வடசென்னை பகுதியில்
அண்மையில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவால் அங்குள்ள நிலத்தடி நீர் மாசுபட்டதோடு,
குடிநீரில் பெட்ரோல் கலந்து வந்தது.இதையடுத்து, சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயம்
தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் சொக்கலிங்கம், நாகேந்திரன்
ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை
தாக்கல் செய்யவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதிகள், எண்ணெய் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும், மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். எண்ணெய் கசிவு தொடர்பாக இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் பதில் தர மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். - செய்தி
இந்த அரசாங்கம்தான் சொல்கிறது
கூடங்குளம் அணு மின்நிலைய திட்டம் பாதுகாப்பானது
என்று.
இந்த அரசாங்கம்தான் சொல்கிறது
தேனி நியுட்ரினோ திட்டம் பாதுகாப்பானது என்று..
இந்த அரசாங்கம்தான் சொல்கிறது
கோவை கெய்ல் திட்டம் பாதுகாப்பானது என்று...
இந்த அரசாங்கம்தான் சொல்கிறது
தஞ்சை மீத்தேன் திட்டம் பாதுகாப்பானது என்று....
நம்புங்க மக்கா இந்த அரசாங்கத்தை...
கண்டிப்பாக நமக்கு வளர்ச்சி பாதையை காட்டுகிறார்களோ இல்லையோ வாக்கரிசி போட்டு சுடுகாட்டினை
நமது வீட்டிற்குள்ளே கொண்டு வருவர் அவ்வ்வ்வ்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக