ஞாயிறு, 26 மே, 2013

காவலுக்கு கெட்டிக்காரன்



ஓ​ரு ஜனாதிபதி வணக்கங்களை திருப்பி தராமல் இருப்பதில்லை அ​து அவரது பாதுகாவலர்களாக இருந்தாலும் கூட,  அவர் யார் என யோசிக்கிறீர்களா, கண்டிப்பாக இந்திய ஜனாதிபதி அல்ல, அப்ப அ​வர் நம்ம அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா

இந்த ABC News வீடியோவை பாருங்கள்  ஜனாதிபதி ஒபாமா மறந்து போய் விமானம் ஏறியிருந்தாலும் கூட தனது தவறை உணர்ந்து பின்னர் கீழே இறங்கி தனது பாதுகாவலரிடம் கை உலுக்கி விடைபெறுகிறார். இதை இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதிகளும் செய்வதில்லை,ஏன் அவர்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை.




கடந்த வருடம் நான் என் சொந்த ஊரில் இருந்த பொழுது பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்குஆளுநர் அவர்கள் காலை 11 மணிக்கு வருவதாக இருந்தார், அதுவும் அதற்கு முதல் நாள் முதலே பேய் மழை கொட்டிதீர்த்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 6 மணி முதலே ஆண் மற்றும் பெண் காவலர்கள் பத்தடிக்கு ஓருவர் நின்றிருந்தனர், பெண்காவலர்கள் கூட கொடும் மழையிலும் குடை பிடித்தவாறே நின்றனர்.  எனக்கோ கடும் எரிச்சல் ஏன்  இந்த ஆளுநருக்கு இவ்வளவு டாம்பீகம், படோடோபம் என, ஆயினும் நான் என்ன கிருஷ்ண பரமாத்மாவா கோவர்த்தன மழையை பிடுங்கி நகர் முழுவதற்கும் குடை பிடிக்க, ஆக என் எரிச்சலை எச்சில் விழுங்குவது போல் விழுங்கி கொண்டேன்.

​தமிழகத்தில் அவரை நக்சலைட்கள் அல்லது வேறு ஏதாவது தீவிரவாதிகள் குறி வைக்கப்போறார்களா என்ன ஆயினும் அன்று சுமார் 500 முதல் 1000 காவலர்கள் மழையில் நனைந்தவாறே சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தங்கள் பணியை செவ்வன பார்த்தனர்.  ஆளுநர் அவர்கள் அந்த காவலர்களின் கஷ்டத்தை அதை ஓரு நிமிடமாவது சிந்தித்து பார்த்திருப்பாரா. ம்ம் அப்படிலாம் நடந்துட்டா நம்ம ஊர் எங்கேயோ போயிடும்ன. 


அவர்கள் பணியின் போது பக்குவமில்லாமல் மரியாதை குறைவாக நடந்து கொள்கின்றனர் என்பது பொதுவாக அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, ஆனால் நாம் யாராவது சிந்தித்து பார்த்திருப்போமா, அவர்கள் எப்பொழுது வீடு வருகிறார்கள், தூங்குகிறார்கள் என்று? 24 மணி நேரமும் அதிகாரப்பூர்வமாகவும் சட்டபூர்வமாகவும் வேளை செய்யும் ஓரே இனம் இந்தியாவில் காவலர் இனம்தான்.ஓ​ரு நாள் ஒய்வு இல்லாட்டியே நாமல்லாம் சுருண்டு விடுவோம் ஆனால் அவர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.

ஓ​ரு நிலையத்தில் 10 காவலர்கள் இருந்தால் ரைட்டர் மற்றும் மற்றுமொரு காவலாளியை நிலையத்தில் வைத்துவிட்டு மற்ற எட்டு பேரும் 4 குழுக்களாக பிரிந்து இரவு ரோந்து பணியினை ஆரம்பிப்பர், இரவு ரோந்து பணியின் போது சுமார் 5 கிமீ தூரம் தினமும் நடப்பர், அதுவும் இரவு 11 மணிக்கு மேலே நடக்க ஆரம்பித்து 1 மணிக்கு மேலே எங்காவது பொது இடத்தில் வைத்து சற்று இளைப்பாறுவர், எத்தனையோ பாலத்தின் விளிம்பு சுவரில், பிள்ளையார் கோவில் அரச மரத்தடியில் என நீங்கள் கற்பனையில் எட்டாத இடங்களில் ஆம் நண்பர்களே தங்கள் கைளையே தலையணாக்கி இளைப்பாறுவர். மீண்டும் காலை 4 அல்லது 5 மணிக்கு காவல் நிலையம் நோக்கி திரும்ப ஜீப் நிலையத்தில் சும்மா இருந்தால் அழைத்து செல்ல வரும் இல்லாவிடில் மீண்டும் நடராசாதான்.

இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்கிறீங்களா அவங்களோடு பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்னு கொஞ்சகாலம் சுற்றிய அனுபவம் உண்டு. காவலர்களின் மீது ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்தியாவில் காவலர்களின் பணி மிகவும் கடுமையானதும் கூட, காவலர்களிடையே நல்லவர்களும் இருக்கின்றனர்.  அது பற்றி வேறொரு பதிவில் விரிவாக அலசுவோம்.

மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள்:

​சட்டீஸ்கரில் காங்கிரஸ் தலைவரை நக்சலைட்கள் கொன்றுவிட்டதாக தகவல், நக்சலைட்களும் இந்தியர்களே, அவர்களது போராட்டங்கள் நமது அரசாங்கத்தினை எதிர்த்து என்றால் அவர்களின் குரலில் இருக்கும் நியாயத்தினையும் அரசாங்கம் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்தியாவின் பெரும் ஏழையாம் அம்பானிக்கு 5ரூ நட்டம் என்றால் நடுவன் அரசு அலறி அடித்து  பெட்ரோல் காஸ் விலையை  உடனே ஏற்றுகிறது. ஆனால் பழங்குடியனரை நக்சலைட்கள் என முத்திரை குத்தி காலம் காலமாய் அவர்கள் அனுபவித்த நிலத்தினையும் வளத்தினையும் பெரும் பெருச்சாளிகளிடம் குத்தகைக்கு விடுகின்றனர். மக்களிடம் இருந்து ஆளுவோர் எவ்வளவு தூரம் விலகுகின்றனறோ அவ்வளவு தூரம் பிரச்சனை ஆளுவோருக்கே......

ஓ​ருமுறை காமராசர் அவர்கள் குற்றாலத்தில் குளிக்க போகும் பொழுது காவலர்கள் அய்யா மட்டும் தனியே குளிக்க தடுப்பு போட்டு ஏற்பாடு செய்திருந்தனர், அதனால் அருவியின் மற்ற பகுதிகளில் கடும் நெருக்கடி.ஆனால் அங்கு வந்து பார்த்த காமராசர் அவர்களோ மக்களோடு மக்களாக நின்று குளித்தால்தான் எனக்கும் திருப்தி ஆக அவர்களிடம் இருந்து என்னை பிரிக்கும் வேலையெல்லாம் வேண்டாம் என சொல்லி தடுப்புகளை எடுக்கு சொல்லி மக்களோடு குளித்தார். அதனால்தான் இன்றளவும் அவர் மக்களின் தலைவராக இருக்கிறார்.

Question கோயிந்து : யோவ் கட்டுரை எழுதும்பொழுது மகாமக குளத்தினையும், செம்மொழி மாநாட்டினையும் பத்தி மறந்துட்டியா..

​பச்சபுள்ள மன்னாரு: ஸ்ஸ் அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம் 

குறிஞ்சி: யாம் மறக்கவில்லை ஆனால் அவர்கள் அதற்கான அறுவடையை அடுத்த தேர்தலில் அறுத்ததாக நினைக்கின்றேன் ஆகவேதான் அது பற்றி பதிவிடவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக