"" அங்குல்லியா மசூதி (ஆங்: Angullia Mosque)"" சிங்கப்பூரிலுள்ள ஒர் புராதானமான மசூதி ஆகும், சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள 130 ஆண்டுகள் பழமையான மசூதி ஆகும். இது சிராங்கூன் சாலையின் மீது அமைந்துள்ளது. இந்த மசூதி 23 ஏப்ரல் 1890 அன்று வாங்கப்பட்ட நிலத்தில் 1892ஆண்டு வாக்கினில் கட்டப்பட்டது. இன்றைய முன்பக்க தோரணவாயில் மட்டுமே முதன்முதலாக கட்டப்பட்டதிலிருந்து பழமையானதாக இருக்கின்றது. மற்ற மசூதி வளாகம் 1970ல் புதுப்பிக்கப்பட்டது, தற்போது 2020ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
வரலாறு
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான குஜராத்திலிருந்து அங்குல்லியா மேலும் அங்கடியாசு என்றறியப்படும் சன்னிப்பிரிவு முசுலீம் பிரிவைச் சார்ந்த வணிகர்களூள் ஒருவரான இப்ராம்ஜி முகமது சல்லா அங்குல்லியா வணிக நோக்கத்திற்காக சிங்கப்பூரிற்கு வருகை புரிந்தார்.
அவரது பேரன் முகமது சல்லா இசூப்ஜீ அங்குல்லியா(MSE), சிங்கப்பூர் மூலம் இப்பகுதியிலுள்ள மற்ற நாடுகளூடன் மரம், மசாலா பொருட்கள், சர்க்கரை போன்றவற்றில் வியாபாரம் செய்ததன் மூலம் பெரும் செல்வத்தினை ஈட்டினார். 1900களில் உள்ளூர் இந்திய முசுலீம் மக்கள் தொடர்புகளீல் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார்.
அங்குல்லியா குடும்பத்தினர் முதன் முதலாக தற்போதைய மசூதி வளாகம் இருக்கும் நிலத்தினை 23 ஏப்ரல் 1890 அன்று வாங்கினர், பிற்பாடு 1892ற்கு முன்பு அங்கு முதன்முதலாக சிறிய அளவில் மசூதி கட்டப்பட்டது.
ஆர்ச்சர் சாலை பூங்கா
ஆர்ச்சர் சாலையின் மீதுள்ள பெரிய பூங்கா வளாகம் அங்குல்லியா குழுமத்தினரால் கட்டப்பட்டது, இன்றளவும் அவர்களின் பெயரினாலே அது அழைக்கப்படுகின்றது. இப்பூங்கா வளாகத்தில் மற்றொரு அங்குல்லியா மசூதி முகமது சல்லா இசூப்ஜீ அங்குல்லியா(MSE), அவர்களின் மகன் அகமது முகமது சல்லா(AMS) அங்குல்ல்லியா அவர்களால் 1933ல் கட்டப்பட்டது. அங்குல்லியா குழுமத்தினரே சிராங்கூன் மசூதி வளாகத்தின் அறங்காவலாராக செயல்பட்டு வருகின்றனர்.
புணரமைப்பு பணி
சிராங்கூனில் புதிதாக மேம்படுத்தப்பட்ட அங்குலியா மசூதி, முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசாகோஸ் சுல்கிஃப்லியால் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2020 பிப்ரவரி 14 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைப்பு பணி தொடர்ந்து வந்தது, முன்பு 1,500 பேர் ஒரே நேரத்தில் தொழும் வசதி இருந்த நிலையில் தற்போது 2,500 பேர் தொழ இடமளிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து நிலைகளுக்கும் அணுகக்கூடிய மின்தூக்கி, பெண் வழிபாட்டாளர்களுக்கான பிரத்யேக இடம், வகுப்பறைகள் மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகியவை $ 6.3 மில்லியன் தொகையில் மேம்படுத்தும் பணிகளுக்குப் பிறகுள்ள புதிய அம்சங்களில் ஒன்றாகும்.
==சான்றுகள்==
https://www.straitstimes.com/singapore/historic-angullia-mosque-reopens-after-63m-facelift
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக