செவ்வாய், 11 ஜூன், 2013

காடுகளை அழிப்போம்!


என்ன பார்க்கிறீங்க இதுதாங்க இப்பொதைய அரசாங்கங்களின் முழுமுதற் கடமை.

​வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை  தனியார் மற்றும் பொதுதுறை நிறுவனங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் தாரை வார்த்து கொண்டிருக்கிறது.  இந்தியா முழுவதும் தொழிற்சாலையின் பெயரில் தினமும் 335ஏக்கர் வன நிலம் அழிக்கப்படுகின்றது.  நிலக்கரி  சுரங்கங்களும், அனல் மின்நிலையங்களும் கட்ட காடுகளை அழிக்கின்றனர். அதை எதிர்க்கும் பூர்வ குடிகளான வனவாசிகளுக்கு நக்சலைட்டு பட்டம் கட்டப்பட்டு ஓழிக்கப்படுகின்றனர்.

​கடந்த 7 மாதங்களில் தாரை வார்க்கப்பட்ட வன நிலத்தின் அளவு, இது தகவல் அறியும் உரிமை சட்டத்தால் பெறப்பட்ட தகவல் ஆகும்.


Question கோயிந்து: ராஜஸ்தானில் ஓர் கிராமத்தில் குழந்தைகள் பிறந்தாலும், யாராவது இறந்தாலும் மரம் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர், அது மாதிரி எதுனா திட்டம் கொண்டு வந்தால்தான் இனிமேல் இந்தியாவின் பசுமை நிலப்பரப்பு சதவீதத்தை கட்டி காக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக