சனி, 15 ஜூன், 2013

பேசாப்பொருளை பேசவிளைந்தேன்! -1 ஈழம்

நண்பர்களே இ​ந்த கட்டுரைதான் குறிஞ்சியில் முதலில் வந்திருக்கவேண்டியது. அப்பொழுது ஈழம் எனும் கனல் தெறித்துக்கொண்டு இருந்தது, இதை எழுதி முடித்து பதிவு செய்ய நினைக்கும் பொழுது 8தம்பிமார்கள் வந்தனர், அந்த கனலை தங்களது கைகளில் ஏந்திக்கொண்டு தாய் தமிழகம் முழுவதும் அந்த சோதியை கொழுந்து விட்டு எழச் செய்தனர், தங்களது வயிற்றினை காயப்போட்டு போட்டு(அதாம்பா உண்ணாவிரதம்!) அந்த அக்னியை அணையவிடாமல் பார்த்துக்கொண்டனர். 

அ​ந்த சூழ்நிலையில் இந்த கட்டுரை அவர்களின் முயற்சிக்கு பாதகமாய் அமையும் என நாம் கருதினோம், ஆக இந்த கட்டுரையை பரணில் ஏற்றி வைத்துவிட்டு எம் தம்பிமார்களை வரவேற்கும் இந்த கட்டுரையை சமைத்தோம்.





சமகால நிகழ்வுகள் என்னை பாதிக்கிறது, அதன் தாக்கம் என் எழுத்தினில் விழ அது என் நண்பர்களில் ஓருசாரரை பாதிக்கிறது, ஆக பதிவு எழுத முக பக்கம் வரக்கூடாது என முடிவெடுத்திருந்தேன்... ஆனால் ஈழ விவகாரம் என் முடிவை மாற்றிக்கொள்ள வைத்தது. கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், நாம் ஆண்ட பரம்பரை, அவர்களை மண்டியிடச் செய்வோம், தனி தேசம் காண்போம் என வீராய்ப்பாய் பேசுவது மேடைக்கு வேண்டுமானால் உதவுமே தவிர நடைமுறைக்கு உதவாது. தமிழக அகதி முகாம்களிலேயே அவர்கள் தீண்டதாகதவர்களாய்தான் பார்க்கப்படுவதாக தகவலென்றால் அங்கு நிலைமையை கேட்கவே வேண்டாம்... ஆட்சி, அரசியல், புரட்சி , சர்வேதச நிர்பந்தம் மூலமாக அழுத்தம் கொடுக்க வேண்டுமாயின் சமரசமின்றி சமர் புரியும் தலைவன் வேண்டும், அவன் முள்ளிவாய்க்காலில் விதைக்கப்பட்டுவிட்டான், (நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள் தலைவன் இருக்கிறான், ஐந்தாம் கட்ட போர் நடக்கும் என்று, அவன் என் கண்முண்ணே தோன்றும் வரை நான் நம்பபோவதில்லை, அரசியல் வியாபாரிகளின் கூற்றினை...) ஆக எதிர்மறை செயலைவிட நேர்மறை செயல்மூலம் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஏதேனும் உதவுமுடியுமாய் பாருங்கள்,

நண்பர்களே என்றாவது சூரியன் அஸ்தமிக்காத தேசமென சொன்ன இங்கிலாந்து பொருளீயல் இடர்பாடுகளில் சிக்கியதாய் கேள்விப்பட்டிருப்போமா.. இல்லை அல்லவா.
 அவர்கள் அமெரிக்கா, சீனா, கொரியாவை போல ஏதாவது ​பொருளை உற்பத்தி பண்ணுகீறார்களா அதாவது MADE IN ENGLAND என்று எங்காவது கேள்விபட்டிருப்போமா இல்லை பின்பு எப்புடீ,  அ​வர்கள் தங்களது பொருளியல் தேவையை நிறைவேற்றுகிறார்கள்? உலகமெல்லாம் நமது அத்தியவாசிய தின தேவைகளாகிய சீப்பு சோப்பு கண்ணாடியெல்லாம் அவர்களது உற்பத்திதான் HINDUSTAN, PAKISTAN, SRILANKAN LEVER என்ற பெயரில்... ஆக இ​ன்றும் அவர்கள்தான் நமது அத்தியவாசிய பொருளாதார தேவைகளின் மூலமாக நம்மை மறைமுகமாக ஆளுகிறார்கள். 

நம் நண்பர்களில் சிலபேருக்கு இது வேப்பங்காய் இருக்கும் ஆனால் நிதர்சனத்தை உணர்வோம், இலங்கைக்குகள் சென்று வணிகம் செய்வோம் தொப்புள் கொடி உறவுக்கு மட்டுமல்ல தமிழனின் பழம் பெருமையையும் மீட்டெடுப்போம், வடநாட்டானும் சீனனும் நம்மாளை ஆள்வதற்கு முன்பு...


​பொருளியல் மூலமே எந்த ஓரு இனமும் நீடித்து வெல்லமுடியும். அரசியல் தீர்வு என்பது தற்காலிகமானது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக