இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. இவரது வெளியூர் பயணத்தின்போது பெட்டியின் தவறாது இடம் பெறும் புத்தகங்கள் பாரதியார் கவிதைகள், திருக்குறள், பாரதி öன்ற சொல்லே இவருக்கு உற்சாகத்தின் திறவுக்கோல்தான்.
பாரதியை தேசியக்கவி என்று முடக்கப்பார்த்தார்கள். ஆனால், எழுத்தாளர் வ.ரா. தான் மகா கவி என்று பிரகடனபடுத்தினார். அதை மக்களிடம் பரப்புரை செய்தர்வர்கள் திரு.வி.க., பாரதிதாசன், வெ.சாமிநாத சர்மா, ஜீவா ஆகியோர். சுதந்திர கனல் வீசிக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் ஊரான ஸ்ரீவைக்குண்டத்தில் காங்கிரஸ் கூட்டமென்றால் பள்ளிச்சிறுவர்ளான நாங்கள், பாரதியார் பாடல்களை பாடியபடியே தெருத்தெருவாக செல்வோம். பின் மேடைக்கு முன் சென்று தொடர்ந்து பாடுவோம். என்கிற நல்லகண்ணுக்கு பள்ளியிறுதி வகுப்பு படிக்கும் போது அரசியல் பார்வை மாறியது. மார்க்ஸும் ஏங்கல்ஸும் அவர் மனத்தை தொட்டார்கள்.
சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சி பற்றி பல புத்தகங்கள், பத்திரிகைகளில் படிக்கவும், பொதுவுடைமை இயக்கத்தின் மீது நாடடம் அதிகரிக்க 1943ல் அதில் இணைந்து விடடார். பின்னர் நெல்லை ஹிந்து, கல்லூரியில் படிப்பை தொடரும்போது மாநில கம்யூனிஸ்ட்ட தலைவர்களோடு தொடர்பு ஏற்பட்டு படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்.
நெல்லை மாவட்டம் முழுவதும் ஆற்று விவசாயி கூலித் தொழிலாளர்களின் சங்கங்களை வலுப்படுத்தும் பணியில் கட்சி அவரை இறக்கி விட்டது. சுதந்திரம் வந்தால் ஏழைகள் வாழ்க்கை யில் விடிவு காலம் வரும் என்ற பொதுவுடைமை தோழர்கள் மத்தியில் நிறைய நம்பிக்கை இருந்தது. ஆனால், பிரிட்டிஷ்கார்களுக்கு வால் பிடித்து கொண்டு, மிட்டா மிராசுகளும் படாமணியம்களும், ஜமீன்தார்களும் காங்கிரஸில் சேர்த்து விட்டார்கள். சுதந்திரத்துக்காக இணைந்து போராடிய காங்கிரஸையும், பொதுவுடைமை இயத்தையும் காலம் எதிர் எதிரே நிறுத்தியது. ஆயுத போராட்டம் மூலம் ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு தோழர்கள் மீது போடப்பட்டு, கட்சிக்காரர்கள் பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப்பட்டது. கட்சிக்காரர்கள் தலைமறைவு ஆனார்கள். 1949ல் நாங்குனேரி தாலுகாவில் தலைமறைவாக இருந்தபோத கைதானார் நல்லகண்ணு. அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கைதான சில நாட்களிலேயே எங்கள் மீது காவல்துறை சகல வன்முறையையும் கையாண்டது. பின் மதுரை ஜெயிலில் போட்டார்கள். ஆயுள்தண்டனை. ஆனால், சிறை வாழ்க்கை என்னை மேலும் பக்குவப்படுத்தியது. உலக இயக்கியம், அரசியல் என்று படிப்பதற்கு நிறைய வாய்ப்பு. 23 வயதில் சிறை சென்ற நான் 31வது வயதில் வெளியே வந்தேன். அதற்குள் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முடிந்து காங்கிரஸ் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருந்தது. அந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் கணிசமான இடங்களை பிடித்து தமது செல்வாக்கை காட்டியிருந்தும் எங்கள் விடுதலைக்கு ஒரு காரணம் என்கிறார் நல்லகண்ணு. அவர் சிறையில் இருந்தபோது பெற்றோர்கள் கூட பார்க்க வரவில்லையாம்.
நன்றி - கல்கி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக