ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

ஒத்துழைப்பு மற்றும் நட்பிற்கான பாரதத்தின் ஆரோக்கியத்திற்கான முன்முயற்சி: BHISHM

கோவிட் போன்ற பேரிடர் காலங்களில் தேவைப்படும் இடங்களில் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கினில் இந்திய அரசினரால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரி முயற்சி ஆகும் இந்த திட்டம்.

இதன் மூலம் புயல், வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, சுனாமி, போர், மற்றும் தொற்று நோய் காலங்களில் அடிப்படை மருத்துவ தேவைகளை குறிப்பிட்ட இடங்களில் உடனடியாக ஏற்படுத்துவது என்பது கடினம்.

இந்த முன்மாதிரி திட்டம் அந்த சவாலான தேவைகளைப் பூர்த்தி செய்து விலை மதிப்புடன் கூடிய மனித உயிர்களை காக்கும் வண்ணம் செயற்படுகின்றது.






இந்த பிஷ்மம் கனசதுரமானது 32 சிறிய கனசதுரங்களை இதனுள் உள்ளடக்கியதுபேரிடர்காலங்களில் பொன்னான நேரம் என்றழைக்கப்படும் முதல் சில மணித்துளிகளில் தேவைப்படும் முதலுதவியை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுப்பதை எளிதாக்குகிறது. 200பேர் வரை முதலுதவி வசதிகளை பெற்றுக்கொள்ளும் வண்ணம் இந்த கனசதுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தனிப்பட்ட நபர்களினால் இந்த 32 கனசதுரங்கள் தனித்தனியாகத் தூக்கிச் செல்லும் வண்ணம்எளிதில் தேவைப்படும் இடங்களில் இயக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதுபெட்டிகளில் உள்ள மருத்துவ உபகரணங்களின் விவரம் எளிதில் கண்டடையும் வண்ணம் செயலிகளிலிருந்து தெரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது

 இந்திய அரசிற்கு பாராட்டுகளும், HLL காட்சி தொகுப்புக்கு நன்றிகளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக