சென்னையின் பெருகி
வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 5வது நீர்தேக்கம் கும்மிடிபூண்டி அருகே உள்ள தேர்வாய்கண்டிகையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அடிக்கல் நாட்டப்படுகின்றது.
அரசாங்கத்தின் திட்டமானது
ஏற்கனவே இருக்கும் 4 நீர்தேக்கங்களான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி மற்றும் ரெட்
ஹில்ஸ்ல் இருக்கும் நீர்த்தேக்கங்கள் தவிர்த்து கூடுதலாக கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகையில்
இருக்கும் இரண்டு சிறிய நீர்தேக்கங்களை இணைத்து 330 கோடி மதிப்பு செலவில் ஒரு
1,495 ஏக்கர் பகுதியில் அமையவிருக்கிறது.
புதிய நீர்த்தேக்கம்
கிருஷ்ணா நதி நீர் விநியோக பாதையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு முன்னர்
அமையவுள்ளது அது கிருஷ்ணா நதி தண்ணீரை குறைந்தது ஒரு tmcft (ஆயிரம் மில்லியன் கன
அடி) அளவில் சேமிக்கும். இந்த திட்டமானது கண்ணன்கோட்டை,
தேர்வாய்கண்டிகை, கரடிபுதூர், செஞ்சி அகரம், பள்ளிகுப்பம், தாமைரைகுப்பம் ஆகிய கிராமங்களிலிருந்து தனியார்
நபர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியும், மேலும் 22 ஹெக்டேர் வன நிலத்தையைம் சேர்த்து
செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்க மூத்த அதிகாரி இந்த வேலையை இரண்டு
ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக