ஆந்திராவை இரண்டாகப் பிரித்தபொழுது கடும் சவால் ஆந்திராவை ஆளப்போகிறவர்களுக்கு இருந்தது, அதை ஆந்திரவாலாக்களும் உணர்ந்திருந்ததால் நாயுடுவை பெரும்பான்மையோடு தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் ஒரு நகரை எப்படி உருவாக்குவது என்பது நாயுடுவிற்கு கைவந்த கலை, முன்னரே அவரது முயற்சியில் ஹைதராபாத் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தது அதற்கு சான்று ஆகும். 90களுக்கு முன்பு ஒரு மெட்ரோபாலிட்டன் நகருக்கென எந்தத் தகுதியும் ஹைதராபாத்திற்கு கிடையாது. ஆனால் நாயுடு அவர்கள் அதனை மாற்றியமைத்தார். இன்று அது இந்தியாவின் மாபெரும் 4 நகரங்களுக்கு சவால் விடுகின்றது எனில் அதனுள் சந்திரபாபு நாயுடு அவர்களின் பங்களிப்பு பெரிது.
அதுபோன்றே அமராவதி என்ற நகரின் எழுச்சியும் இருக்குமென்பதில் ஐயமில்லை, இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமையவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாளை என்ற கிராமத்தில் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8050ஹெக்டரில் குடியிருப்புகளும், 5558ஹெக்டரில் தொழிற்பேட்டைகளும், 1654ஹெக்டரில் நீர்நிலைகளும், 3892ஹெக்டரில் சாலைகளும் அமையவிருக்கிறது. இந்த நகரம் 217 ச.கி.மீ பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 174 ச.கி.மீ பரப்பளவை விரிவாக்கத்திற்க்காக கொண்டுள்ளது. இந்த நகரம் 31 கிராமங்களையும், 2 டவுன் நகராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவிருக்கிறது. இது விவசாய நிலங்களுக்கிடையே எழுவது என்பது உறுத்தல்மிக்கதே, இருப்பினும் ஆந்திர அரசு நிலம் கொடுத்த அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய நகரமாக மாற்றியதில்தால்தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.
2050வாக்கில் இந்நகரம் 5.6மில்லியன் வேலைவாய்ப்புகளையும், 13.5மில்லியன் மக்கள்தொகையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இருப்புபாதையிருப்பிலும் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது, விஜயவாடா சந்திப்பிலிருந்துதான் டெல்லி, கொல்கத்தா பாதை பிரிகின்றது. குண்டூர் செல்லும் சாலையில் புதிய சர்வதேச விமானநிலையம் அமையவிருக்கிறது. கிருஷ்ணா நதி நீரைப் பயன்படுத்தி நீர்ச்சாலை அமைக்கவிருக்கிறார்கள். மோடியின் ஸ்மார்ட் சிட்டி கனவை நாயுடு அவர்கள் சாத்தியமாக்குவார் எனலாம். இந்தியாவிலுள்ள அனைத்து தரப்பு தொழிலதிபர்களிடமும் ஆந்திர அரசு பேசியிருப்பதாகவும், அவர்களின் எதிர்கால திட்டங்களை ஆந்திராவில் அமைக்குமாறு முதல்வர் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் பேசியிருப்பதாகவும் தகவல்கள் உலாவுகிறது... தலைநகரைச்சுற்றி 7 விதமான தொழில்முனையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்தமுறை நாயுடு அவர்கள் ஹைதராபாத்திற்க்கு வெளியே வளர்ச்சித்திட்டங்களை எடுத்துவரத் தவறியதாக குற்றச்சாட்டு உண்டு, அதனால் இந்த முறை அனைத்துப் பகுதிகளையும் விவசாயத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுக்கிறார்.
குறிஞ்சி: நண்பர்களிடம் குறிஞ்சி ஆரம்பித்த காலங்களிலிருந்தே இதனை வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்வதை பற்றிப் பேசி வருகின்றோம், ஏற்கனவே குறிஞ்சி நண்பர்கள் வெவ்வேறு தளங்களில் தங்களாலான களப்பணியை செய்துவருவதால் அதை எடுத்துசெல்வது ஒத்திப்போடப்பட்டு வந்தது. அமராவதி நகருக்கு நன்கொடை கேட்டு ஆந்திர முதல்வர் பேசிய காணொளி காண நேரிட்டது. இதிலிருந்தே களம் இறங்கலாம் என முடிவுசெய்யப்பட்டு, குறிஞ்சி ஆரம்பித்து 3வருடங்கள் ஆவதால் 30கற்களுக்கு 300ரூ கொடுக்கலாம் என தீர்மானம் செய்தோம். வருங்காலத்திலும் எங்களாலான பணியை செய்வதாக உத்தேசம்.
Qn கோயிந்து: 300ஒவாய்க்கு உலக விளம்பரமா சகோ, ம்ம்ம் நடத்துங்க... இருப்பினும் வருங்காலத்தில் அமராவதியின் எதிர்பார்க்கப்படும் 20மில்லியன் மக்கள்தொகையில் 30000முதல் 50000வரை தமிழ் பேசும் மக்கள் இருக்கலாம், அந்த வகையில் நீங்கள் தமிழர்கள் வாழப்போகும் நகரத்திற்கு முன்னோடியாக உங்கள் பங்களிப்பை வைத்திருக்கிறீர்கள் எனலாம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக