ஞாயிறு, 12 மே, 2013

செத்து போனவனை பிழைக்க வைக்க முடியுமா?


செத்து போனவனை பிழைக்க வைக்க முடியுமா?

எ​ன்ன நண்பர்களே குழம்பி போய் இருக்கிங்களா, பயப்படாதீங்க செத்தவனெல்லாம் பிழைக்க வைக்க இன்னும் தொழில்நுட்பம் வரவில்லை, அப்படின்னா இது வேற சங்கதிங்க.

ஓ​ர் விவசாயிக்கு தனது வயல்தான் குழந்தை, அந்த குழந்தை கடந்த காலங்களில் அதீத ஊட்டச்சத்து கொடுத்ததால் மலடாயிப் போனது ஆமாங்க செத்துப்போய் கொண்டிருக்கிறது. என்ன பார்க்கிறீங்க உரத்தைதான் ஊட்டச்சத்துனு சொன்னேன். அவ்வ்!!



சரி சரி நம்ம கதைக்கு வருவோம்:


"பொதுவா ஒரு மூட்டை விதைய போட்டா இருவத்தஞ்சி இல்லைனா முப்பது மூட்டை அரிசி கிடைக்கும்...ஆனால் இயற்கை விவசாயத்தினை முறைப்படி செய்தால் 90 மூட்டை வரை எடுக்கலாம்...நான் எடுத்து இருக்கேன்...அதற்காக அரசிடம் இருந்து பட்டமும் வாங்கி இருக்கேன்...அமெரிக்க சனாதிபதி என்னுடைய தோட்டத்துக்கு வந்து பார்த்துட்டு பாராட்டிட்டு போயிருக்காரு. ஆனா இவ்வளவு நடந்தும் நம்முடைய அரசு இத மக்கள்கிட்ட கொண்டு போக மாட்டேங்குது...காரணம் இதக் கொண்டு போனா பூச்சிக் கொல்லி நிறுவனங்க, உர நிறுவனங்க எல்லாம் அடிப்பட்டுப் போகும்...வெளிநாட்டுக் காரனுக்கு காசு கிடைக்காது...அதனால இத மக்கள் கிட்ட கொண்டு போக மாட்டேங்கிறாங்க...நான் விவசாயிங்க என்னால விவசாயம் தான் பண்ண முடியும்...அதுல ஆராய்ச்சி பண்ண முடியும்...நீங்க தான கணினி, இணையம் அப்படி இப்படின்னு பல பேர்கிட்ட பேசுறீங்க...நீங்க இந்த செய்திய எல்லாம் மக்கள் கிட்ட பரப்பலாமே...செதது போன மனுசனுக்குத் தான் உசுரக் கொடுக்க முடியாது...ஆனா செத்துப் போன மண்ணுக்கு உசுரக் கொடுக்க முடியும்...இளைஞர்கள் முன்னாடி வந்தா நிச்சயம் நம்ம மண்ணுக்கு உயிர் கொடுக்கலாம்."


அவர் பெயர் நாக இரத்தின நாயுடு(http://www.srinaidu.com/profile.htm)...அவரின் தோட்டத்தினைப் பற்றி ஒரு இணையமே ஆரம்பித்து இருக்கின்றார் http://www.srinaidu.com/

தேவைபட்டால் தயங்காமல் பேசுங்கள் தமிழிலேயே பேசுவார்.


PROFILE

Sri Gudiwada Nagarathanam Naidu
58 Years
Chittoor Dt (Andhra Pradesh)
8-66 Gowtham Nagar Colony, Dilsukhnagar. Hyderabad
09440424463
04024063963
Farm Address
Taramathipeta VI, Hyathnagar Mandal, Rangareddy dist



குறிஞ்சி: மேலுள்ள அ​வரது வளை தளத்தினை அணுக முடியவில்லை, நண்பரை அவரிடம் தொடர்பு கொள்ள சொல்லி இருக்கின்றேன் மேலதிக தகவலுக்கு. அப்புறம் ஏன் அவசரம் இந்த பதிவை வெளியிடுவதற்கு என்று கேட்கும் நண்பர்களுக்கு எம்மை பொருத்தவரையில் இது நல்ல விடயமாக படுகிறது. பெரும் முதலாளிகள் தங்கள் பொருளை பெரும் விளம்பரம் செய்து நம் தலையில்தட்டும் பொழுது அதை முறியடிக்க சில சமயங்களில் நாமும் அதையே திருப்பிச் செய்ய வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக