இந்த வருடம் நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரை பலத்த சர்ச்சைகளுக்கிடையே , கர்நாடகாவின் தேர்தல் வெற்றி கூச்சலுக்கு நடுவே திட்டமிட்ட தேதிக்கு(மே 10) இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே(மே 8) ஆளும் காங்கிரசு முடித்துவிட்டது.
மொத்தமாகவே லோக்சபா 95 மணி நேரம்(45%) மட்டுமே உருப்படியாக வேலை செய்ததாகவும், ராஜ்யசபா 83மணி நேரம்(52%) வேலை செய்ததாகவும் தகவல் கூறுகிறது. இது கடந்த ஆண்டில் லோக்சபா 89%, ராஜ்யசபா 94% வேலை செய்ததாகவும் தகவல் கூறுகிறது.
38 சட்டவரைவுகள் மட்டுமே விவாதத்திற்க்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், இன்னும் 116 சட்டவரைவுகள் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள சர்ச்சைக்குறிய சட்டவரைவுகள் :உணவு பாதுகாப்பு, காப்பீடு, நில கையகப்படுத்தும் திட்டம்.
நிலுவையில் உள்ள கடைசி இரண்டு (காப்பீடு, நில கையகப்படுத்தும் திட்டம்) சட்ட வரைவு திட்டங்களை குறிஞ்சி முழு மனதோடு எதிர்க்கிறது. அதன் பெரும்பாலான வரைவுகள் சமானிய மக்களுக்கு எதிராகவும் தொழில் அதிபர்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகவே யாம் கருதுகிறோம்.
மேலும் நாடாளுமன்றத்தினை செயல்படவிடாமல் முடக்கியதற்காக ஆளும் கூட்டணி அரசு எதிர்கட்சியை மட்டும் குறை சொல்லக்கூடாது . இதற்கு முழுப்பொறுப்பும் ஆளும் கூட்டணிக்கு இருப்பதாகவே யாம் கருதுகிறோம்.
ஆமாம் நண்பர்களே,
ஆமாம் நண்பர்களே,
2G ஊழல் - தொலைதொடர்பு, நிதி அமைச்சகம்
நிலக்கரி ஊழல்- கனிம அமைச்சகம்
ரயில்வே பணி இலாகா ஊழல் - ரயில்வே அமைச்சகம்
ஹெலிஹாப்டர் ஊழல்- ராணுவம் அமைச்சகம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊழல்- சமூக அமைச்சகம்,
ஆதார்ஷ் ஊழல்- வீட்டு வசதி அமைச்சகம்
காமென்வெல்த் ஊழல்- விளையாட்டு அமைச்சகம்
என மன்மோகன்சிங்கின் மொத்த அமைச்சரைவை சகாக்களும் கறைபடிந்தே காணப்படுகின்றனர். அவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுக்கின்றனர், ஆனால் நிலைமை கட்டுகடங்காத பொழுது அந்த அமைச்சரின் தகுதி அனுபவம், விசுவாசத்தை பொருத்து காவு கொடுக்கின்றனர்.
அசுவினிகுமார், பன்சால் போன்றார் ராஜினாமா செய்யும் பொழுது கிட்டத்தட்ட இதே மாதிரியான குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் ஜனாதிபதியின் பேரன், செட்டிநாட்டு சீமான் போன்றோர் இன்றும் ஆட்சிக்கட்டிலில் உள்ளனர்.
அதற்காக இந்த எதிர்கட்சி மட்டும் ரொம்ப யோக்கிய சிகாமணி அல்ல. அவர்களை பற்றி வேறோரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்.
அரசியல்வாதிகளே, மக்களை மாக்களாக நினைக்கவேண்டாம். அவர்கள் கடலுக்கடியே ஆழ்ந்து உறங்கும் சுனாமி போன்று இன்று உள்ளனர்,ஆனால் நிலைமை கை மீறும் பொழுது அவர்கள் பொங்கி எழும் பொழுது அதன் விளைவுகளுக்கு நீங்கள் மட்டும் பொறுப்பு.
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக