- 1. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தினையும் அதை தொடர்ந்து நடந்த கலவரத்தையும் அவர் சரியாக கையாளவில்லையாம்?சரி செயல்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் அவரை பதவி விலகச் சொல்லலாம், அதற்கு முன்பு எதிர் பக்கமும் சில பல தலைவர்களை பதவி விலகச் சொல்ல வேண்டும்.என்ன வேன்று பார்ப்போமா. அஸாம் கலவரத்திற்காக தருண் கோகாயின் பதவியை உருவிடனும், சமீபத்திய உத்திரபிரதேச கலவரத்திற்கு அகிலேஷ் பதவியை உருவிடனும். இதற்கு மேலும் எல்லையில் நமது ராணுவ வீரர்களின் தலையை காவு கொடுத்ததற்காகவும், அடிக்கடி எல்லையில் அன்னிய படையில் ஊடுருவ விட்ட சம்பவத்திற்கும், தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் எதிர் தரப்பினரால் சுடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறுகின்றன. இதற்காக டெல்லியிலும் சில தலைகளை பதவி விலகச் சொல்லனும். ஆம், செயல்பாடு என்ற அளவுகோள் மோதிக்கு மட்டுமல்ல அனைத்து பேருக்காகவும் என்பதாக இருக்கவேண்டும்.2. உத்திரபிரதேச கலவரத்திற்கு பிஜேபி மட்டும் காரணம் என்று பொத்தம் பொதுவாக கூறிவிட்டு செல்கின்றனர்.இந்த வாரம் இந்தியாடுடேவில் அந்த மாநில அமைச்சருக்கு இருக்கும் தொடர்பு பற்றி விவரித்த பிறகும், உத்திரபிரதேச எதிர்கட்சியின் எம்பியும், 3 எம்ல்ஏக்குகளும் வெறுப்புடன் பேசிய காணொளி வந்த பிறகும், அதற்கு மேலும் டெல்லி ஆளும் அரசின் கட்சியை சார்ந்த மற்றொரு நபர் வெறுப்புடன் பேசிய காணொளி வந்த பிறகும் ஏன் அதைப் பற்றி மற்ற எந்த மீடியாவும் பேச மறுக்கின்றன. பர்க்காக்களும், கோசுவாமிக்களும் எங்கே உள்ளனர், ஏன் 10 வருடத்திற்கு முன்பு நடந்தவற்றையை பேசி நம்மை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்றனர்.சரி, மோதி பிரதமராக வருவதற்காக பிஜேபிதான் இந்த கலவரத்தினை நடத்தியாக இருந்தால், அது சம்பந்தமாக உளவுத்துறை தகவல்கள் ஏதேனும் இவர்களுக்கு வரவில்லையா, வந்தது என்றால் அதனை வெளிப்படையாக அறிவிக்கட்டுமே இங்கு இப்படி பிஜேபி திட்டமிட்டது என்று. அப்படி இல்லாவிட்டால் உளவுத்துறையின் தோல்வியென ஒப்புக்கொண்டு உபியின் ஆட்சியாளர்களும் பதவி விலகட்டுமே.3. வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே வரும் பழங்குடியினர், மாவோயிஸ்டுகள், சுற்றுச்சூழலியலாளர்கள் போன்றவர்களும் அடித்து நொறுக்கப்பட்டு இந்தியா 'வல்லரசு' ஆக வேண்டும்; அதற்கு மோடி பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.சரி, இப்பொழுது பசுமை வேட்டை என்ற பெயரில் தண்டகாரண்ய காடுகளில் போரிட்டுக்கொண்டிருக்கும் பழங்குடிகளுக்கு எதிராக போரினை யார் நடத்துவது மோதியா, டெல்லி ஆளும்அரசா...4. மோதியை உச்ச நீதிமன்றமே கோத்ரா கலவரத்தில் விடுவித்த பிறகு அந்த கட்டுரையாளர் சொல்வது யாதெனில், "சந்தையில் அடித்ததற்கும் நீதிமன்றத்தில் சாட்சி வேண்டும். எனவே சமூக உண்மை பல சமயங்களில் நீதிமன்ற உண்மையாக இருப்பதில்லை. எனவே ஒரு பேச்சுக்காக மோடி அப்பாவி என்று கொள்வோம்".சரிங்க பாஸ் அப்படியெனில் டெல்லியில் ஆளும் தரப்பு மட்டுமல்ல இந்திய அரசியல்வாதிகளை அவ்வளவு ஏன் நமது ஜனாதிபதிகளை உச்சநீதிமன்றம் பல வழக்கில்(குறிப்பாக ஊழல் வழக்கு) விடுவித்திருக்கிறது முன்பும், அப்படினா அவங்க எல்லாம் யார் பாஸ், நிரபராதிகளா இல்லை உங்க பேச்சின் படி அவங்களும் குற்றவாளிகளா !!!5. குறிப்பிட்டதரப்பினர் எப்படிபட்ட நபராக மோடி இருந்தாலும் பரவாயில்லை அவரே பிரதமராக வேண்டுமென அடம் பிடிக்கிறார்களாம்.சரிங்க பாஸ், உங்க ஆதங்கம் புரிகிறது. மோடியை அவர்கள்ஆதரிக்கட்டும் நீங்கள் பேசாம இருங்க, இல்லைனா நீங்க யார் பிரதமர் பதவிக்கு வரனும் அதற்கு தகுதியானவர்னு நினைக்கிறிங்களோ அவங்கள அடையாளம் காட்டுங்க, அதை விட்டுட்டு மோடி ஆர் எஸ் எஸ்ஆளு அது இதுனு சொத்தையா வாதிடதாதீங்க, மோடியை தவிர்த்து பிஜேபியில் வேற யாராவதுனு பிரதமர் பதவிக்கு வந்தா இதுக்குள்ள அவங்களுக்கு நூல் கட்டிருப்பீங்க ஆனா இவரும் பிற்படுத்தப்பட்ட இனத்தினை சார்ந்த சாய்வாலா அதனால கலவரம், அது இதுனு அடித்து விடாதீங்க, அப்படி இந்தியாவில் நடந்த அத்தனை கலவரத்துக்கும் அந்த அந்த மாநில அமைச்சர்கள் பொறுப்பு ஏற்கனும்னா இங்க யாரும் அந்த சீட்டுல உட்காரவே தகுதியானவர்கள் இல்லை.பாஸ், சவுக்கினை சுழற்றினால் எல்லார் பக்கமும் வீச வேண்டும், இது வாள் வீச்சு அல்ல நீங்கள் வீசும் திசையில் மட்டும் சுழல...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக