இன்று பெரிதும் அத்வானிஜி நம் இணைய நண்பர்களால் கேலிப்பொருளாக விவாதிக்கப்படுகின்றார். அவர் பேராசை கொண்டவராகவும், செயல்திறன் அற்ற முதியவராகவும் விமர்சிக்கப்படுகின்றார். நாம் உண்மை என்னவென்று சிறிது பார்ப்போமா?
அவரால்தான் பாரதியஜனதா 2 நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து 100 சொச்சம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் வளர்ந்தது. பைரான்சிங்ஷெகாவத், அத்வானிஜி போன்றவர்கள் மிதிவண்டியிலே சென்று கட்சியை வளர்த்தவர்கள். அவர்கள் கொள்கை சார்ந்து கட்சியினை வளர்த்தாரே ஓழிய தனிமனிதர்களை சுற்றி அல்ல...
அவர் 90வயது முதியவர் இளைஞர்களால் தொடர்பு கொள்ள முடியாதவர் என்று போகிற போக்கில் கருத்துக்களை அள்ளி தெரித்துவிட்டு செல்கின்றனர் நமது நண்பர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது பிளாக்கில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார், பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் பங்கேற்க, நானும் சில நண்பர்களும் எங்களது கருத்துக்களை பதிவு செய்தோம் அது சில மாற்றங்களோடு அறிக்கையில் இடம்பெற்றது. இப்பொழுது சொல்லுங்கள் அவரால் உங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லையா இல்லை உங்களால் அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லையா என்று?
அவரது தனிப்பட்ட ஓழுக்கத்தினையும் யாரும் குறை சொல்லமுடியாது. இன்றளவும் உடலளவிலும், மனதளவிலும் அவரே யாருடைய உதவியுமின்றி தானே செயற்படுகின்றார்.
அத்வானிஜியின் சீரிய முயற்சியின் விளைவுகளே, இன்று இந்தியாவெங்கும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆதார் கார்ட் திட்டம் ஆகும். அதை 2002 வாக்கினிலே பெரும் அளவில் முன்னெடுத்து சென்றவர் மற்றும் இந்தியாவின் எல்லைப்புறமெங்கும் வேலி அமைப்பதின் மூலமே ஊடுருவலை பெரிதும் தடுக்க முடியும் என்று அதற்கான வேலையை முடுக்கிவிட்டவர்.
2011ல் இந்தியாடுடே நடத்திய கருத்துக்கணிப்பு சிறந்த உள்துறை அமைச்சர் யார் என்று:
அன்றே அத்வானிஜி சொன்னார் மன்மோகன்சிங் ஓர் ரப்பர் ஸ்டாம்பு, அவரால் எந்த முடிவும் தன்னிச்சையாக எடுக்கமுடியாது, 10 ஜன்பத்வாசிகளிடமே அனைத்து அதிகாரங்களூம் குவிந்துள்ளது என்று. அப்பொழுதும் இதே நண்பர்கள் கூட்டம் அத்வானிக்கு ஓர் பொருளாதார மேதையை மதிக்க தெரியவில்லை என்று குற்றம் சாட்டியது. ஆனால் இன்று உலகமே ஓப்புக்கொண்டுள்ளது மன்ணுமோகன்சிங்கின் திறமையை, இப்பொழுது சொல்லுங்கள் என் நண்பர்களே யாரிடம் செயல்திறனோ, முடிவெடுக்கும் திறனோ இல்லையென்று?
இதே மோதியை 2001 கோத்ரா கலவரத்திற்கு பின்பு வாஜ்பாயி அவர்கள் காவு கொடுக்க திட்டமிட்டார். அப்பொழுது அத்வானிஜியின் கரமே மோதியின் தலையினை காப்பாற்றியது.
2006ல் ஜின்னா பற்றிய அவர் உதிர்த்த கருத்துக்கள்("ஜின்னா மத சார்பற்றவர்") மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கியது, அதுவே அவரது வீழ்ச்சிக்கான முதல் படியாக யாம் பார்க்கின்றோம், சங்பரிவாரம் ஜின்னா குறித்து அவர் கூறிய கருத்துக்களை விரும்பவில்லை மேலும் இந்தியாவெங்கும் ஜின்னா பற்றி பேசுவதே காந்திக்கு செய்யும் துரோகம் என இதுகாரும் காங்கிரசால் கட்டமைக்கபபட்டிருந்தது. எம்மைக் கேட்டால் ஜின்னா என்பவர் பன்முக ஆளுமை கொண்ட மனிதர், அவரை பற்றி பிறிதொரு நாளில் விரிவாக பேசுவோம்.
இந்த சம்பவத்தால் பாடம் கற்றுக்கொண்ட மோதி சங்பரிவாரின் வெறுப்பை மீண்டும் சம்பாதிக்க விரும்பாமல் தெளிவாக கோத்ரா கலவரத்தை பற்றி பேச மறுக்கிறார்.
இங்கு மோதி எனும் பலூன் அவரது அடிபொடிகளால் மிகுதியாக காற்று ஊதப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டுள்ளது, உடனே நான் காங்கிரசுகாரன் என்றால் அதற்கு நான் பொறுப்பாகிவிடமுடியாது. அந்த பலூனின் காற்றினை இப்பொழுது இறக்க நான் விரும்பவில்லை ஏனெனில் அன்னை எனும் மாயமால மந்திரவாதியை அடக்க மோதி மஸ்தான் வித்தை தெரிந்த ஓருவர் தேவை, அந்த கலை அத்வானிஜிக்கு வராது என்பது எனது திண்ணம். அந்த ஓரு காரணத்துக்காக மட்டுமே அந்த பலூனை உயரே, உயரே பறக்க விடுகின்றேன்.
முகப்பக்கத்தையும் தாண்டி உலகம் உள்ளது நண்பர்களே, இன்றைய பத்திரிக்கை செய்தினையை அடிப்படையாக வைத்து ஒருவரது திறமை எப்படிப்பட்டது என்று முடிவுக்கு வராதீர்கள், ஏனென்றால் இவர்கள் பாரதியையோ அல்லது காந்தியினைப் போன்றோ உண்மையான பத்திரிக்கையாளர்கள் அல்ல காசுக்காக விலை போககூடியவர்கள். ஆக பத்திரிக்கையினை பார்த்து எந்த முடிவுக்கும் வராதீர்கள்.
பத்திரிக்கையின் தவறுகளுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு:
இன்று காலையில் இந்தியாவின் பிரபல ஆங்கில வார இதழில் ஓர் கட்டுரையினை படித்தேன், அதில் அத்வானி ஜி 1996, 1998, 1999-2004 என மூன்று முறை உள்துறை மந்திரி இலாகா வகித்ததாக தகவல், ஆனால் உண்மையென்னவென்றால் 1996ல் ஹவாலா மோசடியில் அவரது பெயரும் இழுக்கப்பட்டது, அதற்காக அவரோ வழக்கு முடிந்து குற்றச்சாட்டுகள் நீருபணம் ஆகாதாவரை தான் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை மேலும் எந்த பொறுப்பினையையும் வகிப்பதில்லை என்று முடிவெடுத்தார், பின்பு எப்படி அந்த வார இதழில் அப்படியொரு கட்டுரையை பதிவு செய்தனர் என்று எனக்கு தெரியவில்லை, தவறுகள் வருவது சகஜம் ஆனால் இந்தியாவின் சமகாலத்திய மிகப்பெரும் அரசியல் தலைவரின் வரலாறு தெரியாமல் எங்ஙனம் அவர்கள் அக்கட்டுரையை சமைத்தனர் என்பது எனக்கு புரியவில்லை.
பச்சபுள்ள மன்னாரு: இப்பொழுதைய பிரதமரோ அவரது இலாகாவில் ஊழல் நடந்தாலும் எனக்கு ஓன்றும் தெரியாது என வாய் மூடி மவுனித்து விடுகிறார், ஆனால் அத்வானிஜி அவர்கள் ஓர் குற்றச்சாட்டுக்கே தார்மீக பொறுப்பேற்று பதவி, தேர்தலில் இருந்து விலகி இருந்தவர், இவரையா நாம் பிரதமர் ஆகவிடாமல் தோற்கடித்தோம், ஆக நமக்கு இது தேவைதான்.
Question கோயிந்து: வாய பேசா பிரதமர், சிரிக்க தெரியாத பிரதமர் என்றெல்லாம் பெயரெடுத்த நரசிம்மராவ் அவர்களே 1992ல் நடந்த பொருளாதார பாய்ச்சலுக்கு பெரிதும் காரணம், ஆனால் இந்த மதி கெட்ட பத்திரிக்கையாளர்களின் மிகைப்படுத்தப்பட்ட பிம்பமே மன்னுமோகன்...
அத்வானிஜியின் ராசினாமா கடிதம்:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக