வியாழன், 23 மே, 2013

டிராகன் புலியை வளைக்கிறதா?

டிராகன் வளைக்கிறதா?

​நம் நண்பர்களுக்கு ஏற்கனெவே சந்தேகம் வந்திருக்கும், அது உண்மைதான். ஏன் பங்காளி பயபுள்ள அதான் நம்ம சீன பிரெசிடெண்டு "லீ கேக்குயான்ங்" நம்ம மன்மோகன்ஜீயுடன் வந்து கைகுலுக்கி பல் இளித்து இந்தியாவும் சீனாவும் பக்கத்து நாடுகள், நம்மிடையே ஓற்றுமை முக்கியம் என "தூரத்திலிருக்கும் நெருங்கிய உறவினரை விட பக்கத்து வீட்டிலிருக்கும் அண்டை வீட்டுக்காரர் தொடர்பு ரொம்ப முக்கியம்" என்று சீன பழமொழியை உதிர்த்து விருந்துண்டு சென்றார், சும்மாவா சென்றார் 100பில்லியன் வணிக ஓப்பந்தத்தை பெற்றுச் சென்றார். 



குட்டி ஜப்பான் (சிவகாசி), டாலர் நகரம் (திருப்பூர்) எல்லாம் இனி மெல்ல மெல்ல நிறம் மாறத் தொடங்கும்.. எப்படியா? நம்ம பயபுள்ளங்கல்லாம் சும்மாவெ சீன பொருளைத்தான் பயன்படுத்துறானுவ இனி அது தறிக்கெட்டு பாயும்.. இதுவும் மன்மோகனின் 9 வருட ஆட்சியின் மகுடம்!...

​சீனா புத்திசாலித்தனமாக நம்மை பயன்படுத்துகிறது என்பதை பின்வரும் புள்ளிவிவரப் படத்தின் மூலம் அறிந்து கொள்ளலாமே. ​2007ல் ஓரு டங்காக இருந்த சீன ஏற்றுமதி தற்போது மூன்று மடங்காக ஏறியிருக்கிறது.  




​பச்சபுள்ள மன்னாரு: அது சரி நாமே என்ன பண்ணலாம் இதை தடுக்க??

​Question கோயிந்து: நம்ம அரசாங்கத்தை விட்டுவிடு அ​து எப்போதும் குடிமகனின் குரலை கேட்காது ஆனா நாம சொன்னா நம்ம மக்கா(திருநெல்வேலி பாஷையில்  தோழன் என்று அர்த்தம்)  கூட கேட்க மாட்டானுவ, சரி விடு, ஓரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சீன அரசாங்கம் மொத்த இந்தியாவும் எங்களது என்று உரிமை கொண்டாடுவர், நாமெல்லாம் அப்பொ சீன குடிமக்களாகிவிடுவோம் ஆக எல்லாம் நம்ம அரசாங்கம்தான்.  ஹிஹி "யாதும் ஊரே யாவரும் கேளீர்". நாங்களும் பழமொழி சொல்லுவோம்லா...

குறிஞ்சி: உண்மையில் நம்முடைய தயவு சீனாவுக்குத்தான் தேவை, ஆமா இவ்வளவு பெரிய சந்தையை விட்டு விட அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா, ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எல்லை கடந்து வந்த சீனர்களிடம் நமது அரசாங்கம் மண்டி போட்டு மன்றாடி பின் வாங்க செய்தது, இதுவே இந்திராகாந்தியாக இருந்தால் சீனாவின் குரவளையத்தினை பிடித்திருப்பார்.. ம்ம் அதெல்லாம் ஓரு காலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக