முதலில் திட்டக்குழு பற்றி பார்ப்போம்:
ஒவ்வொரு வருடமும் மத்திய திட்டக் குழு அனைத்து மாநிலங்களுக்கும் திட்ட நிதி வழங்கும், அந்த நிதியானது மாநிலத்திலிருந்து மத்திய அரசிற்கு செல்லும் வரி வருவாய் மற்றும் முந்தைய வருடங்களில் அந்தந்த மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய ஆண்டில் ஓதுக்கப்பட்ட திட்ட நிதியை எப்படி செலவழித்தனர் மேலும் அந்தந்த மாநிலங்களின் வரும் வருடத்திற்கான நிதி தேவைகளின் மதிப்பிடுகள் போன்ற அனைத்து காரணிகளையும் ஆய்விற்கு எடுத்துகொண்டு தேவையான நிதியை மத்திய திட்டக்குழு ஓதுக்கும்.
சரி நம்ம செய்திக்கு வருவோம்:
குஜராத்:
2013-14 ஆண்டிற்கு குஜராத் வேண்டிய திட்ட மதிப்பீடு ரூ58500 கோடியே ஆகும். ஆனால் 2013-14 ஆண்டிற்கு குஜராத் மாநிலத்துக்கு ரூ59 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய திட்டக் குழு.
செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா, குஜராத் மாநிலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குஜராரத் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் குஜராத் மாநிலம் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதால் கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு :
2013-14 ஆண்டிற்கு தமிழ்நாடு வேண்டிய திட்ட மதிப்பீடு ரூ37000 கோடி ஆகும், ஆனால் 2013-14 ஆண்டிற்கு தமிழ்நாடு மாநிலத்துக்கு ரூ37128 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய திட்டக்குழு.
கடந்த முறை(2012-13) தமிழகத்திற்கு ரூ28000 கோடி வழங்கப்பட்டது.
பீகார் :
GDP ஓர் ஓப்பீடு:
தனி நபர் வருமானம் ஒப்பிடூ:
பொருளாதார சுதந்திர குறியீடு(Economic freedom index):
பொருளாதார சுதந்திர குறியீடு என்பது 184 நாடுகளில் பத்து குறியிடுகளை மதிப்பீடு செய்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்(World street journal) மற்றும் பாரம்பரிய அறக்கட்டளை(Heritage foundation) ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
அந்த குறியீடுகள் யாது:
1. வர்த்தகம் சுதந்திரம் (Trade freedom)
2. வாணிப சுதந்திரம்(Business freedom)
3. நிதி சுதந்திரம், (Fiscal Freedom)
4. அரசாங்க செலவினம்(Government expenditure)
5. நாணய சுதந்திரம்(Monetary freedom)
6. முதலீட்டு சுதந்திரம்(Investment freedom)
7. சொத்துரிமை(property right)
8 & 9. ஊழல் மற்றும் தொழிலாளிகள் சுதந்திரம்.(freedom from corruption and labour freedm)
மேலுள்ள குறியிடுகள் பின்வரும் மேக்ரோ பொருளாதார காரணிகளுக்கு எதிராக பரிசீலனை செய்யபட்டு முடிவு செய்யபடுகிறது. கட்டண விகிதம், வருமான வரி விகிதம், கார்ப்பரேட் வரி விகிதம், மக்கள் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், வேலையின்மை விகிதம், பணவீக்கம் விகிதம், அன்னிய நேரடி முதலீடு உள்வரவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரிச்சுமையின் சதவீதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க செலவீனத்தின் சதவீதம் என அடங்கும்.
பொருளாதார சுதந்திர குறியீடு பொருத்தவரையில் 2012ல் இந்தியா 123வது இடத்தையை உலகளவில் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகனத்துறையில் தமிழகம் Vs குஜராத்:
இங்கே பீகாருக்கு வழியே இல்லை அதனால் தவிர்த்து விடுவோம்.
இங்கே பீகாருக்கு வழியே இல்லை அதனால் தவிர்த்து விடுவோம்.
Question கோயிந்து: யார் சாதித்தது என்பதை உங்களிடமே விட்டு விடுகிறோம் நீங்களே முடிவு செய்யுங்கள்!








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக