நான் தோற்றுப்போனவனாய் உங்களுக்கு தெரியலாம்...
ஆனால் சிறு தீக்குச்சி கூட தன்னைத்தானே எரித்தே
பெரும் தீபமோ தீப்பந்தமோ எரிய உதவுகிறது.
எடுத்த லட்சியத்தினை சமரசமின்றி வென்றெடுத்திட
எங்களது உயிரையே பணயம் வைத்த நாங்கள்
உங்கள் கண்முன்னே பைத்தியக்காரனாய் தோன்றிடலாம்...
நாங்கள் பொருளீட்டும் உலகத்தின் முன்னர்
தோற்றுப்போனதாய் தோன்றிடலாம்; புரட்சியாளனுக்கு
வெற்றி தோல்விகள் அளவுகோளில்லை..
எமக்கு நன்கு தெரியும் யாம் வெற்றியுற்றால்
இவ்வுலகம் என்னை பாடம் எடுக்க சொல்லிக் கேட்கும் - அதே நேரம்
நான் சறுக்கிவிட்டால் அதே உலகம் எனக்கு பாடம் எடுக்கும்..
நாங்கள் தோற்றுப்போகவுமில்லை வெற்றிபெறவுமில்லை
நாங்கள் தோன்றிக்கொண்டேயிருப்போம் எங்கெல்லாம்
அடக்குமுறை அடித்தட்டு மக்களின் மீது ஏவப்படும்பொழுது
எங்கள் பெயரினை இதயத்திலிருந்து முழக்கமிடுபவர்கள்
புரட்சியின் வலியையும் வலிமையும் உணர்வார்கள்
நாங்கள் விதைகள் தூவுமிடமெல்லாம் முளைத்து கொண்டேயிருப்போம்
ஆதலினால் தூவிக் கொண்டேயிருங்கள்
நாங்கள் முளைத்துக் கொண்டேயிருப்போம்
ஏனென்றால் நாங்கள் புரட்சியாளர்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக