ஞாயிறு, 5 மே, 2013

நாங்க வளர்கிறோம் மம்மி

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு உங்களின் பார்வைக்கு.



கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களின் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகரித்துள்ளது என்பது நல்ல விஷயமாக படுகிறது.  சீனாவை நம் 2025வாக்கில் முந்தி விடுவோம் என்பதும் மென்மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கமும் கவலை தரும் தகவல் ஆகும்.



நம்ம அரசாங்கம் இவ்வளவு அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய தொடங்கிவிட்டதோ இல்லையோ, உலகிலுள்ள பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களால் இந்தியா மிகப் பெரிய சந்தையாகப் பார்க்கபட்டு தங்களது நிறுவனத்தின் பொருளை நம் தலையில் கட்டும் வேலையை வெகுவேகமாக செய்யத் தொடங்கிவிட்டனர்.  "ப்ப்பா என்ன வேகம்"



மேலும் சென்னை அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் 4வது பெரிய நகரம் என்ற இடத்தை பெங்களூரிடம் இலக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. ​மக்கள்தொகையின் வளர்ச்சி ஒர் நகரின் வளர்ச்சியாகவும் பார்க்கபடுகிறது என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த தகவலாக பார்க்கவேண்டும். 


இது பெங்களூரின் அதிவேக வளர்ச்சியாக எடுத்துக் கொண்டேயேமானால் சென்னை வளரவில்லையோ, நம்ம அரசியல்வாதிகள்  ஏதோ சாதனை செய்ததாக சொல்வது இதன் மூலம் பொய் என நீருபிக்கப்பட்டுள்ளது. அதற்காக கர்நாடக அரசியல்வாதிகளின் சாதனையும் அல்ல பெங்களூரின் வளர்ச்சி அது அந்த நகரின் தனிப்பட்ட நபர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட ஒன்றே என்பது உண்மை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக