SASCOF - ன் விரிவாக்கம் South Asian Climate Outlook Forum.
இது இந்தியா, ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான், நேபாள், பூடான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகளின் வானிலை சம்பந்தப்பட்ட
கூட்டமைப்பு. அது 2013ல் பெய்யகூடிய மழை அளவு இப்படித்தான் இருக்குமென ஓர் கருத்துக்கணிப்பு
வெளியுட்டுள்ளது.
இதில் தென்னிந்தியாவின் பாடுதான் திண்டாட்டமாக இருக்குமென தெரிகிறது, விவசாய பெருமக்கள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தங்கள் பயிர் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும்.
அதிகம் தண்ணிர் தேவைப்படாத பயிர்
வகைகளை பயிர் செய்வதைப் பற்றியோ இல்லை சொட்டு நீர் பாசனம் பற்றியோ கவனத்தில் கொள்ளவேண்டும்.
பச்சபுள்ள மன்னாரு: அப்படினா வட இந்தியாவில்ஓடும்
நதிகள் அனைத்தையும் நதி நீர் இணைப்புதிட்டத்தில் இணைக்க வேண்டும்.
குறிஞ்சி: அங்கேயும் சிக்கல் உள்ளது, சமீபத்தில்
ஓர் வார பத்திரிக்கையில் 'அராகடல்' பற்றி படித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அது
ஓர் நண்ணீர் கடல் அல்லது ஏரி எனலாம், அங்குள்ள அரசாங்கம் நதி நீர் இணைப்புதிட்டத்தின்
கீழ் அந்த நதியை வேறு பக்கம் திருப்பியதால் அந்த ஏரி வரண்டு போய்விட்டது.
அதுபோல் நாமும் இங்குள்ள நதியின்
முகத்துவாரத்துக்கு தண்ணீர் செல்லாமல் நதி நீர் இணைப்புதிட்டத்தில் முழுதும் திருப்பிவிட்டால் முகத்துவாரத்திலுள்ள விவசாய நிலங்கள், பிராணிகளின்
நலன் கேள்வி குறியாகும். பெரும்பாலும் நதியின் கடைமடைப்பகுதியிலே விவசாயம் செழிப்பாக
இருக்கும். உதாரணம் தாமிரபரணி நதியின் கடைமடைப்பகுதியான ஸ்ரீவைகுண்டம் பகுதியிலிருந்து
வரும் வாழை போன்ற பயிர்கள் சென்னை போன்ற மிகப்பெரிய சந்தையின் தேவையை ஆண்டு முழுதும்
பூர்த்தி செய்யகூடிய வகையில் உள்ளது.
நியூட்டனின் மூன்றாம் விதி:
பதிவு உலகின் நண்பர்களுக்கு
நான் இப்பசொல்ல போகும் விஷயத்தில் ஏற்பு இருக்காது என எனக்கு தெரியும்,ஆனால் அதுதான்
உண்மை சுமார் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்பு நம்ம இளவரசர் அதாங்க ராகுல் காந்தி இதைப்
பற்றி பின்வருமாறு சொன்னார், நதி நீர் இணைப்புத்திட்டம் அபாயகரமானது, இயற்கையை நம்மால்
வெல்ல முடியாது என்று, அதிலுள்ள உண்மைத் தன்மையை ஆராயாமல் அப்போது நாமெல்லாம் அவரை பரிகசித்தோம். ஏனென்றால் பலதரப்பட்ட புள்ளிவிவரங்கள்
ராகுல் காந்தி அவர்களை சென்றடைகிறது. அதனடிப்படையிலே அவர் இவ்வாறு சொல்லி இருக்கவேண்டும்.
ஆக நதி நீர் இணைப்புதிட்டம் மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த வேண்டிய ஓன்று அல்லது அது எதிர் வினையாற்றத் தொடங்கும்.
Question கோயிந்து: யோவ் நீயும் நம்ம தமிழின தலவர்
மாதிரி இப்படிக்காவும் பேசுற அப்படிக்காவும் பேசுற, குறிஞ்சியில் இதற்கு முந்தி ஓர்
கட்டுரையில் நதிகளை இணைப்போம் நலம் பெறுவோம் என்றாய்.
ஆனால் இப்ப என்னானா கவனத்தோடு
நதிகளை இணையுங்கள் என்கிறாய்., ஓன்னுமே புரியலே, உலகத்திலே...
குறிஞ்சி: ஏன் இதை அழுத்திச் சொல்லவருகிறேன்
என்றால், சமீபத்தில் தமிழக அரசாங்கம்
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மக்களின் நலன் சார்ந்தே இருக்கிறது லாப நோக்கில் அல்ல
என்று ஓர் அறிவிப்பினை நீதிமன்றத்தில் வைத்தது. இதை பார்த்த பிறகுமா உனக்கு நம்பிக்கை
வரவில்லை நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் நல கொள்கைகள் எந்த அளவுக்கு
இருக்கும் என்று.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, ஆக நதி நீர் இணைப்புதிட்டம் மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த வேண்டிய ஓன்று அல்லது அது எதிர் வினையாற்றத் தொடங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக