சனி, 1 ஜூன், 2013

இன்டர்நெட்டின் வளர்ச்சியும் ஊடகங்களின் தவிப்பும்:

​கணினி மற்றும் இன்டர்நெட் வளர்ச்சிக்கு பிறகு எழுத்துழகில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். முன்பெல்லாம் சுஜாதா, மதன் போன்ற ஜாம்பவான்களின் எழுத்துக்கள்தான் முண்ணனி பத்திரிக்கைகளில் வரும். எழுத்து ஆர்வம் உள்ள குப்பனோ சுப்பனோ தங்கள் கருத்துகள் மக்களை சென்றடைய வேண்டுமாயின் மாபெரும் வேள்வித்தவம் நடத்தவேண்டும். (ஆனால் எந்தளவு உண்மை என்று தெரியவில்லை சில சமயங்களில் கேள்விப்பட்டதுண்டு, நம் படைப்புகள் முண்ணனி பத்திரிக்கைகளில் வரவேண்டுமாயின் சன்மானம் கொடுத்தால்தான் உண்டு என்று).

ஆனால் இப்பொழுதெல்லாம் எழுத்தார்வம் உள்ள குப்பனோ சுப்பனோ பிளாக்கர்களிலோ, முகப்பக்கத்திலோ ஓரு வலைப்பதிவை தொடங்கி தங்கள் எண்ணங்களை வண்ணங்களாக்கி கொள்ளலாம் என்று நிலை வந்துள்ளது.  மேலும் இன்றைய தேதியில் முண்ணனி பத்திரிக்கைகளே வலைப்பக்கங்கள் என தனியே பகுதிகளை ஓதுக்கி இக்கரையோரம் தூண்டில் போடுகின்றனர் குப்பனின் நிலைத்தகவலுக்கு என்றால் இதன் வீச்சினை நாம் புரிந்துகொள்ளலாம். 



அ​துவும் மொபைல் போனில் இன்டர்நெட் ஊடுருவிய பிறகு அச்சுஊடகங்கள் அளிக்கும் தகவல்கள் பெரும்பாலும் ஆறின கஞ்சியாகவே உள்ளது.  ஆம் இன்று ஓரு விசயம் நடக்கிறது என்றால் சாமானியன் அதை முகப்பக்கத்தில் உடனே ஏற்றி தன்னைச் சார்ந்தவர்களிடம் பகிர்ந்து கொள்கிறான். இதே வேளையில் அச்சு ஊடகங்கள் அதனை அச்சுக்கு ஏற்றி மக்களை சென்றடைய குறைந்தப்பட்சம் ஒரு நாளாவாது தேவை. காட்சி ஊடகங்களுக்கு குறைந்தப்பட்சம் சில மணி நேரங்களாவது ஓளிபரப்புக்கு தேவை, அதற்குள் அதன் பரபரப்பு அடங்கி போயிருக்கும்.  



நான் கடுமையாக நம்புகிறேன், உனது கனவு இத்தேசத்தினை மாற்றுவதாக இருப்பின், பத்திரிக்கையே உடனடி குறுகிய கால ஆயுதமாய் இருக்கும் - டாம் ஸ்டாப்பர்டு

முண்டாசு கவிஞன் பாரதியும், மகாத்மாவும் பத்திரிக்கையாளர்களாக இருந்து தேசிய உணர்வை வளர்த்த தேசத்தில்தான் என்று பத்திரிக்கை நடத்துவது  தொழிலாய் மாறிப்போனதோ அன்று வந்தது வினை.

2G ஊ​ழல் ஆகட்டும் எந்தவிதமான ஊழல்களிலும் இப்போது பத்திரிக்கைகாரர்களுக்கும் பங்கு போவதால் அவர்கள் அதுகுறித்து வாய் திறப்பதில்லை.

இலங்கை போரின்போது அது சம்பந்தமாக பெரும்பான்மையான தமிழ் ஊடகங்களே வாய் திறக்கவில்லை, அதே ஊடகங்கள்தான் மாணவ எழுச்சியின்போது அவர்களோடு தங்களையும் இணைத்து கொண்டதாக காட்டிக்கொண்டனர், இல்லாவிடில் எதிர்கால சமுதாயமான மாணவ சமுதாயம் அவர்களிடம் அந்நியப்பட்டு போய்விட்டால் வருமானத்துக்கு வழி இல்லாமல் போய்விடுமே அதனால்தான்.  

கோல்கேட்டில் நிக்கோடின் உள்ளதாக 2011ல் வந்த ஆய்வறிக்கை பற்றி எந்தவிதமான பத்திரிக்கைகளும் இ​துகாறும் வாயே திறக்கவில்லை.

முண்ணனி தமிழ் தேசிய நாளிதல் என்று கூறிக்கொள்ளும் ஓரு பத்திரிக்கை, ​கூடங்குளத்தினை பற்றி எதிர்த்து பேசுவதே பாவம் என்று எழுதியதோடு மட்டுமின்றி வரம்பு மீறி தனிமனித தாக்குதல் நடத்திய கதையெல்லாம் மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர்.  

மேலும் பத்திரிக்கைகள் காசு வாங்கிகொண்டு அரசாங்கமோ, தொழில் அதிபர்களோ யாராயிருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக பத்திகள் வருமாறு பார்த்துக்கொண்டனர். 

​எனவே சாமானியன் ஜனநாயகத்தின் நான்காம் தூணாம் பத்திரிக்கைகளின் மீது நம்பிகை இழப்பதில் ஆச்சரியமில்லை, அவன் உண்மை தகவலுக்கு ஏங்கி போயுள்ளான்.





வலைபதிவர்களின் சாம்ராஜ்யம்:

முன்பு இங்கிலாந்து சாம்ராஜ்யத்தினை சூரியன் மறையாத தேசமென குறிப்பிடுவர். அதுபோல் இங்கும் முன்பு ஓர் சூரியன் மறையவே மறையாது என்றைய நிலையில் இருந்தது. எதிர்கட்சி தலைவருக்கும் கூட நம்பிக்கை இல்லை தங்கள் கட்சி மீண்டும் தளிர்க்கும் என்று. 2011 பொதுதேர்தலில் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை எந்த வெகுஜன பத்திரிக்கைகளும் வாய் திறக்க மறுத்தது, ஏனெனில் எதிர்த்து குரல் கொடுத்தால் விளம்பர வருமானத்தில் ஆட்சியாளர்கள் மண்ணள்ளி போட்டுவிடுவர். 

ஆனால் ஆட்சியாளர்களின் தவறுகளை சவுக்கினை எடுத்து விலாசியது ஓரு இளைஞன் மட்டுமல்ல அவரை போன்று எண்ணற்ற இளைஞர்கள் "இலை"ஞர்களாயினர், ஆட்சிக்கு எதிராக பொது ஜன பத்திரிக்கைகள் எழுத தயங்கியபோது இவர்கள் இன்டர்நெட்டில் எழுதி தள்ளினர், இலையும் தளிர்த்தது. உ​திக்காமலே சூரியன் அஸ்தமித்து.

எ​னவேதான் அரசாங்கம் எப்பொழுதெல்லாம் முகப்பக்கம், டிவிட்டருக்கு கட்டுப்பாடு தேவை என்று விவாதிக்க தொடங்குகிறதோ அப்பொழுதெல்லாம் ஊடகங்களும் அரசியல்வாதிகளுக்கு ஓத்துழைப்பினை வழங்க தவறுவதில்லை ஏனென்றால் இன்டர்நெட் ஊடகத்தின் வளர்ச்சியானது அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு மாபெரும் சவாலாக தோன்றுகிறது.

அ​துபோலவே வலைதளத்திலும் சில நண்பர்கள் தங்களை அறியாமல் சில அரசியல்வியாதிகளுக்கு வக்காலத்து வாங்கி கொண்டுள்ளனர்.  தங்கள் தலைமை தவறே செய்யாத அவதாரபுருசன் என்று. எனக்கு அவர்களை பார்த்து பரிதாபமாக உள்ளது.

"நீ எ​ல்லாவற்றையும் நம்பத்தொடங்கிவிட்டால், அறிந்து கொள்வது சொற்பமாய் இருக்கும்" - போனொ

எங்கும் யாரும் தவறே புரியாத ஜென்மங்கள் அல்ல, ​வரலாற்றில் மனித இனமே தவறுகளுக்கு ஆட்பட்டே வந்துள்ளது, இங்கு பாதி கண்டுபிடிப்புகளும் தவறுகளினாலே வந்தது. ஆ​க உங்கள்  தலைவர்களும் மன்னிக்கவும் அவதார புருசர்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள்தான். விமர்சிக்க கூடாது எனில் பொது வாழ்வினை துறந்து இமயமலைக்கு துறவறம் மேற்கொள்ள சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம்.

யாரோ ஒருவரின் கயமைதனத்திற்கு வக்காலத்து வாங்கபோய் நம்முடைய கண்ணியத்தினை கலங்கப்படுத்திவிடுவோம். ஆக நம்மையும் மக்கள் கவனித்துகொண்டுதான் உள்ளனர், என்ற நினைப்பினில் உண்மை தகவல்களை மட்டுமே பகிருவோம்.

​குறிஞ்சி: ஸ்டெர்லைட் தடை தமிழக மாசு கட்டுப்பாடு நிறுவனத்தினால் விதித்த போது அன்றே குறிஞ்சியில் அதுபற்றி விரிவான கட்டுரை வந்தது.  தமிழகத்தின் முண்ணனி வார இதழில் அதுபற்றி ஓரு மாதத்திற்கு பிறகு சமீபத்திலே வந்தது.

http://kurinjinet.blogspot.in/2013/03/blog-post_31.html

ஊ​ழலை பற்றி நாம் எழுதிய அந்த வாரமே, தமிழகத்தின் அந்த முண்ணனி பத்திரிக்கையில் அதே விசயம் தலையங்கமாக வந்தது.

http://kurinjinet.blogspot.in/2013/05/blog-post_12.html

ஓ​பாமா சல்யூட் பற்றி பதிவு போட்ட மறுநாள்தான் தமிழகத்தின் முண்ணனி பிளாக்கர் அதனை பதிவு செய்தது.

http://kurinjinet.blogspot.in/2013/05/blog-post_26.html

இந்திய மக்கள்தொகை பற்றி செய்தி போட்டு ஓரு மாதத்திற்கு பிறகே நேற்று தமிழகத்தின் முண்ணனி வலைதளம் அது பற்றி செய்தி போடுகிறது.

http://kurinjinet.blogspot.in/2013/05/blog-post_5.html


இ​ந்திய வளர்ச்சி 5%ஆக மட்டுமே இருக்குமென இரண்டொரு நாட்களுக்கு முன்பே குறிஞ்சி பதிவிட்டது, ஆனால் நேற்றுதான் முண்ணனி பத்திரிக்கைகள் அது பற்றி அலறுகிறது.

http://kurinjinet.blogspot.in/2013/05/blog-post_30.html

இ​ப்படி சொல்லிக்கொண்டே போகலாம், ஆக குறிஞ்சி தனது வாசகர்களுக்கு செய்தியை முந்தி தருவதோடு மட்டுமின்றி நம்பகமான தகவல்களை மட்டுமே பதிவு செய்கிறோம் என்பதனை மகிழ்ச்சியோடு பதிவு செய்துகொள்கிறோம்.

​Question கோயிந்து: யோவ் எடிட்டர் எல்லாம் சரி, ஏன்யா கடைசியிலே சுயதம்பட்டம் அடிக்கிறே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக