சேது சமுத்திர திட்டம் 19ம் நூற்றாண்டில் திட்டமிடும்பொழுது தூத்துக்குடியில் துறைமுகம் இல்லை, இலங்கையில் கொழும்பு துறைமுகமும் இந்த அளவுக்கு வளரவில்லை, ஹம்பன்தோட்டா துறைமுகம் வரவில்லை அப்பொழுது இந்த கணவாய் வந்தால் தூத்துக்குடியில் ஓரு துறைமுகம் அமைக்கலாம் அதன்மூலம் அந்த பிரதேசமும் வளம் பெறலாம் என்பது கனவு. ஆனால் இன்றோ மேற்கூறிய துறைமுகம் மூன்றும் வந்துவிட்டது எனவே சேது சமுத்திர திட்டம் வந்தால்தான் தூத்துகுடி முன்னேறும் என்பது மாயமாலம். கீழேயுள்ள நண்பர் பாலாவின் கூற்று அடியேனின் கருத்தும் ஆகும்.
இன்று விகடனில் கருத்து பகுதியில் எழுதியிருக்கும் நண்பர் பாலாவின் கூற்றினை நாம் பார்ப்போம்.
"பம்பாய், மங்களூர், கொச்சி மற்றும் மேற்கத்திய துறைமுகங்களில் இருந்து சென்னை, விசாகபட்டினம், கல்கத்தா போன்ற கிழக்கு கரை துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் பயண தூரம் குறையும், எனவே அனைத்து கப்பல்களும் தூத்துக்குடி துறைமுகம் வந்து செல்வதையே விரும்பும் என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை.
இதற்காக 12 மீட்டர் (40 அடி) ஆழம் உடைய ஒரு கால்வாயை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம்.
1961 முதலாக மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இந்த கால்வாயை உருவாக்க பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டு இப்போது ராமர் சேதுவை உடைத்துத்தான் ஆக வேண்டும் என்ற முடிவை திமுக போன்றவை தெரிவிக்கின்றன.
30,000 டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக போக முடியும் என்பதும், அது கூட தொடர்ச்சியாக மணலை வாரி கொட்டிக்கொண்டே இருந்தால்தான் சாத்தியம் என்பதும் இந்த கால்வாய் மூலம் கப்பல்கள் மிக மிக மெதுவாகவே செல்ல முடியும் என்பதுவும் கொச்சி, திருகோணமலை போன்ற இயற்கையான பாதுகாப்பும் வசதிகளும் உடைய துறைமுகங்களை விட்டுவிட்டு தூத்துக்குடிக்கு கப்பல்கள் வர காரணமில்லை என்பதும் இந்த திட்டத்தின் குறைபாடுகள். மேலும் இந்தியாவுக்கு வரும் எந்த கப்பலும் கல்கத்தா, சென்னை, பம்பாய் துறைமுகங்களுக்கு வருவதை தடுக்கஇயலாது. காரணம் தொழில்நகரங்களின் அருகாமை.
இன்றைய 1,50,000 டன் கப்பல்கள் இதன் வழியே செல்லும் வாய்ப்பே இல்லை. கடலில் ஏற்படும் ஒரே ஒரு சுழற்ச்சி இந்த கால்வாயை முழுதுமாக செயலிழக்க செய்துவிடும். .
மொத்தத்தில் இதன் மூலம் தூத்துக்குடி பகுதி பெரும் வளர்ச்சி அடையும் என்பது கட்டுக்கதை. சென்னை துறைமுகத்தின் ஒரு பகுதி வியாபாரம் தூத்துக்குடிக்கு மாறக்கூடும். அவ்வளவே.
இந்த கால்வாயில் மண்வாரும் ஒப்பந்தம் எடுப்பவருக்கு மட்டுமே இதனால் ஆதாயம் இருக்கும்".

அதே விகடனில் மற்றுமொரு நண்பர் விஸ்வநாதன் எழுதியிருக்கும் கருத்தினையும் பார்த்திடுவோம்.
"சேது கால்வாய்த்திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம்
இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால் நாம் பல பயன்களை பெற வாய்ப்புள்ளன.
கடல்வழி பயணச்செலவு குறைவால் ஏற்றுமதி திறன் கூடும்.
இறக்குமதிச் செலவு குறைவால் தொழிற்சாலைகள் பொருட்களின் விலை குறைப்புக்கு வாய்ப்பு.
சரக்குக்கப்பல் போக்குவரத்து அதிகரிப்பால் துறைமுகங்களில் வேலைவாய்ப்பு கூடும்.
மீன்பிடி படகுகள் கப்பல்கள் தடையில்லாமல் சென்றுவர வாய்ப்பு கூடுவதால் மீன்பிடி தொழிலில் முன்னேற்றம்.
பாண்டி, கடலூர், நாகை துறைமுகங்கள் முன்னேற்றம்.
நாகை முதல் தூத்துக்குடி வரை மீன்பிடி துறைமுகங்கள் வசதி கூடுவதால் மீனவர்கள் பயன் பெறுவர்.
நாட்டின் கடலோர பாதுகாப்பு மேம்படும்.
தூத்துக்குடியில் Transhipment செய்யும் வாய்ப்பின் பயனாக இனி வெளிநாட்டில் செய்வது தவிர்க்கப்படுவதால் வெளிச்செலாவணி சேமிப்பு அதிகரிப்பு
இப்படி பல நன்மைகள் அளிக்கும் அருமையான திட்டம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் இந்து அமைப்புகளின் தேவையற்ற விதண்டாவாதம் போன்றவற்றால் இத்திட்டம் முடக்கப்படக்கூடாது.
1994ல் இத்திட்டத்தின் 1983ம் ஆண்டின் திட்டத்தை புதுப்பிக்க Pallavan Transport Consultancy Services இடம் ஒப்படைத்து 1996ல் அறிக்கை பெறப்பட்டது.
அன்றைய பா ஜ க அரசு ரூ 760 கோடி ஒதுக்கி இத்திட்டத்தை மூன்று ஆண்டுகளில் முடிப்பதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் உறுதியளித்தார்.
பிரதமர் வாஜ்பாயும் உறுதிமொழி அளித்தார்
2000 - 2001 பட்ஜெட்டில் யஷ்வந்த் சின்ஹா மேற்கொண்டு ஆராய நிதி ஒதுக்கீடு செய்தார்.
சேது சமுத்திரம் திட்டத்த்திற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் எல் கே அத்வானிதான் ஒப்புதல் அளித்தார்.
மத உணர்வுகளுக்கு ஊறுவிளைவிப்பதாக கூறப்படுகிறது
காணப்படும் பாலம் போன்ற பகுதி சுமார் 1 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஆராய்ச்சி சொல்கிறது ராமாயணமோ சுமார் 5000 ஆண்டு!
சரி ராமர் பாலத்தை ஸ்ரீ ராமரே உடைத்துவிட்டார் என்று கம்ப ராமாயணமும் தெலுங்கிலுள்ள ஒரு ராமாயணமும் சொல்கிறதாமே!".

விஸ்வநாதன் கூறியவாறு மீன்பிடிதொழில் வளருமா, என்னைக் கேட்டால் ஏற்கனவே ராமநாதபுரம் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் பிடிபட்டு செல்கின்றனர், எனவே வட மாவட்ட மீனவர்களுக்கு இங்கு வரபயப்படுவர், இதனால் வட மாவட்ட மீனவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. ஆயினும் இவரின் கூற்றில் என்னால் ஏற்க கூடிய கருத்து இந்திய கப்பல்படை பாக் ஜலசந்தியை எளிதாக கடக்கலாம் எனவே பாதுகாப்பு பலப்படும் என்பது மட்டுமே. மற்றபடி அனைத்தும் ப்லாப்லாப்லாப்லா...
இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவது தமிழகத்தின் இருபெரும் அரசியல்வாதிகளின் தவறான வாதத்தினை மட்டுமே. ஆம் இரண்டு பேருமே அறிவியல் ரீதியாக இந்த திட்டத்தினை விவாதிக்க விரும்பவில்லை மதரீதியிலே விவாதிக்கிறார்கள். அது சரி மக்களிடம் அறிவியல் பூர்வமாக திட்டங்களை விவாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவன் விழித்துக்கொள்வான் அப்புறம் அவர்களுக்கு ஏது இங்கு இடம். பெட்டியை அல்லவா கட்டவேண்டும்.
நான் கூறவிரும்புவது தென்தமிழகம் முன்னேற வேண்டுமானால் சென்னையிலிருந்து கன்னியாகுமரி இரு வழி ரயில் பாதையை உடனே அமல்படுத்தவேண்டும், மேலும் கோயம்புத்தூர் - தூத்துக்குடி இருப்புபாதை திட்டத்தினையும், கோயம்புத்தூர் - நாகப்பட்டினம் இருப்புபாதை திட்டத்தினையையும் அமல்படுத்தவேண்டும். மதுரை விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக அங்கீகாரம் வழங்கி சென்னையில் வரும் காலத்தில் கால் பதிக்கவுள்ள தொழிற்சாலைகளை ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய வறண்ட பூமியில் ஆரம்பிக்க அரசாங்கம் ஆதரவு தரலாம். அதை விட்டு விட்டு கடலை தோண்டினால்தான் ஆகாசத்திற்கு பாலம் கட்டலாம் எனக் கூறும் தமிழினத் தலைவரை என்ன சொல்ல???
நாம் அரசாங்கத்தினை எதிர்க்கவில்லை அரசியல் பண்ணும் அரசியல்வியாதிகளைத்தான் எதிர்க்கின்றோம்.
"QUESTION கோயிந்து": கடந்த 2011ல் தற்போதய அரசாங்கம் தமிழகத்தில் அமைந்த புதிதில் பிரான்சை சார்ந்த கார்தொழிற்சாலை சென்னை அருகில் சுமார் 1000ஏக்கர் ஓரே இடத்தில் கிடைக்கவில்லை என்று குஜராத்துக்கு சென்றதாக நியாபகம்,ஆனால் திருநெல்வேலிக்கு தெற்கே நான்குநேரியிலும் வடக்கே கங்கைகொண்டானிலும் சுமார் 4000ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்காக சிப்காட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. என்ன செய்கிறார்கள் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்...
ஐயா, காமராசர் முதல்வராக இருந்த பொழுது நடந்த சம்பவம் பெல் தொழிற்சாலை அமைப்பதற்காக மத்திய அரசு அதிகாரிகள் தமிழக அதிகாரிகளோடு தமிழகம் முழுவது சுற்றி பார்த்த பிறகு இடம் கிடைக்கவில்லை எனவே வட்நாட்டுக்கு செல்கின்றோம் என்றனர். தமிழக அதிகாரிகளும் அதற்கு ஓத்து ஓதினர். அப்பொழுது காமராசர் அவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் என்ன மாதிரி இடம் பார்க்கிறீர்கள் என்றார், அவர்களோ ஆண்டு முழுவதும் தண்ணீர் வேண்டும் என்றனர், அப்படியானால் திருச்சிக்கு அருகே போய் பாருங்கள் என்றார் இப்படித்தான் பெல் தொழிற்சாலை தமிழகத்திற்கு வந்தது. அவர் கான்வென்டில் படித்தவர் அல்ல, இலக்கணங்கள் படைத்தவரும் அல்ல ஆயினும் தமிழகத்தின் பூகோள அறிவு அவரிடம் இருந்தது.
இப்பொழுது சொல்லுங்கள் யார் மக்கள் தலைவர் என்று? மக்களின் தேவை அறிந்தால் போதும் மக்கள் ஆட்சி நடத்தலாம் அதைவிட்டுவிட்டு ஹார்வேர்டு பட்டதாரிகள் கதையெல்லாம் இங்கே சந்தி சிரிக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக