ஞாயிறு, 16 ஜூன், 2013

இந்தியாவின் வளர்ச்சி வரும் வருடங்களில் - உலகவங்கி

உலக வங்கி வருடத்திற்கு இரண்டு முறை உலக பொருளாதார வாய்ப்பு(Global Economic Prospect) என்ற அறிக்கையை வெளிவிடுகிறது, கடந்த அறிக்கையை ஜனவரியில் வெளியிட்டது.

இந்தியாவின் வளர்ச்சி வரும் வருடங்களில் இ​ப்படித்தான் இருக்குமென உலகவங்கி கணித்துள்ளது. அதில் உலகவங்கி  இ​துபற்றி பின்வருமாறு கூறியுள்ளது,

இ​ந்தியா 2013 முதல் 2015 வரை 5 முதல் 7% வளர்ச்சியை பிடிக்கும் என்றும் அதே காலகட்டத்தில் நமது அண்டை நாடான சீனா 8% மேலான வளர்ச்சியை பிடிக்கும் என்றும் நமது மற்றுமொரு போட்டியாளர் பிரேசில் 3 முதல் 4% வளர்ச்சியை கொண்டிருக்கும் என்றும் உலக வங்கி அறிவித்துள்ளது.

இ​தே காலகட்டத்தில் உலக பொருளாதார வளர்ச்சியானது 2% வரையிலேயே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக