சனி, 28 செப்டம்பர், 2013

நாங்கள் ராஜாக்கள் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)

படத்தின் கதையையோ, விமர்சனத்தினயோ இங்கே எதிர்பார்க்கவேண்டாம், இது படத்தின் மேக்கிங் பற்றிய ஒரு பகிர்வு மட்டுமே...



முதலில் மிஸ்கின் அவருக்கு ஒரு சபாஸ்....

படத்தின் கதை ஒரு பக்கம் என்றால், இளையராஜா முன் படத்தில் மிஸ்கின் ஏமாற்றியதால் இந்த படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னவரை சம்மதிக்க வைத்தற்க்காக...

படத்தின் முதுகெலும்பு நம்ம மொட்ட இளையராஜா....
மூளை மிஸ்கின்....

கடைசி படத்தில் பல ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்கின் இந்த படத்தின் ஆரம்பம் முதல் கடைசியில் எழுத்து போடும் வரை சபாஷ் சொல்ல வைக்கிறார்...ரொம்ப படத்திற்க்கு அப்புறம் கடைசியில் பெயர் போடும் போதும் எழுந்த ரசிகர்களை நின்று....பாரக்க செய்வதிலேயே அவரின் உழைப்பு என்பதைவிட அவரின் வெறி என்றே சொல்லலாம்...நன்கு தெறிகிறது.....

பிண்ணணி இசை மொட்ட மீண்டும் தான் ராஜா என்பதை சொல்லாமல் சொல்கிறார்...

படம் முழுக்க இரவு நேர காட்சி... கேமராமேன் ரியலி...super...மிஷ்கின் எண்ணத்தை அப்படியே கொடுத்துள்ளார்...

கேமரா எப்படி வைப்பது முதற்கொண்டு... பின்னாலில் இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் கேமரா பற்றி படிப்பவர்களுக்கு...

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை உணர்ந்து மிஷ்கினை காப்பாற்றியிருக்கறார்கள்...
அதிலும் இந்த CID officer நடிப்பு கொஞ்சம் மாறுபட்டதாக தெறிகிறது...

மொத்தத்தில் அரசன் அரசி படத்திற்கு  15 வெள்ளி கொடுப்பதற்கு 12 வெள்ளி கொடுத்து திரையரங்கில் பார்க்கலாம்... (saturday price)

இன்னும் நல்ல திரையரங்கில் பிண்ணணி இசைக்காக இன்னொறுமொறை பார்க்கவேண்னும்.....

கொசுறு.... 

படம் பார்த்து குறை சொல்லும் கூட்டம் சொன்னது... இது சிவாஜியின் நீதி படத்தின் உல்ட்டா என்று... 

நாம் :- படத்தின் கரு எங்கிருந்து வந்தது என்பதை விட படம் எப்படி எடுக்க பட்டது என்று பார்ப்போம்...


மனம் கவர்ந்த வசனத்தில் ஒன்று...

குழந்தை:- அம்மாக்கு என்ன ஆச்சு ?

மிஷ்கின்:- செத்துட்டாங்க 

குழந்தை:- நாமும்  செத்துடலாமா? 

மிஷ்கின்,இளையராஜா கூட்டணி...மறுபடியும் நாங்கள் ராஜாக்கள் என நிருபித்துள்ளது....

நன்றி :  அருளின் முகப்பக்கத்திலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக