கார்களுக்கு மிக முக்கியமாக கருதப்படும் பிரேக் மற்றும் இன்ஜின் பகுதிகளை போன்றே மிக முக்கியமானதுடயர். டயர்களின் வகைகளும் அதன் பராமரிப்பும் அறிந்து கொள்வது அவசியம். டயர்கள் சரியாக இருந்தால்தான் சாலையில் பயணம் சுகமாக இருக்கும். அதுவும் இத்தகைய டயர் சில கார்களுக்கு ஏற்றவாறு தனித்தன்மையுடன் உள்ளன. அவை பயன்படுத்தும்போது தான் கார்கள் சிறந்த பயணத்தை தரும்.
டயர்களின் பிரிவுகள்
டயர்கள் பொதுவாக அதில் உள்ள பள்ள மேடுகளின் திறனுக்கேற்ப பிரிக்கப்படுகின்றன. டயர்களிலுள்ள இந்த பள்ளக்கோடுகள் தான் சாலையோடு தொடர்பு கொண்டவை. இவையே சாலையோடு நல்ல பிடிப்பையும் டயரின் திறனையும் வெளிப்படுத்துகின்றன. டயர்களில் ஓடும் கோடுகளின் பிளவு சுமார் 2 மிமி என்ற அளவு தான் இருக்க வேண்டும். இந்த பிளவுகள் அதிகமானால் அல்லது தேய்ந்து போனால் டயரை மாற்றி விடுவது நல்லது பல்வேறு வகையான டயர்கள் அதிலுள்ள ஓடும் கோடுகளின் தன்மைகேற்ப வகைப்படுத்தப்படுகின்றன.
அனைத்து காலத்திற்கு ஏற்ற பொதுவான டயர் வகை
அனைத்து கார் ஓட்டுனர்களுக்கு பிடித்தமானது ஸ்டாண்டர்டு வகை டயர்கள் தான். அது போல் கார் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒதுக்கும் டயர் வகைகளையே பயன்படுத்தி வருகின்றனர். டயர்களின் மேற்புறத்தில் உள்ள பள்ளங்கள் தான் சாலையின் பிடிப்பிற்கும் பல்வேறு வானிலை மாறுபட்ட தன்மையிலும் சிறப்பாக இயங்கக் கூடிய வகையில் உள்ளன. பெதுவான ஸ்டாண்டர்டு வகை டயர்கள் தான் அனைத்து கார்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அடர்த்தியான கருப்பு நிற டயர்கள்
எஸ்.சு.வி. வகை கார்களில் பயன்படுத்துவதற்கென சிறப்பு வகையாக "திக் பிளாக்' என்ற அடர்த்தியான கருப்பு மாதிரி டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது டயர் மேற்பரப்பு பெரிய அளவிலான ரப்பர் பிதுர்டு தொகுதிகள் கொண்டவாறு உள்ளதால் மணல் மற்றும் சேறுகளில் நன்றாக பயணிக்கும் தன்மை ஏற்படுத்தும். பக்கவாட்டில் உயரம் அதிகமாக உள்ளதால் நேராக பயணிக்கவும், வளைந்து ஓட்டும் போது சிறப்பாக செயல்படும். சாலை திறனுக்கு ஏற்ப சிறப்பாக செயல்பட இத்தகைய டயர்கள் உதவுகின்றன.
உயர் செயல் திறன் டயர்கள்
மிக வேகமாக செலுத்தக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார்களில் உயர் செயல்திறன் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிவேகத்தில் சிறந்த பிடிப்பும் வளைவுகளில் சிறந்த பிடிப்பும் உள்ளதாக இந்த டயர்கள் உள்ளன. இதன் பக்கவாட்டு உயரம் குறைவு. இது மென்மையான ரப்பரால் தயாரிக்கப்படுவன.
டயர்களின் பராமரிப்பு முறைகள்: பொதுவாக கார்கள் அடிக்கடி பராமரிப்பதன் மூலமே சிறந்த பயணத்தை தரும். டயர் நல்ல முறையில் இருந்தால் கார் பயணம் சிறப்பாக இருக்கும். எரிபொருள் இழப்பு மற்றும் தேவையற்ற விபத்தை தவிர்க்கலாம். எனவே டயர்களை குறிப்பிட்ட கால இடைவெளியோடு கவனித்து பராமரிப்பது அவசியம்.
வாரத்திற்கு ஒரு முறை கவனிக்க வேண்டும்
அநேக கார்கள் அதிகமாக செலவழிக்க கூடிய டயர்களில்தான் இயங்குகின்றன. அதன் சுழற்சி கார் பிரேக் மற்றும் இயக்குதலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கு டயர்களில் காற்று சரியான அளவு நிரம்பி இருக்க வேண்டும். எனவே வாரம் ஒரு முறை சரியான அளவு காற்று நிரப்ப வேண்டும்.
மாதம் ஒருமுறை கவனிக்க வேண்டியவை:
காரின் டயர்களை மாதம் ஒரு முறை நன்றாக கவனித்துப்பார்க்க வேண்டும். அதன் மேற்பரப்பு பள்ளங்களில் வெடிப்பு, அதிக தேய்மானம் போன்றவை உள்ளதா என்று பார்ப்பது அவசியம். அதிக தேய்மானம் மற்றும் டுயர் மேற்பரப்பின் சீரற்ற தன்மை காரணமாக சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டியரிங் பகுதிகளில் பாதிப்பு உண்டாகும். அதனை உடனே கவனித்தால் தான் தீர்க்க முடியும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை கவனிப்பு
ஆறு மாதத்திற்கு ஒரு முறை வீல் பேலன்சிங், அலையன் மெண்ட், ரொட்டேஷன் போன்றவைகளை கணினி அலையன்மெண்ட் மூலம் சரி பார்ப்பது அவசியம். டயர்கள் கவனித்தல் மூலமே சிறந்த பலனை பெற முடியும்.

நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக