புதன், 15 மே, 2013

விலைவாசி குறையுதாம் ? நம்புகிறீர்களா



​​யாம் சொல்லவில்லை நண்பர்களே, இந்திய அரசாங்கத்தின் மொத்த விலை குறீயிட்டு எண் (WPI - Wholesale price index) சொல்கிறது.  அ​ங்கன பயபுள்ளை கடுப்புல கல்லை தூக்குறது எம்ம கண்ணுக்கு படுது அதனால நான் இப்பால அப்பிட்டு:

​நீங்க நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க ஹிஹி அதுக்காக வன்முறை கூடாது.. டூமச்


கீழேயுள்ள படம் மொத்தவிலை குறீயிட்டு எண் புள்ளிவிவரப்படம்:



​நவம்பர் 2009க்கு பின்னே இப்போதுதான் இந்த விலை குறீயிட்டு எண் 5 சதவீதத்க்கு கீழே செல்கிறதாம். 

​பெட்ரோல் விலை லிட்டருக்கு  70ரூக்கும் கீழே வந்துவிட்டது. ஓர் பவுன் தங்கம் விலை 20000ரூ சொச்சமாகத்தான் உள்ளது.  ஆனா தக்காளி வெங்காயம் விலையெல்லாம் அப்படியேதான் இருக்காறாப்ல தோனுது. இனிமேல் யாரையும் திட்டுவதாக இருந்தால் கூட தக்காளி, வெங்காயம்னு திட்டக்கூடாது பாஸ்.

கீழேயுள்ள இரண்டு படங்கள் சில்லறை விலை குறீயிட்டு எண் புள்ளிவிவரப்படம்:




இ​தன் காரணமாக ரிசர்வ் வங்கி வரும் மாதத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அது வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும், வங்கியில் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த வட்டியை அளிக்கும் வகையில் இருக்கலாம் என நம்பபடுகிறது.

இந்த விலை குறீயிட்டு எண் கணக்கீட்டிற்கு பின்னே பெரிய கணக்கு உள்ளது, அதை பற்றி பிறிதொரு நாளில் விரிவாக அலசுவோம். இப்போது நடைமுறையில் உள்ள கணக்கிட்டின் மேலே எமக்கு பெரிதும் நம்பிக்கை இல்லை, இது முற்றிலும் சரியான நடைமுறையில் அலசும் விலை குறீயிட்டு எண் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக