ஞாயிறு, 23 ஜூன், 2013

கணினியே தெரியாதவர்களும் கலக்கலாம் வாருங்கள் விளையாடுவோம் … பகுதி 005

ஸ்பைரோகிராப் என்பது ஒரு விளையாட்டுச் சாதனம். கணித அடிப்படையில் விதவிதமான உருவங்களை உருவாக்கப் பயன்படுவது. பற்சக்கரங்களைப் போன்ற சிறு சிறு வட்டங்களை வைத்துக் கொண்டு வடிவங்களை உருவாக்க உதவுவது. இதைப் பயன்படுத்தி விளையாடுவதற்கு உங்களிடம் அந்தச் சக்கரங்கள் இருக்க வேண்டும். கோடுகளை வண்ண, வண்ணமாக வரைவதற்கு வண்ண, வண்ணப் பேனாக்கள் தேவைப்படும். அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் கணினியிலேயே விளையாடலாம். இதற்கு நீங்கள் கணிதம் அல்லது கணினித்துறையில் பெரிய வல்லுநராக இருக்க வேண்டியதில்லை.


ஸ்பைரோகிராப் என்பது எப்படி இருக்கும் என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறீர்களா?


இதில் உள்ள பெரிய வட்டம் வளையம் போல் இருக்கும். அதன் உள் மற்றும் வெளி ஓரங்களில் பல், பல்லாய் இருக்கும். சிறிய அளவில் சக்கரங்கள் போன்ற வேறு பல வட்டங்கள் இருக்கின்றன இல்லையா? அவற்றை எடுத்துப் பெரிய வளையத்தின் பற்களோடு பொருந்துகிற மாதிரி வைத்துக் கொள்ள வேண்டும். விருப்பமான வண்ணப் பேனாவை ஒரு துளைக்குள் நுழைத்துக் கொண்டு நகர்த்த வேண்டியதுதான். பற்சக்கரங்களின் தொடர்பு விட்டுவிலகிப் போய்விடாமல் பார்த்துக் கொண்டால் போதும். உங்களுக்கு விதவிதமான வடிவங்கள் கிடைக்கும்.


நீங்கள் பாட்டுக்கு வரைந்து தள்ளலாம். ஆனால்
காகிதம், பற்சக்கரங்கள், வண்ணப் பேனா என்று எதுவுமே இல்லாமல் கணினித் திரையில் இத்தகைய வடிவங்களை வரைய வேண்டும். முடியுமாஃ இந்தச் சவாலை நீங்கள் சந்திக்க வேண்டும்.
புதிதாக ஒரு விரிதாளைத் திறந்து கொள்ளுங்கள். அதில் படத்தில் காட்டியுள்ளபடியான எண்களை அடியுங்கள்.
R
r
o
t
x
y
5
1
8
1
-5.39972
7.563565
5
1
8
2
-10.0916
10.28494
5
1
8
3
-11.8828
7.605605
5
1
8
4
-7.73947
3.60939
5
1
8
5
0.31371
3.138739
5
1
8
6
6.912695
7.249517
5
1
8
7
8.123281
12.19061
5
1
8
8
4.888299
12.85044
இத்தகைய அட்டவணை ஒன்றை எப்படி வரைபடமாக வரையவேண்டும் என்பது தெரியுமா?
அட்டவணையைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்

Insert>Charts>Scatter
என்கிற வழியில் செல்லுங்கள்.
வரைபடத்தை வரைவதற்குக் கோடுகளைக் கொண்ட மாதிரி வடிவத்தைத் தேர்வு செய்யுங்கள். ஓகே கொடுங்கள்.
உங்களுக்கு ஓர் ஆரம்ப கட்ட வடிவம் கிடைக்கும்.
அட்டவணையில் உள்ள எண்களின் அடிப்படையில்தான் இந்த  வடிவம்உருவாக்கப்படுகிறது.
இதற்கு நீங்கள், வட்டம், ஆரம், அதன் சுற்றளவு, கோணங்கள், சுற்றுப் பாதை பற்றிய கணித விளக்கங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு எளிதான வழிமுறைகள் இருக்கின்றன.
x=(A2+B2)*COS(D2) - (B2+C2)*COS(((A2+B2)/B2)*D2)
y=(A2+B2)*SIN(D2) - (B2+C2)*SIN(((A2+B2)/B2)*D2)
என்பது போன்ற விளக்கங்களை அட்டவணையில் பதிந்துவிட வேண்டும்.
நீங்கள் எப்போதெல்லாம் A,B ஆகிய கட்டங்களில் உள்ள எண்களின் மதிப்பை மாற்றுகிறீர்களோ அப்போதெல்லாம் அட்டவணையின் மதிப்புகளும் மாறும்.
அதை அடிப்படையாக வைத்து உங்களது வரைபடமும் மாறும்.

உங்களால் என்னென்ன படங்களை வரைய முடிகிறது என்று முயற்சி செய்து பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக