தில்லியில் காங்கிரஸ் வீழ்ச்சி: 2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அனைத்து ஏழு மக்களவை தொகுதிகளையும் சொல்லி அடித்தது, ஆனால் தற்போது ஐந்து தொகுதி பா.ஜவுக்கு போகிறது இரண்டில் மட்டுமே காங்கிரஸின் வெற்றி கணிக்கப்பட்டுள்ளது. பா.ஜ. க மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கிடையே இடையே வாக்குகள் பிரிவதால் மூன்று முறை ஆண்ட ஷீலா தீட்சித் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம் என காங்கிரஸ் நம்பியுள்ளது, ஆனால் கருத்து கணக்கெடுப்பு அதற்கான சாத்தியத்தினை பிரதிபலிக்கவில்லை.
நிதிஷ்க்கு எச்சரிக்கை மணி: ஜே.டி. (யு)(நிதிஷ் கட்சி) பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி முறிந்து தனித்தனியே நிற்கும் பட்சத்தில் காங்கிரஸ் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி 40 இடங்களில் 23யை வெல்ல முடியும், அந்த நிலையில் பா.ஜகவுக்கு ஆறு இடங்கள் மற்றும் ஜே.டி. (யு)வுக்கு ஒன்பது இடங்கள் கிடைக்கும். ஆனால் ஜே.டி யு மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி (U) தொடந்த்து என்றால், கணக்கெடுப்பில் 40 இடங்களில் 34யை வெல்ல முடியும் என தெரிகிறது.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி பாய்ச்சலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ல் 10 ல் இருந்து பாஜகவின் எண்ணிக்கை 23ஆக உயருகிறது, காங்கிரஸ் 21லிருந்து 6 ஆக தேய்கிறது.
மகாராஷ்டிராவில் பா.ஜ., மற்றும் சிவசேனா தனியாக போட்டியிட்டால் விளிம்பு நிலையில் மெஜாரிட்டியை கைப்பற்றுவர்.
தென்மாநிலங்களை பொருத்தவரை மாநில கட்சிகளே அறுவடை செய்யும், மேற்கில் மோடி வித்தை வேலை செய்யும், மே.வங்கத்தில் இடது சாரிகள் மெல்ல தலைதூக்குவர்.
தமிழகத்தில் அதிமுகவின் 40க்கு 40 கனவு அம்பேல், இதற்கு முழுமுதற் காரணம் மின்சாரம், 2011ல் எந்த மின்சாரக்கனவு ஆட்சிகனவை நனவாக்கியதோ, அதே மின்சாரக்கனவு இந்த முறை 2014ல் அம்மாவின் ஆட்சி கனவை பகல்கனவாக்கும் என தெரிகிறது. திமுக எதிர்பார்த்ததைவிட அதிகமான தொகுதிகளை வெல்லும் (குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது),
ஒரு வருடம் முன்பு நீல்சன் நடத்திய கணக்கெடுப்பில் POPULARITYல் நான்கவதாக இருந்த மோடி இந்த முறை முதல் இடத்தினை பிடித்துள்ளார்...
மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஒட்டுமொத்த எண்ணிக்கை அளவில் தீவிர சரிவு காத்திருப்பதாக கணித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக