எத்தனை எண்கள்
கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிக் கவலையே பட வேண்டாம்.. எக்ஸெல் பத்தியில்
(Column)எத்தனை எண்கள்
இருந்தாலும் சரி உங்கள் சுட்டியை(cursor) முதல் கட்டத்தில் கொண்டு போய் நிறுத்துங்கள். இப்போது Alt+End+DownArrow ஆகிய மூன்று
விசைகளையும் ஒருசேர அழுத்துங்கள். இனி விரிதாளின் (Spreadsheet)கீழ் விளிம்பைக் கவனியுங்கள்.
உங்களுக்குத்
தேவைப்பட்ட அத்தனை விவரங்களும் நொடியில் கிடைத்துவிட்டன பார்த்தீர்களா?
சராசரி என்ன?
எத்தனை எண்கள் இடம்
பெற்றிருக்கின்றன?
எண்களாகவே இடம்
பெற்றுள்ள சிற்றறைகளின் எண்ணிக்கை எத்தனை?
மிகச் சிறிய எண்
எது?
மிகப் பெரிய எண்
எது?
கூட்டுத் தொகை
எவ்வளவு?
இத்தனைக்கும்
பதில்களைப் பெற்றுவிட்டீர்கள்.
இப்போது > பத்தியில் இன்னும் சில எண்களைச் சேருங்கள்.
அவை
258
14
27
36
84
25
3
158
என்று இருப்பதாக
வைத்துக் கொள்வோம். திரையில் அவற்றை நீங்கள் ஒவ்வொரு முறை சேர்க்கும் போதும்
சராசரி என்ன?
எத்தனை எண்கள் இடம்
பெற்றிருக்கின்றன?
எண்களாகவே இடம்
பெற்றுள்ள சிற்றறைகளின் எண்ணிக்கை எத்தனை?
மிகச் சிறிய எண்
எது?
மிகப் பெரிய எண்
எது?
கூட்டுத் தொகை
எவ்வளவு?
என்பது போன்ற
கேள்விகளுக்கு விடை கிடைத்துக் கொண்டே இருக்கும். வட்டமிட்டுக் காட்டி இருக்கும்
விடைகளைக் கவனியுங்கள். பட்டியல் எவ்வளவு
நீளமாகப் போனாலும் கவலை இல்லை.
ஒவ்வொரு முறையும்
நீங்களே கணக்கிட்டுக் கொண்டிருக்க வேண்டிய வேலை இல்லை.
எப்படிப்
பயன்படுத்தலாம்?
இதெல்லாம்
இருக்கட்டும்.. எனக்கு இது எப்படிப் பயன்படும் என்று கேட்கிறீர்களா?
நீங்கள் பள்ளியில்
படித்துக் கொண்டு இருப்பவராய் இருக்கலாம். உங்கள் ஆசிரியை இருபது எண்களைக்
கொடுத்து அவற்றுள் எது சிறியது எது பெரியது என்று
கண்டுபிடித்து வரச் சொல்லலாம். ( ஆரம்ப வகுப்புகளில் இது பெரிய தலைவலியாக
இருக்கும் இல்லையா?)
நீங்கள் பொறுப்பான
அம்மா அல்லது அப்பாவாக இருந்து உங்கள் குழந்தைகளுக்கு வீட்டுப் பாடங்களைச்
செய்வதில் உதவ நினைக்கலாம்.
கடைக்குப் போய் பல
பொருட்களை வாங்கி வந்திருப்பீர்கள். அதிக விலை எது?
குறைந்த விலைக்கு
வாங்கிய அளவு எது?
மொத்தம் எவ்வளவு
ஆகி இருக்கிறது? கணக்கு எழுத
விவரங்கள் தேவைப்படும் இல்லையா?
நீங்கள் அலுவலகத்தில் பல எண்களைக் கூட்டிப் போடவும்
சராசரி கணக்கிடவும் வேலை வரலாம்.
இன்னுமா காகிதமும்
பேனாவும் தேடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?
சட்டென்று விடை
சொல்லலாம்.
உங்கள் ஆசிரியை
வியந்து போவார்.
உங்கள் குழந்தைகள்
மகிழ்ச்சி அடைவார்கள்.
உங்கள் மேலதிகாரி
ஆச்சரியத்தில் மூழ்குவார்.
உங்கள் பணித் திறன்
பல மடங்கு உயரும்.
ஆகவே நீங்கள் யாராக
இருந்தாலும்
பாராட்டப்படுவீர்கள்.
உங்களுடன்
படிப்பவர்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்?
யாருக்கு அதிக
மதிப்பெண் கிடைத்திருக்கிறது?
யாருக்கு மிகக்
குறைந்த மதிப்பெண்?
சராசரி எவ்வளவு?
தெரிந்து கொள்ள
விருப்பமா?
நீங்களே வகுப்பு
ஆசிரியையாக இருந்து இதே மாதிரியான விவரங்களைத் திரட்ட வேண்டி இருக்கிறதா?
உங்கள் வகுப்பில்
எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை.
எப்படிச் செய்யலாம்
என்று யோசித்து வையுங்கள்.
முந்தைய பகுதிகள்:
பகுதி 1 - http://kurinjinet.blogspot.in/2013/05/001.html


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக