நாமும்
சும்மா ஓரு குட்டி கதை சொல்லட்டுமா முதலில், காட்டில்
ஓருநாள் காலையில் ஆமையார் நம்ம முயலார் வீட்டருகே வாக்கிங் போய்
கொண்டிருந்தபொழுது, நம்ம முயலார் மாலைக்குள்ளாவது வாக்கிங்கை முடித்துவிடுவாயா என
சீண்டியது, அதனால் கோபம் கொண்ட ஆமையார் முயலாரிடம் என்னை ஓட்டபந்தயத்தில்
வெல்லமுடியுமா என்றது. அதைக்
கேட்ட அங்கிருந்த அனைத்து விலங்கினங்களும் கொல்லென சிரித்தன. ஆயினும் முயலாரும்
பந்தயத்திற்கு ஓப்புக்கொண்டது.
"வேகப்புயல்" சிறுத்தையாரும், நடையழகி நத்தையம்மாளும் நடுவராக இருக்க ஓப்புக்கொண்டன. பந்தய தூரமானது சிறுத்தையிலிருந்து நத்தையை அடையவேண்டுமென முடிவானது. பந்தயம் சிங்க ராசா தலைமையில் தொடங்கிவைக்க்ப்பட்டது. ஆமை அன்ன நடை பயில முயல் சீறிப்பாய்ந்தது, எல்லோரும் என்ன நடக்கும் என ஆர்வத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையில், பந்தயத்தின் பாதையில் கேரட் தோப்பு ஓன்று செழித்து வளர்ந்திருந்தது. அதைப் பார்த்த நம்ம முயலாரின் வாயொலோ எச்சில் ஓழுக திரும்பி பார்த்தது கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஆமையை காணவில்லை, எனவே அது வரும் முன்னர் நாம் இந்த கேரட்தோப்பினை ஒரு கை பார்ப்போம் என புகுந்து விளையாடியது, பின்பு உண்ட களைப்பில் அங்கிருந்த ஆலமர நிழலில் குட்டி தூக்கம் போடலாம் என போனது, அது மழைக்காலமாதாலால் குளிர் காற்றினால் முயலார் ஆழ்ந்து உறக்கம் கொள்ள, நம்ம ஆமையார் கண்ணும் கருத்துமாய் பந்தய தூரத்தினை கடந்து வென்றது. பின்பு முழித்த முயலார் அவமானத்தினால் அந்த காட்டினை விட்டு வெளியேறியது.
சில காலம் முயலார்
பக்கத்து காட்டில் வசித்துக் கொண்டிருந்த பொழுது, இங்கும் ஓர் ஆமை முயலாரின்
பாதையில் நடந்து சென்றது, அதைப் பார்த்த நம்ம முயலார் பாதையை விட்டு விலகி
நின்றது. அதைப் பார்த்த அந்த ஆமை ஆம்! அந்த பயம் இருக்கட்டும். பக்கத்து
காட்டினில் என் மச்சான் ஆமையிடம் உன்னை போன்ற பொடிபயல் முயல் ஓன்று
ஓட்டப்பந்த்தயத்தில் தோற்றுவிட்டது என வெட்டி பந்தா பண்ணியது. இதனை கேட்ட முயல்
அவமானத்தால் கூனிக்குறுகி போனது. ஆனால் அந்த துடுக்கு ஆமை ஏன் நீயும் என்னோடு
ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள கூடாது என வம்புக்கு இழுத்தது.
இந்த முறை பந்தயத்தில்
முயலார் கண்ணும் கருத்துமாய் இருந்து வென்றது.
குறிஞ்சியின் நீதி: தொடர்ச்சியான வெற்றி தரும்
ஆணவமும் அகங்காரமும் நம்மை குப்புறத்தள்ளிவிடும்.
என்னடா
அரசியல் பதிவில் சிறுவர் கதை கூறுகிறேன் என்று பார்க்கிறீர்களா... நான் சொல்ல
வருவது வேறு.
1998ல் இரண்டாம் முறையாக
ஆட்சியை பிடித்த பிஜேபி, தங்க நாற்கர சாலை திட்டம் என பல உருப்படியான திட்ட்ங்களை
கொண்டு வந்தது, அப்பொழுது வளர்ச்சி இருந்தபொழுதிலும் அது அனைவரையும்
சென்றடைந்திருக்கவில்லை என்பதே உண்மை. அப்பொழுது நடந்த அனைத்து மாநில சட்டமன்ற
தேர்தல்களிலும் பிஜேபி தொடர் வெற்றியை பெற்று வந்தது.
இனி காங்கிரசு சகாப்தம்
முடிந்து போனது என்றனைவரும் இருந்தவேளையில் 2004 தேர்தலில் பிஜேபி ஆணவமாக
"இந்தியா ஓளிருகிறது" என்ற பிரசார கோசத்தினை வைத்தபொழுது. காங்கிரசோ
"காங்கிரசின் கை எப்பொழுதும் சாமான்யர்களோடுதான்" என்ற எளிதான பிரசார
கோசத்தினை வைத்தது.
1996ல் ஆட்சியை இழந்த
காங்கிரசு எப்பாடு பட்டவாது 2004ல்ஆட்சியை பிடிக்கவேண்டிய நிர்பந்தத்தில் சில பல
திட்டங்களை அறிவித்தது. அதில் குறிப்பிடத்தக்க திட்டம் வெகுநாளாய் COMMAN MAN
கேட்டுக்கொண்டிருந்த "தகவல் அறியும் உரிமை சட்டம்". அந்த
சட்டத்தினாலே இன்று ஆளும் வர்க்கத்தின் ஊழல் எளிதில் அம்பலத்தப்படுகிறது.
ஆனால் இன்று அந்த
சட்டத்தினை காங்கிரசே பஞ்சர் பண்ணுகிறது, தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று.
மேலும் அந்த காலக்கட்டத்திலே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை
அனுமதிக்கும் சட்டத்திருத்தத்தை பிஜேபி கொண்டு வந்த பொழுது நமது ஹீரோ அதாங்க நம்ம
தற்போதைய பிரதம் மந்திரி தலைமையில் பார்லிமென்டில் அந்த சட்டத்தினை காங்கிரசு
எதிர்த்தது. ஆனால் இப்பொழுது இவர்களே அந்த சட்டத்தினை அமல்படுத்துகிறார்கள். மறதி
என்பது அரசியல்வாதிகளின் தேசிய வியாதி என்பது நமக்கு தெரியும், மேலும் அந்த
நோய்க்கு மருந்து என்பது அரசியல்வாதிகளை அப்ப அப்ப எதிர் வரிசையில்
நாடாளுமன்றத்தில் உட்காரவைப்பதே ஆகும்.
அப்பொழுது பிஜேபி செய்த தவறுகளை இன்று காங்கிரசு செய்துகொண்டிருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் அனைத்து கொள்கைகளிலும் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் நூலிழைவு வித்தியாசமே அது பிற்றி பின்னர் சொல்கிறேன். மற்றபடி நாம் யாரையும் தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. பின்பு ஏன் காங்கிரசு இந்த முறை தள்ளிவைக்கப்பட வேண்டுமெனில்?
- முன்னாள் இன்னாள் நிதிஅமைச்சர்கள் மேல் 2G ஊழல் குற்றச்சாட்டு.
- முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மீது ஊனமுற்றோர் நிதி ஊழல் குற்றச்சாட்டு..
- காமென்வெல்த் விளையாட்டு நடந்ததில் மாபெரும் ஊழல், இன்று வரை அதன் குற்றவாளிகள் குறிப்பாக அந்த மாநில முதல்வர் தண்டிக்கப்படவில்லை...
- கார்கில் போர் வீரர்களுக்கு கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதிதிட்டத்தில் ஊழல், அங்கும் யாரும் தண்டிக்கப்படவில்லை....
- ரயில்வே இலாகா வேலைவாய்ப்பு ஊழல் குற்றச்சாட்டு, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் பத்திரிக்கைகளின் கிடுக்குப்பிடிகளுக்கு பிறது ரயில்வே மந்திரி பதவி விலகினார், பின்னர் காங்கிரசு பீரோஆப் இன்வெஸ்டிகேசன் அதாங்க சிபிஐ அந்த மந்திரியை அப்பாவி என்கிறது.....
- தோரிய, அணுசக்தி, அலைக்கற்றை, ராணுவ தளவாடங்கள், நில பேர ஊழல்கள் என அடுக்கிகொண்டே போகலாம் எழுதும் எனக்கே ஆயாசம் வந்துவிடுகிறது. அவர்களுக்கு வரவில்லை என்ன பண்ணுவது.
2G ஊழல் நடந்த
போது பிரதமர் உதிர்த்த முத்து "கூட்டணி கட்சி மந்திரி அவர் அதனால்
என்னால் கட்டுபடுத்தமுடியவில்லை" என்றார் நமது ஹார்வார்டு பட்டதாரி
பிரதமர்...
ஆனால் நிலக்கரி ஊழல் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் நிலக்கரி அமைச்சகம் இருந்தபொழுதுதான்
நடந்தது. அதற்கு நமது நிதி மந்திரி சொன்ன பதில் சுரங்கம் மட்டுமே
ஓதுக்கப்பட்டுள்ளது கனிமம் இன்னும் வெட்டியெடுக்கப்படவில்லை அதனால் இங்கு ஊழல்
என்பதற்கு வாய்ப்பு இல்லை என வாய்பாட்டு பாடுகிறார். இன்று வரை முறைகேடாக
ஓதுக்கப்பட்ட சுரங்கம் மீண்டும் திருப்பி வாங்கப்படவில்லை நண்பர்களே...
மேலும்
நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டில் வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இருக்கும்பொழுதே அது
சம்பந்தபட்ட கோப்புகள் காணாமல் போயிருப்பது சம்பந்தமாக எதிர்கட்சிகள் கேள்வி
கேட்டபொழுது நமது பிரதமர் சொன்ன பதில் " நான் வாட்ச்மேன் அல்ல அதை பாதுகாப்பதற்கு" என்கிறார். இவருக்கு நிச்சயமாக தெரியுமா அல்லது இல்லையா பிரதமர் பதவியின் பொறுப்பு என்னவேண்டு என்று...
பிரதமர்தான் இந்த தேசத்தின் செயல்தலைவர் இவரே நாட்டின் அனைத்து விளைவுகளுக்கும்
பொறுப்பு... தலைமை என்பதன் அர்த்தம் அவருக்கு தெரியாது... அவருக்கு அதன் அர்த்ததை நாம் உணர்த்தவேண்டாமா என் நண்பர்களே...
இவர் மட்டுமா ஆணவமாக
பேசுகிறார், இவரது மந்திரிகளும்தான் அனைத்து விதமான மந்திரிகளுக்கும் எதிராக ஊழல்
குற்றச்சாட்டு, சில முக்கிய எம்பிக்களுக்கு எதிராக கிரிமினல் மற்றும்
கற்பழிப்பு வழக்குகளும் உள்ளது ஆனால் வழக்கம் போல் குற்றவாளிகளே நீதி வழங்கவேண்டிய
இடத்தில் இருப்பதால் எளிதில் தப்புகிறார்கள்...
ஊழல்
மட்டுமா தவறான பொருளாதார கொள்கைகள், தவறான வெளியுறவு கொள்கைகள் மற்றும் கொள்கை
முடிவுகள்,ஓட்டரசியல் சார்ந்த காஜானாவை காலி பண்ணும் அவசர கோல மணிமேகலையின்
அட்சயபாத்திரம் போன்ற திட்டங்கள்... அவர்களின் பொறுப்பற்ற ஆட்சியும்,
அகங்காரமும், ஆணவமும், தான்தோன்றித்தனமும், செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளாமல்
அவர்கள் செய்ததுதான் சரி என வாதிடுவதும் களையப்படவேண்டும்
ஆம் தொடர்ச்சியாக
ஆண்டதினால் வந்த ஆணவம் தந்த தைரியத்தினால்தான் ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்
பொழுதெல்லாம் எதற்கும் வாய் திறவாத பிரதம மந்திரி 2004ல் மக்கள்
பிஜேபியை விரட்டிவிட்டதாகவும் தங்களை ஆள லைசன்சு கொடுத்ததாகவும் மீண்டும் மீண்டும்
கூறுகிறார், எதற்கு மக்கள் இவர்களுக்கு லைசுன்சு கொடுத்தனர்,
கொள்ளையடிக்கவா???
மேலும் இவரது வாதமே முழுக்க
முழுக்க தவறு என்பேன் அந்த தேர்தலில் காங்கிரசு 400சீட்டுகளில் போட்டியிட்டு 145
சீட்டுகளையே வென்றது. அப்படியெனில் வெற்றி சதவீதம் 36.25, எதிர்தரப்பான பிஜேபி 368
சீட்டுகளில் போட்டியிட்டு 138 சீட்டுகளை வென்றது, வெற்றி சதவீதம் 37.91.
மேலும் காங்கிரசு கூட்டணி 218 சீட்டுகளையும், பிஜேபி கூட்டணி 181
சீட்டுக்களையுமே பெற்றிருந்தது. பாழாய்போன கம்யூனிசடுகளும், சாதீய சக்திகளான
முலாயம், மாயாவதி போன்றோரின் கேடு கெட்ட அரசியல் தந்திரத்தினால்தான் (ஆம்!
மாநிலத்தில் இவர்கள் காங்கிரசை எதிர்ப்பார்களாம், மத்தியில் ஆதரிப்பார்களாம்)
ஆட்சியமைக்க முடிந்தது. ஆக மக்கள் யாருக்கும்
ஆள லைசன்சு கொடுக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.
இந்தியாவில் மாறி
மாறிஆட்சிக்கு வரும் மாநிலங்களான கேரளா(காங்கிரசு VS கம்யூனிஸ்டு), தமிழ்நாடு
(திமுக VS அதிமுக), பஞ்சாப் ( காங்கிரசு VS அகாலிதளம் + பிஜேபி)ஆகியன
குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது மற்ற மாநிலங்களை விட ஓப்பிட்ட அளவில்...
ஆக இந்த
காரணங்களுக்காகவது காங்கிரசு இந்த முறை தள்ளிவைக்கப்படவேண்டும். அப்பொழுதான்
அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்ய முயல்வர்.
சரி காங்கிரசு வேண்டாம் என
முடிவு பண்ணிவிட்டால் வேறு யாரைஆதரிப்பது கம்யூனிஸ்டுகளையா, மாயாவதியையா, முலாயமையா,
மம்தாவையா, நிதிஷ்குமாரையா, லாலுவையா, பவாரையா... இப்பொழுது சொல்லுங்கள் நண்பர்களே
மேலுள்ளவர்களை விட பிஜேபி கொஞ்சம் பெட்டர்தானே...
சரி இன்று பிஜேபியில் அத்வானியும், மோடியும்தான் கட்சிசார்பாகவும் மக்கள் மத்தியுலும் முன்னனியில் உள்ளனர். அத்வானியை விட மோடியிடமே இளைஞர்கள் கூட்டம் எளிதில் கவரப்படுகிறது, அதற்கு பின்னர் வேறு சில சங்கதிகள் உள்ளது என்றாலும் அது பற்றி இப்பொழுது பேச வேண்டாம்.
மோடிக்கு நாங்கள் கொடி பிடிக்க விரும்பவில்லை, நாங்கள் மோடிதான் ஆள வேண்டுமென அடம்பிடிக்கவில்லை, ஆனால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்காவது இந்த முறை காங்கிரசு ஓதுக்கப்படவேண்டும்.
மோடி என்றவுடன் மதவாதம் மதவாதம் எனக்கூறும் நம்முடைய மாற்று மத சகோதரர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி, மோதி ஆட்சிக்கு வந்தால் மதகலவரம் வரும் கூறும் நண்பர்களே, நீங்கள் என் பக்கத்து வீடு உங்கள் வீட்டில் தீ வைக்கப்படுவது என்பது என்னை மீறி நடக்கவேண்டும் அப்படியும் நடந்தால் அந்த தீ என் வீட்டினையும் சேர்த்து பற்றிக் கொள்ளும் என்பதை நான் நன்கு அறிவேன், நாம் மாமன் மச்சான்கள் உன்னை பரிதவிக்கவிட்டு என்னால் எப்படி ஒரு பிடி கவளம் உண்ண முடியும் சகோதரனே, எந்த மனசாட்சி உள்ளவனும் அதை பண்ண மாட்டான், ஆதலால் இந்த முறை நாம் காங்கிரசுவின் சதியை முறியடிக்க ஒன்று சேர்வோம். வா என் சகோதரா என் கைகள் உன் கைகளோடு கரம் கோர்க்க காத்திருக்கிறது, கையை கழுவிவிடுவோம் இந்த முறை நாம் அப்படி செய்யத் தவறுமேயோமெனில் தவறான நிர்வாகத்தினால் நாம் நிர்மூலமாக்கப்படுவது நிதர்சனம் என் சகோதரா, இது தீர்க்கதரிசனம் அல்ல கடைசி அறைகூவல்...
பச்சபுள்ள மன்னாரு: சரி லாவணி பாடுவது என்று முடிவு செய்து விட்டீர்களோ இல்லையோ, மோடியை பற்றி தொடர்ச்சியாக கட்டுரை வரைவீர்களா? அவரை பற்றி வரும் எண்ணற்ற தகவல்களில் எது உண்மை எது பொய் என்றுரைப்பீர்களா? அது சரி அது என்ன கட்டுரை முடிவில் காங்கிரசின் சதியை முறியடிப்போம் என்று கூறியிருக்கிறீர்களே, அது என்ன???
மேலும் பிரதமர் கனவிலிருக்கும் தலைவர்களில் பெயர்களில் ஏன் நமது முதல்வர் அம்மா பெயரினை விட்டு வீட்டிர்கள், அப்படியெனில் அவர் ரேசில் இல்லையா...
குறிஞ்சி: அதுவரை குறிஞ்சியோடு இணைந்திருங்கள், மேலதிக தகவல்களுடன் வருகிறோம்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக