சென்னையில் குடிநீர் தட்டுபாடு: செய்தி
மழை பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு வருவதை பார்த்திருக்கிறோம், ஆனால் உலகிலேயே முதன் முதலாக குடிநீர் பாட்டில் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தத்தால் தண்ணீர் தட்டுப்பாடு இங்கேதான்.. என்ஸாய் என் இனிய தமிழ் இனமே.
உடனே அரசாங்கம் கூட்டு குடிநீர்திட்டம், கடல் நீர் - நண்ணீர் மாற்றுத் திட்டம் என கோடிகளை கொட்டும் திட்டங்களை அறிவித்து கோடிகளை தங்கள் வேட்டியில் முடிந்து கொள்வர்.
சரி இந்த திட்டங்களினால் ஏற்படும் சமூகவியல் பாதிப்புகள் என்ன?
கூட்டு குடி நீர்திட்டம் வெள்ள நிரை மடை மாற்றி விடும் திட்டமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஓரு ஜீவநதியும் கிடையாது, இங்கு கூட்டு குடிநீர் திட்டமென்பது கடை மடையில் விவசாயம் செய்யும் விவசாயின் வயிற்றில் அடிக்கும் திட்டமேயே ஆகும்.
கடல் நீரை நண்ணீராய் மாற்றிய பிறகு மீதமாகும் உப்பு மீண்டும் கடலுக்குள் செலுத்தப்படும் அது முகத்துவாரங்களில் உப்பின் அளவை அதிகரிப்பதால் அங்கு வசிக்கும் ஜீவராசிகள் பாதிக்கப்படும்.
ஓரு சொட்டு மழையும் பெய்யாத அரபுதேசங்களுக்கு கடல் நீர் - நண்ணீர் மாற்றுத் திட்டம் சரி, ஆனால் இங்கோ அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொட்டிதீர்க்கும் மழையை சேமிக்க வழியின்றி வீணாய் கடலில் கலக்கிறது.
ஆம் ஓருகாலத்தில் ஏரி நகரமாய் இருந்த சென்னை இன்று கான்கிரீட் காடுகளாய் மாறியதற்கு நாமும் ஓர் காரணம், அந்த ஏரி, குளங்களை நம்பி ஏராளமான சிற்றறிவு மற்றும் விழிம்பு நிலை மனிதர்கள் இருந்தனர், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நமது பிளாட்களை விண்ணை நோக்கி எழுப்பினோம், ஆக ஏரி, குளங்களில் ஏற்பட்ட முறைகேடான ஆக்கிரமிப்பு போன்ற சமூக அக்கிரமங்களுக்கு மௌன சாட்சியாய் இருந்ததின் விளைவு இது...
இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் தேவையான அளவே எல்லாவிதமான தனிமனித நுகர்வும் இருக்க வேண்டும். நாம் இயற்கையை அபரிமிதமாய் சுரண்டினால் விளைவுகளூக்கும் நாமே பொறுப்பு.
இது ஆரம்பம் மட்டுமே, இனியாவது விழித்தெழுவோம் இல்லையெனில் ஓரு சொட்டு தண்ணீரும் இல்லாமல்... முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
பச்சபுள்ள மன்னாரு: "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
Question கோயிந்து: இந்த கட்டுரைக்கு கோகோ கோலாவினை இழுத்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
பச்சபுள்ள மன்னாரு: "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
Question கோயிந்து: இந்த கட்டுரைக்கு கோகோ கோலாவினை இழுத்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
ஆம் கோகோ கோலா குடிப்பது எங்கள் பிறப்புரிமை, எப்படி எனில்.
கோலாவும் கருப்பு,
தமிழனும் கருப்பு,
கோலாவை பருகிப் பார்த்தால் தெரியும் அதன் தித்திப்பு,
தமிழனோடு பழகிப் பார்த்தால் தெரியும் அவனது தித்திப்பு,
கோலா தேவையெனில் அது கொடும் விஷமாக மாறும்,
தமிழனை முறைத்துக் கொண்டால் அவன் கொடும் வாளாய் மாறுவான்,
ஆக
கோலா குடிப்பது எங்களது பிறப்புரிமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக