அவரது பின்புலமானது ஆச்சரியபடத் தகுந்த ஓன்று, ஆனாலும் ஆதிக்க சமுதாயம் மட்டுமே கோலேச்சிக் கொண்டிருந்த இசையுலகில் தென்றலாய் வந்து நம் மனதை ஆக்கிரமித்துள்ளார்.
தமிழகத்தில் 70, 80களில் பிறந்த ஓவ்வொரு தமிழனோடும் அவர் நெஞ்சோடு கலந்தவர், அவரது இசையின்றி அவர்களது வாழ்க்கையில் எந்த ஓரு நிமிடமும் கடந்து சென்றதில்லை..
தமிழக இசை பாலிவுட் ஆக்கிரமிப்பு இன்றி இன்றளவும் தழைத்து நிற்க அவரது பங்களிப்பு தவிர்க்க முடியாத ஓன்றே.
ராசா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளமாயிப் போன மனிதர்களுள் ஓருவர், காலங்கள் கடந்தும் அவரது இசை இசைத்துக் கொண்டேயிருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக