புதன், 19 ஜூன், 2013

வெள்ளையனே உள்ளே வா!

வெள்ளையனே உள்ளே வா!

எ​ன்னங்க பார்க்கிறீங்க, நியாயமா பார்த்தா வெள்ளையனே வெளியேறுனுத்தான் இவன் கோசம் போடனும்னா...

​பின்ன என்னங்க காந்திஜியே விடுதலைக்கு பிறகு காங்கிரசு கட்சியை கலைச்சுடனும்னு  சொல்லிட்டார், பிறகு என்ன ம...க்கு நாங்க மட்டும் அவர் கொள்கையை கடைபிடிக்கனும், இப்ப இருக்கிறது இந்தி.. காங்கிரசு அதனால நாங்க எங்க கோசத்தையும் மாத்திட்டம்லா...ஆமாங்க பின் வரும் துறையில் எல்லாம் நாங்க வெள்ளையனை வந்து முதலீடு செய்ய சொல்லி லாபம் பார்க்க சொல்வோம்ல

ஏன்னா பாருங்க நம்ம பய புள்ளகளுக்கு ஊறுகாய் கூட ஒ​ழுங்காய் போடதெரியாது அதான் வால்மார்ட் அண்ணாச்சிய வரசொல்லி இருக்கோம்.  

பின்ன பாருங்க LIC பயபுள்ள லாப கணக்கை எல்லாம் இந்திய அரசாங்கத்தின் கஜானாவுல போய் கொட்டுது, அப்புறம் நாங்க இதுக்கு இங்கிட்டு ஆட்சி செய்ஞ்சிக்கிட்டு அதான் பார்த்தோம் அம்புட்டு வெள்ளைக்கார காப்பீட்டு கம்பெனிகளையும் உள்ள வர பிளான் போட்டாச்சுல...






உலகத்துல உள்ள எல்லா வங்கியும் திவாலாகது, ஆனா பாருங்க இந்திய வங்கிகள் மட்டும் திவாலாக மாட்டேங்குது அதான் அவனுகள வரசொல்லி இருக்கோம்.

நல்ல லாபம் உள்ள  நேரம், ரூட்களை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுத்துட்டு ஏர் இந்தியாவுடைய விமானங்கள் அனைத்தும் பழைய பேரீச்சம் பழத்துக்கு போடலாம்னு இருக்கோம்.

​மீடியாவுல பொருத்தவரை நம்ம பயபுள்ளங்கதான் ஆனாலும் அப்ப உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்தி போட்டு போடுதாய்ங்க அதான் ஓட்டுமொத்தமாய் நம்ம அங்காளி பங்காளி பயபுள்ளங்களை வரசொல்லிட்டேன் இப்புடி சொல்லிக்கிட்டே போலாம் நம்ம சாதனைகளை, இதெல்லாம் இப்ப பிளானிங்கல இருக்கு இதை செயல்படுத்துனும்னா அடுத்த தபா நம்மளய ஆட்சியல குந்த வச்சிட்டா, எத்தனை ஊழல் ​குற்றச்சாட்டு வந்தாலும் அசரமாட்டோம்ல என்ன நான் சொல்லுறது..

​Question கோயிந்து: நீ ஏன் நயினா கவலை படற இந்த பயபுள்ளங்க எல்லாம் ஓன்னா சேரவே மாட்டானுங்க நீதான் கடைசி வரைக்கும் வெற்றி பெறுவ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக