சென்னைக்கு
வாழ்த்துக்கள்,
வரலாற்றினில் எப்பொழுது ஒரு நகரம் கனவு
நகரமாகிறது என்று பார்த்தால், பல பேரின் கனவை எந்த நகரம் நனவாக்கியதோ அந்த நகரமே
கனவு நகரமாகிறது. சென்னையும் கனவு நகரம்தான் இன்று வரை.
வந்தாரை எல்லாம் வாழ
வைத்தது. கடும் உழைப்பை போட தயங்காதவர்களின் கரத்தை வலுப்படுத்தியது சென்னை.
வெறும் கைகளோடு வந்தவர்கள் எல்லாம் கை நிறைய சம்பாதிக்க உதவியது.
ஆயினும் இன்றைய நிதர்சனம் முகத்தில் அறைகிறது. இது நகரமா இல்லை நரகமா என்று????
சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறிப்பாக நிலத்தடி நீர் பிரச்சினை போர்கால வேகத்தில் சரி செய்யப்படவேண்டிய ஒன்று. சாலை வசதிகள், மழை நீர் வடிகால் வசதிகள் ஓர் சர்வதேச நகரத்திற்கு ஏற்றாற் போல மாற்றப்பட வேண்டிய ஓன்று, சாலைகள்தோறும் பூங்காக்கள், ஏரிகள் புத்தம் புதிய கால்வாய்கள் ஏற்படுத்தபட வேண்டும்.
எம்மைக் கேட்டால் சென்னையின் மத்திய பகுதியை அரசாங்கமே எடுத்துக் கொண்டு அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சர்வதேச அடுக்கு மாடி குடிவளாகத்தினை ஏற்படுத்தி தரலாம். பணம் உள்ள மனிதர்கள் அனுபவிக்கும் வசதி சாமன்யனுக்கும் போய் சேரவேண்டுமெனில் சிங்கப்பூர், பிஜிங், ஹாங்காங் போன்று திட்டமிட்டு நகரை வடிவமைக்க வேண்டும்.
யார் பூனைக்கு மணி கட்டுவார்கள் என்று பார்ப்போம்...
மேலே
கூறியவை 2013ல் இதே நாளில் ஆகத்து 22ல் குறிஞ்சியில் எழுதியததாகும். அப்பொழுது
அடுக்குமாடி குடியிருப்பினை கட்டி சென்னையின் இடநெருக்கடிக்கு தீர்வு காணலாம் என்று எழுதியிருந்தோம். இப்பொழுது
மவுலிவாக்கம் சம்பவம் அந்த கனவுக்கும் உலைவைத்துவிட்டது. ஆக எங்கும் புரையோடிப்போன
ஊழல் எனும் பெருச்சாளியை ஒழிக்கவேண்டும். முதலில் நாம் குடிநீர் ஆதாரமான குளம்,
ஏரி மற்றும் ஆறு போன்றவற்றையும், விவசாயநிலங்களை ஆக்கிரமித்து
எழுப்பும் கட்டுமானங்களை புறக்கணிக்கவேண்டும் என்ற சபதம் மேற்கொள்வோம். ஏனெனில் இதுவே நாம் எதிர்கால சந்ததியனருக்காக விட்டுச்செல்லும்
ஆரோக்கியமான சொத்து ஆகும்.
நீங்கள் நினைக்கலாம் என்
புள்ளங்களுக்கு தேவையான சொத்துக்களை நான் வைத்திருக்கின்றேன்,
ஆகவே எனக்கு எதுவும் கவலை இல்லை என்று நம்பவும் செய்யலாம், ஆனால் உங்க வாரிசுகளை விட அதிதிறமைசாலிகள் எதிர்காலத்தில் தோன்றலாம். அப்பொழுது உங்கள் பூர்விக சொத்துக்கள்
அவர்களை காப்பாற்றாது. இயற்கையும், இந்த பாலாய்போன சமூகமுமே உங்கள் வாரிசுகளுக்கு
கைகொடுத்து காப்பாற்ற நேரிடும். அப்படிப்பட்ட இயற்கையும் சமூகமும் சீரழிய நீங்களும் ஒரு காரணமெனில் எனில் அவர்களை யார் காப்பாற்றநேரிடும்?.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக