செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தமிழகத்தின் மின் தட்டுப்பாடு கட்டுக்குள் வரும் திட்டங்கள் செயல்பாட்டில்!


தமிழகத்தின் உபயத்தினால் இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் அக்டோபர் இறுதிக்குள் 30% அதிகமாகவிருக்கிறது , 700 மெகாவாட் (MW ) ஒப்பந்தங்கள் தமிழக அரசால் கையெழுத்து வைக்கப்பட்டுள்ளது.



இந்த ஒப்பந்தங்கள் இயக்கத்திற்கு வரும் பொழுது முறையே , தமிழ்நாடு நாட்டில் இத்தகைய திட்டங்களில்  இரண்டாவது மிக பெரிய சூரிய சக்தி திறன் பெற்றதாக இருக்கும். குஜராத் முன்னோடியாக இருக்கும். இந்தியாவின் சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் 800 மெகாவாட் குஜராத்திடம் இருந்து வருகிறது, தற்போது இந்தியாவின் கிரிட்டோடு இணைக்கப்பட்ட சூரிய சக்தி 1,759.43 மெகாவாட் உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சூரிய சக்தி கொள்கையானது 2015வாக்கில் 3,000 மெகாவாட் நிறுவும் நோக்கம் கொண்டது அதன்  ஒரு பகுதியாக  52 நிறுவனங்களோடு  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பு( Tangedco ) ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டது . யூனிட் ரூ6,48 கட்டண விகிதத்தில் 698 மெகாவாட் மொத்தம் கொள்ளளவு செய்யும் வகையில் ஒப்பந்ததின் சாரம்சம் இருந்தது( கட்டணமானது 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஒரு 5 % அதிகரிப்பு ) .

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் சூரிய சக்தி மிகவும் விலையுயர்ந்தது. மேலும் ரூபாய் தேய்மானம் மிகவும் விலையுயர்ந்த சோலார் பேனர் இறக்குமதியில் இந்த நிறுவனங்களுக்கு மேலும் துயரங்களையும் சேர்க்க உள்ளது கவனிக்கத்தக்கது. இந்த ஒப்பந்தமானது நாட்டின் சூரிய கொள்கை தள்ளாடி நடந்த ஒரு நேரத்தில் வருகிறது . மேலும் ஜவகர்லால் நேரு தேசிய சூரிய மிஷன் இரண்டாவது கட்ட திட்டம் வருவதற்கான எந்த அடையாளமும் இருப்பது விரைவில் இல்லை இருப்பினும் எந்த நேரத்திலும் அது துரிதப்படுத்தபடலாம் தேர்தல் நெருங்குவதால், பார்க்கலாம்...

மற்ற மாநிலங்களில் சூரிய கொள்கைகள்  தமிழ்நாட்டினை போன்று இந்த அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை . ஆந்திர பிரதேசம் 1,000 மெகாவாட்க்கு இலக்கு வைத்திருக்கிறது, ஆயினும் கட்டண விசயத்தில் நிறுவனங்களுக்கும் ஆந்திர அரசுக்கும் முரண்பாடு உள்ளது, நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் விலை உயர்வு  இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறது. (தமிழக அரசு ஆண்டுதோறும் 5% விலைஉயர்வுக்கு ஒத்துக்கொண்டுள்ளதால் இங்கே மூதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறது நிறுவனங்கள், இதற்கு தமிழக்த்தின் மின்பற்றாக்குறை தமிழக அரசின் பேரம் பேசும் திறனை கட்டிபோட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). பஞ்சாப்பில்( 300 மெகாவாட் ) மற்றும் கர்நாடகாவில் ( 130 மெகாவாட் ) போன்ற  திட்டங்கள் அந்த மாநிலங்களில் சிறிய அளவில் மற்றும் ஆரம்பகட்ட நிலையிலே உள்ளன . ஒரு ஆண்டில் 300 நாட்களுக்கு தெளிவான சூரிய வெளிச்சம் கிடைப்பதாலும், சதுர மீட்டருக்கு 5.6-6.0 கி.வா. கிடைப்பதாலும், இதன் மூலம் தமிழகம் சூர்ய சக்தியில் இந்தியாவின் மூன்றாவதாக வருகிறது - இதுவெல்லாம் தமிழ்நாட்டிற்கு நிறுவனங்களை மூதலீடு செய்ய தூண்டுகிறது...

கடந்த வாரம் , Tangedco நில உரிமை மற்றும் நிதி வங்கி உத்தரவாதம் சான்று ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டு சூரிய சக்தி உற்பத்தியாளர்கள் கூட்டங்களை நடத்தியது . " முப்பது நிறுவனங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க இன்னும் நாம் அக்டோபர் 30 வரை அவகாசம் கொடுத்ததாகவும், ஆவணங்கள் கொடுத்த நிறுவனங்கள் வேலையை துவக்கிவிட்டதாகவும் Tangedco ஒரு மூத்த அதிகாரி கூறினார். மேலும்  திருச்சி மாவட்டத்தில் 60 மெகாவாட் ஆலை Welspun எரிசக்தி நிறுவனத்தால் செயல்படுத்தபடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக