetly.ac.in
5.. தந்தை பெரியார்
அரசு தொழில்நுட்ப கல்லூரி, வேலூர் மாவட்டம், 1990 முதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், http://www.tpgit.edu.in
6. அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் கிருஷ்ணகிரி
மாவட்டம்,1994 முதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், http://www.gcebargur.ac.in
7. அரசு பொறியியல் கல்லூரி, மேலசொக்கநாதபுரம்,
போடிநாயக்கனூர் தாலுகாவில் தேனி மாவட்டத்தில், 2012 - 13 முதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின்
கீழ்,
வரவிருக்கிறது:
8. அரசு பொறியியல் கல்லூரி, செங்கிப்பட்டி, தஞ்சாவூர்
அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், வரவிருக்கிறது
9. அரசு பொறியியல் கல்லூரி, செட்டிகரை,
தருமபுரி மாவட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ், வரவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக