ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

மத்தியரசின் வருவாய் பங்கீடு - ஒர் பார்வை

இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு மத்திய அரசு தனது வருவாயான வருமான வரி, கலால் வரி, இரயில்வே வருமானம் என பல்வேறு வரி வருவாய்களை மாநில அரசினரோடு பங்கீட்டுக் கொள்வதற்காக நிதி ஆணையம் பரிந்துரைகளை மேற்கொள்கின்றது. 

முதல் சில ஆணையங்கள் தனித்தனியாக வரி வருவாய பங்கீடுகளை கணக்கீட்டு வெளியிட்டது(வருமானவரி, கலால் வரி...) , ஆனால் பிந்தைய ஆணையங்களானது அனைத்து வருமானத்தினையும் உள்ளடக்கிய பிறகு வருவாய் சதவீதங்களை பரிந்துரைத்தது.

*  நிதி ஆணையத்தின் தலைவர் பதவி மத்திய கேபினட் அமைச்சருக்கு ஈடான பதவியாகும். 

 * 2014ல் நிதி ஆணையம் என்பது கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற முறை கொண்டு வரப்பட்டது.

எளிய புரிதலுக்காக முதலாவது நிதி ஆணைய பரிந்துரை சதவீதத்திலிருந்து 15வது ஆணைய பரிந்துரை சதவீதம் வரை மாநிலங்கள் வாரியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் நிதி ஆணைய வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

புதிதாக தோற்றுவித்த மாநிலங்களுக்கு முந்தைய நிதி ஆணைய பரிந்துரையானது இடைவெளி விட்டு இருக்கும், எந்த எண்ணும் இருக்காது. 12வது நிதி ஆணைய தகவல்களை எல்லா மாநிலங்களுக்கும் சரிபார்க்க முடியவில்லை ஆதலால் அந்த 12வது பரிந்துரையில் சில மாநிலங்கள் விடுபட்டு இருக்கும்.



தமிழ்நாட்டின் பங்காக பல்வேறு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இதுவரையில் மத்திய அரசிடமிருந்து பெற்றது.


1வது நிதி ஆணைய பரிந்துரையிலிருந்து 2வது ஆணைய பரிந்துரையிலிருக்கும் வித்தியாசமானது, மாநில எல்லையானது பிரிக்கப்பட்டு தற்போதைய தமிழ்நாட்டின் வடிவத்திற்கு வந்தமையால் என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது.

9வது குழுவிலிருந்து (7.931%) 10வது குழு (6.637%) வெகுவாக குறைந்துள்ளது,

10வது குழுவிலிருந்து (6.637%) 11வது குழு (5.385%) வரை குறைந்தது,

12வது குழுவிலிருந்து (5.31%) 13வது குழு (4.969%) வரை குறைந்தது,

13வது குழுவிலிருந்து (4.969%) 14வது குழு (4.023%) வரை குறைந்தது.

இதற்கு அரசியல் காரணமின்றி அந்தந்த காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தோர் பொது மக்களுக்கு விளக்கம் கூறுவாரா என்று பார்ப்போம்.



அரசியல் கட்சிகள் விளக்கம் கூறுகின்றதோ இல்லையோ, இறைவனின் சித்தமிருந்தால் குறிஞ்சியானது அனைத்து ஆணையங்களின் பரிந்துரைகள் எவ்வாறு கணக்கீடப்பட்டது என்பதனை பின்பு விரிவாகப் பதிவிடும். 

Source: https://fincomindia.nic.in/commission-reports

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக