ஞானி இன்று முதல்வருக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவரம்:
முதல்வர்
அம்மா அவர்களுக்கு,
இந்த
கடிதம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை முடிவு
செய்தது பற்றியது.
உங்கள்
அரசாங்கம் மற்றும் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை எதிர்க்கிறீர்கள் ஆனால் மத்திய அரசு
வழக்கம் போல அதன் முடிவை நடத்த போகிறது.
நான்
உங்கள் அரசாங்கத்திற்கு இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். இந்த
பங்கின் விலை தமிழ்நாடு அரசுக்கு ஒரு அற்பம் என்று நான் நினைக்கின்றேன். நமக்கு நெய்வேலி
மின்சார கூட்டமைப்பில் ஒரு
பங்கு இருந்தால் மத்திய அரசு மற்றும் தனியார் முதலாளிகளின் கொள்ளையிலிருந்து அந்த நிர்வாகத்தை
காப்பாற்றுவதுடன் மட்டுமின்றி நமது உரிமையையும் நிலை நாட்டலாம் அதற்கு நாம் அதன் ஒரு
முக்கிய பங்குதாரர் ஆக வேண்டும்.
நான்
அவசரமாக இந்த பரிந்துரையை அளிக்கின்றேன் மேலும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி
ஞானி
தமிழ்
எழுத்தாளர் மற்றும் விமர்சகர்.
குறிப்பு:
இந்த கடிதம் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது கூடுமானவரை பொருள்
சேதாரமின்றி. இந்த விவரம் அனைத்து தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்ற காரணத்துக்காகவே
குறிஞ்சியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது, நன்றி ஞானி அவர்களே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக