செவ்வாய், 21 மே, 2013

​கணினியே தெரியாதவர்களும் கலக்கலாம் வாருங்கள் விளையாடுவோம். - பகுதி 001

நண்பர் திரு.சுபதனபாலன் அவர்கள் எக்செல் அப்ளிகெஷன் பற்றிய தொடர் எழுதுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். அன்னார் அவர்கள் பிரிண்டிங் மிடியாவில் அதிகம் எழுதியுள்ளார். பிளாக்கில் அவர் தொடர் எழுதுவது இதுவே முதல் முறை, அவருக்கு வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம். வழக்கம்போல் உங்களது ஆதரவையும் கருத்துக்களையும்  தெரிவியுங்கள்.


கணினியே தெரியாதவர்களும் கலக்கலாம்
வாருங்கள் விளையாடுவோம்...பகுதி 001:

உங்களிடம் சில எண்களைக் கொடுக்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சின்ன வேலைதான்.
எந்த எண் சிறியது?
எந்த எண் பெரியது?
எல்லாவற்றையும் கூட்டினால் எவ்வளவு வரும்?
இந்த எண்களின் சராசரி என்ன?
கொடுக்கப்பட்ட எண்கள் மொத்தம் எத்தனை? எண்ணிச் சொல்ல வேண்டும்.
ஆரம்பிக்கலாமா?
இந்தாருங்கள் எண்களின் வரிசை

15
24
65
47
95
34
25

இப்போது உங்கள் விடையைச் சொல்லுங்கள்.
எந்த எண் சிறியது? 15
எந்த எண் பெரியது? 95
எல்லாவற்றையும் கூட்டினால் எவ்வளவு வரும்? 305
இந்த எண்களின் சராசரி என்ன? 43.57
கொடுக்கப்பட்ட எண்கள் மொத்தம் எத்தனை? 7
இந்தக் கணக்குகளை எல்லாம் எப்படிப் போட்ட்டீர்கள்?
மனக் கணக்கா? காகித்தில் எழுதியா? கணக்கி (கால்குலேட்டர்) வைத்தா?
இந்த வேலைகள் எல்லாவற்றையும் கணினியில் எளிதில் முடித்துவிடலாம்.

எக்ஸெல் அப்புறம் எதற்கு இருக்கிறது என்கிறீர்கள்?
எக்ஸெல் பற்றித் தெரிந்தவர்களுக்கே கூடச் சில நுணுக்கங்கள் தெரிந்திருக்காது. எக்ஸெல்லா..அப்படி என்றால்?  கிலோ என்ன விலை என்று கேட்கிறவர்களுமே கூட எளிதாக விளையாடலாம். கொஞ்ச நாள் போனதும் புகுந்து விளையாடலாம். அவற்றை விளையாட்டுப் போல் கற்றுக் கொடுக்கப் போகிறோம். அதில் உங்களை வித்தகர் ஆக்கப் போகிறோம். சரிதானா? வாருங்கள் .கற்றுக் கொள்ளுங்கள். எந்தக் கஷ்டமும் இருக்காது.
இப்போதைக்கு எக்ஸெல் என்பது கட்டம், கட்டமாக உள்ள ஒரு பட்டியல் என்ற அளவில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கணினியில் பார்ப்பதற்கு அது அப்படித்தான் இருக்கும். ( இணையம் பார்க்கத் தெரிந்த உங்களுக்கு எக்ஸெல் தெரியாமலா இருக்கும்? என்றாலும் இதில் நீங்கள் கற்றுக் கொள்ளப் போகும் நுட்பங்கள் உங்களை எக்ஸெல் பண்ண வைக்கும்)

எக்ஸெல்லின் மாதிரித்தாள் ஒன்று உங்களுக்கு இங்கே தரப்பட்டுள்ளது.

உங்களுக்கு அளிக்கப்பட்ட எண்கள் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தீர்களா?
இப்போது உங்களிடம்
ஆயிரக்கணக்கான எண்களைக் கொடுக்கிறோம். கேள்விகள் அதேதான்.
எந்த எண் சிறியது?
எந்த எண் பெரியது?
எல்லாவற்றையும் கூட்டினால் எவ்வளவு வரும்?
இந்த எண்களின் சராசரி என்ன?
கொடுக்கப்பட்ட எண்கள் மொத்தம் எத்தனை?

உங்களால் சொல்ல முடியுமா?

நன்றி - சுபதனபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக