புதன், 25 செப்டம்பர், 2013

ஆந்திராவின் விடிவெள்ளியா ஜெகன்?


ஆந்திராவில் ஒரு பகுதி  மக்கள் அவரை தங்களை காக்க வந்த கதாநாயகனாக பார்க்கின்றனர். உண்மையில் இவர் காங்கிரசின் கைக்கூலியே, காங்கிரசின் அதிருப்தி ஓட்டுக்கள் சந்திரபாபு நாயுடுக்கு போய்விடக்கூடாது என்பதால் இவர் காங்கிரசால் இயக்கப்படுகிறார் என்பதே நமக்கு வந்த தகவல்,  ஜனாதிபதி தேர்தலில் இவர் காங்கிரசின் வேட்பாளரையே பிரணாப்யை ஆதரித்தார் என்பது மேலே சொன்ன தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்பதும் உறுத்துகிறது.. ஆக தெலுங்கு பேசும் நண்பர்களிடம் பகிர்வோம், காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுக்களை ஒரணியில் சேர்ப்போம்.  





ஊழல் குற்றச்சாட்டிலே அவர் சிறையில் இருந்தார் என்பதும், அவரது அப்பாவின் ஆட்சியிலே அவரது சொத்து மதிப்பு விண்ணுக்கு எகிறியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை முதல்வர் நாற்காலியில் உட்காரவைப்பது மணிமேகலையின் மகனுக்கு வருங்காலத்தில் வைக்கும் ஆப்பு என்பது மணிமேகலைக்கு நன்கு தெரிந்து இருந்ததாலும், காங்கிரசின் எதிர்ப்பு ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் மீண்டும் காங்கிரசின் பைக்குள்ளேயே கொண்டு வருவார் இவர் என்பதாலுமே இவரை மற்றுமொரு அரசியில் கட்சியை நடத்த மணிமேகலை உத்தரவு தந்துள்ளார்  அல்லது சிறைக்குள்ளேயே இருந்திருப்பார்.

​மற்றபடி  இவர்  நாயுடுக்கு மாற்று அல்ல... தெலுங்கானாவோ, சீமாந்திராவோ இனிமேல் முடிவு மணிமேகலையின் வீட்டில்தான் ஒழிய ஆந்திர மக்கள் எடுக்க முடியாது.  மேலும் இதன் பின்னர் மதரீதியிலான சங்கதிகள் நிறைய உள்ளது ஆனால் குறிஞ்சியின் எடிட்டோரியில் அணி அதை பகிர அனுமதிக்கவில்லை ஆதலால் இதனை இப்படியே முடித்துக்கொள்கிறேன்... 

குறிஞ்சியின் நிலைப்பாடு காங்கிரசு தொடர்ச்சியாக 10வருடம் ஆண்டுவிட்டது, ஆகவே தற்காலிகமாவது ஒர் மாற்று வேண்டும், நாங்கள் நிரந்தரமாக காங்கிரசினை ஒழித்து விட விரும்பவில்லை என்பதை எங்களை தொடர்ந்து வருபவர்களுக்கு ​நன்கு புரிந்து இருக்கும் என நம்புகிறோம்,  காங்கிரசு தனது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள சிறிது கால இடைவேளி வேண்டும் அதற்கு மாற்றாக நாம்  இந்த முறை வழிமொழிவது மோடி அவ்வளவுதான் மற்றபடி நாங்கள் மோடிக்கு PRO அல்ல...  

​மோடியை பிடிக்காத  நண்பர்கள் பேசாமல் 49-Oவில் உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்களேன் அதை விட்டு எங்கு யார் யோக்கியம் அதனால் நான் வாக்கு பதிவு செய்யமாட்டேன் என்பதெல்லாம் காங்கிரசுக்கு நீங்கள் மறைமுகமாக உதவி செய்வதாகும்.  சில பேருக்கு ரொம்ப புத்திசாலியாக பேசுவதாக நினைப்பு முதலில் உங்கள் தலை மேல் உள்ள கொண்டையை மறையுங்கள்,  நீங்கள் எந்த பத்திரிக்கையை மேற்கோள்காட்டி பேசுகிறீர்களோ அந்த பத்திரிக்கையின் வண்டவாளத்தினை தண்டவாளம் மேல் ஏற்றுவோம்... விரைவில் அந்த பத்திரிக்கையினை சரித்திரத்தினை புரட்டுவோம் இணைந்திருங்கள் அதுவரை எங்களோடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக