பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெட்ரோல் பங்குகள் மூடப்பட வேண்டும்'' என்று சொன்னதற்காக... சிலவாரங்களுக்கு முன்தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் உட்பட பலதரப்பிலிருந்தும் வாங்கிக் கட்டிக்கொண்டவர், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.
கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் அதிகமான மக்களும் திட்டித் தீர்த்தார்கள். பின்னே... 'பெற்றோர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை... பெட்ரோல் இல்லாமல் வாழ்க்கையா?' என்கிற அளவுக்கு வாழப் பழக்கிவிட்டுவிட்டு... இன்று திடீர் என்று ஃப்யூஸ் பிடுங்க பார்த்தால்...?!
'மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாமே' என்று இப்போது புது பாணியில் வெளியே தலைகாட்ட ஆரம்பித்துள்ளார் வீரப்ப மொய்லி. ‘‘பொதுப் போக்குவரத்தின் அவசியம் மற்றும் சிக்கன நடவடிக்கை குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த, வாரத்தில் புதன்கிழமைதோறும் பேருந்து அல்லது மெட்ரோ ரயில் மூலம் அலுவலகத்துக்குச் செல்லப் போகிறேன்'' என்று தற்போது அதிரடியாக அறிவித்திருக்கும் வீரப்ப மொய்லி, 'பஸ் டே’ என்கிற பெயரில் இந்தத் திட்டத்தை தமது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி. உள்ளிட்ட 14 பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அக்டோபர் 9 முதல் இது அமலுக்கு வரவிருக்கிறது.
மேலோட்டமாக பார்த்தால், ஏதோ காமெடி பீஸு என்பது போலத்தான் தோன்றும். ஆனால், வீரப்ப மொய்லி மேற்கொண்டிருக்கும் முயற்சி, பொருளாதார ரீதியில் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ரீதியிலும் மாபெரும் பலனைத் தரக்கூடிய திட்டமாகும்.
இப்படியொரு திட்டத்தைச் சொன்னதுமே... 'நீ முதலில், உன் கட்சியில் இருக்கும் ஊழலை ஒழி... ஸ்விஸ் வாங்கியில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வா... பொருளாதார சிக்கல் தீர்ந்துவிடும்' என்று சிலர் பேசலாம்.
ஊழல் ஒழிவதும்... கருப்புப் பணம் வெளிவருவதும் பொருளாதார ரீதியில் நிச்சயமாக தீர்வைத் தரும்தான்.ஆனால், அது இன்றைக்கோ... நாளைக்கோ... ஏன் என்றைக்குமே சாத்தியமில்லை என்பதுதானே இங்கே உண்மை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கம்பெனிகளிடம் கமிஷன் வாங்கிக் கொண்டும்... நன்கொடை வாங்கிக் கொண்டும்தான் ஆட்சியை நடத்துகின்றன. அது கதராக இருந்தாலும் சரி... காவியாக இருந்தாலும் சரி... கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி... கழகங்களாக இருந்தாலும் சரி... கோடி கோடியாக கொட்டித்தான் தேர்தலையே சந்திக்க முடிகின்ற நிலையில், இவர்கள் எப்படி கமிஷன், ஊழல், கருப்புப் பணம் இதையெல்லாம் ஒழிப்பார்கள்.
கதருக்கு, காவி பரவாயில்லை... தி.மு.க-வுக்கு அ.தி.மு.க. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டு மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தி வருகிறோமே தவிர, இந்தக் கட்சிதான்... மக்களின் கட்சி! சுத்தம் சுயம்பிரகாச கட்சி என்று எந்தக் கட்சியையும் எப்போதும் ஆட்சியில் அமர்த்த வாய்ப்பே இல்லாமல்தான் இருக்கிறது.
இத்தகைய சூழலில், காமெடி பீஸு போல பார்க்கப்படும் வீரப்ப மொய்லி போன்றவர்கள், அத்திப்பூத்தாற்போல இப்படி எடுத்து வைக்கும் இதுபோன்ற சின்னச் சின்ன நன்முயற்சிகள், பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்பட்டால், அரசியல்கட்சிகள், அவர்கள் அடிக்கும் ஊழல் கூத்துக்கள் எல்லாவற்றையும் தாண்டி, அது நிச்சயமாக வீட்டையும், நாட்டையும், ஏன்... இந்த உலகத்தையே காப்பாற்றக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கையில் காலணா இல்லாதவர்களுக்குக் கூட கடன்களை அள்ளிவிட்டு, கார்களையும் பைக்குகளையும் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கின்றன வங்கிகளும் நிதி நிறுவனங்களும். மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாழ வேண்டும் என்பதற்காக... பொதுமக்கள் தலையில் ஏகப்பட்ட கடன் சுமை. கடனை விட்டுத்தள்ளுங்கள்... அதைக் கட்டாவிட்டால், காரை ஜப்தி செய்து கொண்டு போய்விடுவார்கள். கதை முடிந்துவிடும். ஆனால், இப்படி புற்றீசல் போல புறப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் கார்கள், பைக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளை எதனாலும் சரிப்படுத்த முடியாதே!
பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்குக் கூட நடந்து செல்ல முடியாமல், கார் அல்லது பைக்கில் பறக்கும் அளவுக்கு நாம் பழகிவிட்டோம்... அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம். வாழ்க்கைச் சூழலையும் மாற்றிக் கொண்டுவிட்டோம்.

| இத்தகைய சூழலில்... வாரத்தில் ஒரு நாளாவது அந்தக் கார் அல்லது பைக் போன்ற வாகனங்களை ஓரம்கட்டிவிட்டு, பெட்ரோலிய துறையினர் மட்டுமல்ல... அனைத்து மக்களுமே வீரப்ப மொய்லி சொல்வது போல, பஸ், வேன், ரயில் என்று பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தினால்... ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கமேகூட, பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடும். |
உலகின் பல நாடுகளில் ஊக்குவிக்கப்படும் சைக்கிள் போக்குவரத்துக்கும் இங்கே முன்னுரிமை கொடுத்து, சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று தனிப் பாதைகள் அமைக்கப்பட்டால்... அதுவும்கூட பெட்ரோலிய பொருட்களின் தேவையை ஏகத்துக்கும் குறைக்குமே!
'திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது திருட்டுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதன் செய்யும் 'தவறு'களுக்கும் , செய்யத் தவறும் 'சரி'களுக்கும் பொருந்தும்தானே!
திருந்துவோமா?!
நன்றி : ஆனந்தவிகடன்
பச்சபுள்ள மன்னாரு: என்னால் உங்க போக்க புரிஞ்சிக்கவே முடியலய, காங்கிரசுக்கு ஏன் தீடிர் ஆதரவு?
குறிஞ்சி: நாம் யாரையும் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லை, கொள்கை சார்ந்தே குறிஞ்சி யாரையும் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ செய்கிறது. வீரப்பமொய்லியின் திட்டம் ஏற்கனவே வெளிநாடுகளில் செயல்முறையில் இருந்தாலும் இந்தியாவுக்கு இது புதிது... மற்றபடி காங்கிரசு நமது பரம்பரை பகையாளியெல்லாம் கிடையாது... யார் நல்லது செய்தாலும் குறிஞ்சியின் ஆதரவு உண்டு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக