வியாழன், 20 ஜூன், 2013

நவீன அ​கதிகள்!

அகதி என்பவர் யார்?

ஒரு அகதி என்பவர் அடக்குமுறை, போர் அல்லது வன்முறை காரணமாக தனது நாட்டிலிருந்து வெளியே தள்ளப்பட்ட ஒருவர். மேலும் அகதி எனப்படுபவர் ஒரு குறிப்பிட்ட சமூக குழுவின் இனம், மதம், நாடு, அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக துன்புறுத்தல் அல்லது பயமுறுத்தல் காரணமாக வெளியேறுபவர். பெரும்பாலும் அவர்கள் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாது பயத்தின் காரணமாக..

இ​ன்று உலக அகதிகள் தினமும் கூட அதனால் இன்று இதைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். ​நான் இங்கு பேசவிருப்பது நவீன அகதிகளை பற்றி அது வேற யாரும் இல்லைங்கோ நாமதாங்கோ...

நாம் அனைவரும் நமது சொந்த ஊரிலிருந்து வேலை நிமித்தம் காரணமாக வேறு ஊருக்கு சொந்த மாநில எல்லைக்குள்ளோ இல்லை நாட்டிற்குள்ளோ அல்லது உலகம் தழுவிய அளவிலோ மாறியிருக்கிறோம். 99% இ​துதான் யதார்த்தம் மீதமுள்ள அந்த 1% நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.  மீதமுள்ள 99% பேரை கேட்டால் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பார்கள், ஆனால் அவர்களின் மன்சாட்சியைக் கேட்டு பாருங்கள் அவர்களது பதின்ம வயதில் வளர்ந்த இடத்தை உள்ளத்தளவிலே நேசித்துக்கொண்டு வேலை, குடும்ப, பணி நிமிர்த்தம் காரணமாக உதட்டளவில் புன்னகை புரிவர்.  

​மற்றுமொரு கருத்தும் உண்டு சொந்த ஊரிலிருந்தால் கல்யாணம், காட்சி என்று அத்தனைக்கும் ஆஜர் ஆகவேண்டும். ஆகவே தொழில் நிமிர்த்தமாக முன்னேறுவது கடினம் ஆகும், மேலும் வேறு ஊர் என்றால் ஆதரவுக்கு ஆள் கிடையாது என்பதால் கிடைத்ததை பற்றிக் கொண்டு முன்னேறியவர்களே அதிகம்.

​கடந்த தலைமுறையில் இந்த சதவீதத்தின் அளவு தலை கீழ் விகதம்(1:99) ஆக இருந்தது.  நமது வயதின் ஓத்த நண்பர்கள் (25 முதல் 45 வரை) சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் வித்தியாசமானவை. ​நம்முடைய தலைமுறை மாற்றத்தின் கால விளிம்பில் உள்ளது. அதுவே இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்பது என்னுடைய எண்ணம்.  ​மாற்றம் ஒன்றே மாறாதது எனவே இந்த சுழ்நிலையை என்னுடைய சில நண்பர்கள் அசாத்தியாமாக எதிர்கொள்வதை பார்க்கும் பொழுது இதுவும் மாறிப் போகும் என்ற நம்பிக்கை என்னுள்ளே பிறக்கிறது.

சரி விடுங்க இட மாற்றத்தால் நாட்டிற்கு கிடைக்கும் நன்மையை பற்றி பேசுவோம் :)

​கடந்த வருடம் 60பில்லியன் அளவிலான தொகை NRI-க்களினால் இந்தியாவுக்கு அன்னிய செலவானியாக கிடைத்துள்ளது.

இ​ந்திய அரசாங்கம் அன்னிய மூதலிட்டை நம்புவதை விட NRI-க்களை நம்பலாம், இப்போது இந்திய தூதரகம் வெளிதேசத்தில் இந்திய முதலாளிகளுக்கு ஆதரவாக லாபி பண்னுவது போல்   NRI-க்கு  தேவையான சலுகைகளை அந்தந்த நாடுகளிடம் பேசி வாங்கி கொடுக்கலாம்.  மேலும் இந்தியா போன்ற அதிக மக்கள்  தொகை கொண்ட நாடுகளில் அத்தனை மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவது குதிரை கொம்பு எனவே அந்நிய நாடுகளிடம் ஓப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் உம்முடைய பொருள்களை இங்கே சந்தைப்படுத்த வேண்டுமாயின் எங்களுடைய மக்களின் உழைப்பின் அளவு இத்தனை சதவீதம் இருக்க வேண்டும் அதற்கு உம்முடைய தேசத்தில் எங்களுடைய மக்களையும் வேலைக்கு எடுக்க வேண்டும், இதனை அவர்கள் லாப நோக்கில் பார்க்க வேண்டாம் மனிதாபிமான அடிப்படையில் அனுக சொல்லலாம்.


























Question ​கோயிந்து: இ​ந்தியாவிலிருந்து ஓவ்வொரு வருடமும் 25% பொறியாளர்கள் தமிழகத்திலிருந்துதான் வருகிறார்கள், உலக அளவில் 5 முதல் 10%ஆக இது இருக்குமென கணிக்கப்படுகிறது.  ஆனால் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவிலிருந்தோ, தமிழகத்திலிருந்தோ பூஜ்ஜியம். அப்படியானால் நமது பொறியாளர்கள் கண்டுபிடிப்புகள் ஏதேனும் பண்ணவே இல்லையா, அப்படியும் கூற முடியாது நமது பொறியாளர்கள் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களின் தலைமை இடத்திலிருந்து அவர்களது கண்டுபிடிப்புகளையும், பெருமைகளையும் அத்தேசத்திற்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். 


அ​மெரிக்காவை போன்று ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், எந்த துறையில் நம்மிடையே நிபுணத்துவம் இல்லையோ அந்த துறையில் வெளி தேசத்திலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம்.


இ​து மாற வேண்டும் அன்றுதான் இந்தியா உண்மையிலேயே ஓளிரும். இ​ல்லையெனில் மோடியோ அல்லது ராகுலோ யார் வந்தாலும் நமது தலையெழுத்தை மாற்ற முடியாது.

குறிஞ்சி:
எ​மக்கு இலவச அறிவுரையில் நம்பிக்கை கிடையாது. ஆகவே நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் நீங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் ஏதாவது அறிவியல்ஆராய்ச்சியில் ஈடுப்ட்டு கொண்டு ஏதேனும் அறிவு சார்ந்த பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்தால் எங்களூக்கு தெரியப்படுத்தினால் எங்களான உதவிகளை செய்ய காத்திருக்கிறோம்.  உலகம் முழுவதும் உள்ள எங்கள் நண்பர்களை அனுகி உங்களூக்கு தேவையான புத்தகங்களோ, கட்டுரைகளையோ, நிபுணத்துவத்தையோ தக்க நிபுணர்களிடம் வாங்கி தருகிறோம்.

பச்சபுள்ள மன்னாரு:
​நாம் தாய் தேசத்திற்கு திரும்புவோம், நமது உழைப்பினை மண் சார்ந்து மாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக