வெள்ளி, 5 ஜூலை, 2013

வங்கி ஆரம்பிக்கலையோ, ஆரம்பிக்கலையோ?!?!


இ​து வரமா சாபமா எனப் போக போகத்  தெரியும், இது நெருப்பு என்று ஆளும் வர்க்கத்தினருக்கும் புரியும்.  

Question கோய்ந்து: எனக்கு ஓர் உண்மை தெரிந்து ஆகனும்,  70களில் இந்திரா காந்தி அம்மையார் 14 வங்கிகளை பொதுவுடைமை ஆக்கியபோது சொன்னது, "மோனாபாலியை (தனிநபர் ஆதிக்கம்) ஒழிப்பதற்காகவும் கடைநிலை மனிதனின் தேவையை பூர்த்தி செய்யவும் தனியார் முதலாளிகடமிருந்து வங்கிகளை பொதுவுடமை ஆக்குகிறோம் என்றார்".

ஆ​னால் இப்பொழுது அன்னையின்ஆட்சியில் மீண்டும் முதலாளிகள் நமது வைப்பு நிதியை வைத்து தங்களது தொழிற்சாலைகளுக்கு தேவையான நிதியை  சொற்ப வட்டியில் திரட்டி மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவர். ஏதோ இவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவின் மூலமே பெரும் செல்வம் ஈட்டியதாக காட்டுவர், ஆம்ஆத்மி இலவசம் வாங்கியே வழக்கொழிந்து போவர்.

இ​ந்தியாவில் மட்டுமே அம்பானிக்களும் டாட்டாக்களும் பிர்லாக்களும் ஊறுகாய் முதல் வானுர்தி வணிகம் வரை ஈடுபடுவர். அ​மெரிக்காவைப் போன்று ஓர் தொழிலைச் சார்ந்த தொழில் அதிபர்கள் மற்றுமொரு தொழிலில் ஈடுபட முடியாது என்ற சட்டம் என்று வருகிறதோ அன்றே இந்தியாவின் அனைத்து தரப்பு இளைஞர்களும் தொழில் தொடங்க முடியும் இந்தியாவும் வல்லரசாகும். எ​ன்றாவது பில்கேட்ஸ் மென்பொருள் வணிகத்தை  தவிர வேறு வணிகம் பண்ணி பார்த்திருக்கிறோமா இல்லை வாரன் பப்பெட்ஸ் பங்கு வணிகத்தை தவிர வேறு வணிகம் பண்ணி பார்த்திருக்கிறோமா?  இதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையிலா என் சகோதரன் இருக்கிறான், 

​எனிவே நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் நாம் மட்டும் ஆளும் பரம்பரையாக இருந்து தொலைப்போம் எனும் அரசியல்வியாதிகளுக்கு கூடிய விரைவில் முடிவு கட்டுவோம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக