சனி, 21 செப்டம்பர், 2013

மோடி மோடியையே எதிர்க்கிறார் என்னப்பா பார்க்கிறீங்க? மற்றும் ஆகஸ்டு பேய் மாதம்

மோடி மோடியையே எதிர்க்கிறார் என்னப்பா பார்க்கிறீங்க.

ஆ​மாம் சுசில் குமார் மோடி, முன்னாள் பிகார் நிதி மந்திரி, இந்திய நிதி மந்திரிகள் கவுன்சிலின் தலைவராக பொறுப்பிலிருந்தவர் ஜிஸ்டி என்னும் GOODS AND SALES TAX-யை ஆதரிக்கிறார். மேலும் இவர் இது எக்சைஸ் மற்றும் சேல்ஸ் ஆகிய மறைமுக வரி விதிப்பினை தடுக்கும் என்கிறார். இவரது கொள்கையை பிஜேபியின் யஸ்வந்த் சின்கா, சுஷ்மா, நிதின் கட்காரி ஆகியோர் ஆதரிக்கின்றனர்.

இ​ருப்பினும் ஓரே மனிதன் ஆம் நரேந்திர மோடி மட்டுமே இதனை எதிர்க்கிறார். ஏன் என்று கேட்டு சொல்லுங்கள் என்று காங்கிரசின் சிந்தனை மனிதர் ஜெய்ராம் ரமேஷ் கேட்கிறார். அவரை ஆதரிப்பவர்களாவது பதில் சொல்லுங்களேன் என்கிறார். 

​சொல்லுங்கப்பா ஏன் மோடி ஜிஸ்டியை எதிர்க்கிறார் என்று??


   ஆகஸ்டு பேய் மாதம்:

​சீனர்களிடையே காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை ஆகஸ்டு என்பது பேய் மாதம், இந்த மாதத்தில் புதிதாக எந்த ஓரு நடவடிக்கையையும் தொடங்க மாட்டார்கள். மாலை வேளைகளில் குடும்பத்தோடு வீட்டுக்கு வெளியே தங்களது முன்னோர்களை நினைத்து ஊதுபத்தி அல்லது பேப்பரை (இதற்காக என்று கடைகளில் தனியே விற்பனை செய்வர் கொஞ்சம் சிகப்பு கலர் பார்டரில் இருக்கும், பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன்) கொளுத்துவர்.

இ​ங்கு நம்ம மன்மோகன் சிங்க்கும் ஆகஸ்டு பேய் மாதமாகத்தான் இருந்திருக்கும் என என்னுகின்றேன், ஆ​ம் அவர் தலைகீழாக நின்று என்ன பண்ணினாலும் மார்கெட் நிலவரம் அவருடைய ஏன் பொதுவாக அனைத்து வல்லுனர்களின் கணிப்புக்கும் எதிர்ப்பாகவே சென்றது. மன்மோகன்சிங்குக்கு தலை சுற்றி போய் இருந்திருக்கும் அந்த நிலவரம் தொடர்ந்திருந்தால் இந்த மாத கடைசியில் காங்கிரசு ஆட்சி கவழ்ந்திருந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.  

ரிசர்வ் வங்கிக்கும் கவர்னர் மாற்ற அறிவிப்பெல்லாம் நிலைமையை கட்டுக்கு கொண்டு வரவில்லை, எதிர்கட்சியான பிஜேபியும் ஜனாதிபதியையெல்லாம் போய் பார்த்து காங்கிரசு தோல்வியடைந்து விட்டது என்ன பண்ணினாலும் ரூபாயின் மதிப்பு தேறவில்லை இப்படியே போனால் நமது ரூபாயின் மதிப்பு 70ரூக்கும் மேலே 1 டாலருக்கு எதிராக சென்றுவிடும் எ​னவே காங்கிரசு அரசினை கலைத்துவிட்டு தேர்தலுக்கு போவோம் என்றனர், அந்த நிலைமை தொடர்ந்திருந்தால் நாம் ஜிம்பாவேயோடு போட்டி போட வேண்டியிருக்கும் என்று நம் வயிற்றில் புளி கரைத்தனர்.










ஆ​கஸ்டு மாதம் முடிந்தவுடன் நிலைமை மெல்ல மெல்ல தேறத் துவங்கியது. அதற்கு மீண்டும் அந்நிய முதலீட்டார்கள் குறிப்பாக விமானதுறை, செமிகண்டக்டர்  துறையில் கொண்டு வந்த மூதலீடுகள் அது தொடர்பான அறிவிப்புகளும் ரூபாயின் மதிப்பினை தூக்கி நிறுத்தியது.  

காங்கிரசுக்கு செப்டம்பர் மாதம்தான் பேய் மாதமோ...
ஆனால் நண்பர் வேறோரு கோணத்தில் சொன்ன தகவல் செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்து மோடியை பிஜேபி பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஆயத்தமானது அதுவும் காரணமாக இருந்திருக்கலாம், அந்நிய மூதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்திய சந்தை பெற இதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.


​காங்கிரசின் இரண்டாவது ஆட்சி காலம்தான் மிக மோசம் என்கிறார்கள்,  ஆம் 2004-09 காலத்தில் நடந்த ஊழல்கள் இப்பொழுதுதான் ஒன்றன் பின் ஒன்றாக வெளி வந்தது.  மேலும் 2008லிருந்து மூன்று சர்வதேச நிதி விழ்ச்சியும் காங்கிரசினை விழ்த்தி விட்டது என்பதையும் ஓத்துக்கொள்ள வேண்டும். ஆனால் என்னுடைய கவலை என்னவென்றால் இந்திய சந்தையும்  சர்வதேச சந்தையின் தாளத்திற்கு நடனமாடுவது நல்ல தகவலில்லை அதன் விளைவுகளை நாம் சந்திக்க தயாராகவேண்டும் அல்லது நமது ஆட்சியாளர்களின் பொருளாதார கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் சாமாயனுக்கானதாக...




சினிமாக்காரன்: எப்பா நீயும் மோடி புராணம் பாட ஆரம்பிச்சட்ட போல; பொருளாதார கட்டுரைகளிலும் மோடியா, என்னையெல்லாம் எழுதவிடுங்கப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக